என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய ஜெர்சி"

    • உடல்நலக் குறைவு காரணமாக வினோத் காம்ப்ளி சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • டிஸ்சார்ஜ் ஆகி வெளியில் வரும் போது இந்திய ஜெர்சி அணிந்து வந்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி உடல்நலக் குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு மும்பையை அடுத்த தானேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தீவிர சிகிச்சைக்கு பிறகு வினோத் காம்ப்ளி அபாய கட்டத்தை கடந்து விட்டார் எனவும் அவர் உடனடியாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப முடியாது என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இரண்டு வார சிகிச்சைக்கு பிறகு வினோத் காம்ப்ளி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவர் டிஸ்சார்ஜ் ஆகி வெளியில் வரும் போது இந்திய ஜெர்சி அணிந்து வந்தார். மேலும் அவர் மருத்துவமனையில் கிரிக்கெட்டும் விளையாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

    ×