என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீமான்"

    • சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு மாபெரும் வெற்றி பெற நாம் தமிழர் கட்சி சார்பாக நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • மக்கள் நலக் கோரிக்கைகள் வெல்லட்டும்!

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழர் அரசியல் களத்தில் ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம் உள்ளிட்ட முதன்மைக் கொள்கைகளோடு மதுஒழிப்பு, பெண்ணுரிமை, கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் விளிம்பு நிலை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களது உரிமைகளுக்காகவும், வன்னியர் குடி உள்பட ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட அனைத்து சமூகங்களின் மேம்பாட்டுக்காகவும் தொடர்ந்து போராடி வருகிற பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம், திருவிடந்தையில் திருவள்ளுவராண்டு 2056 மேழம் (சித்திரை) 28ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (11.05.2025) நடைபெறுகிற, 21ஆவது சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு மாபெரும் வெற்றி பெற நாம் தமிழர் கட்சி சார்பாக நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழர் தாய் நிலத்தில் தமிழ்ப்பகைமை தலைத்தூக்காத வண்ணம் நல்லிணக்கத்தோடு தமிழ்ச் சமூகங்கள் தலை நிமிரவும், தமிழர் இன ஒற்றுமை தழைத்தோங்கவும் அயராது உழைக்கும் சமூகநீதிப்போராளி மருத்துவர் ஐயா ச.ராமதாஸ் அவர்களுக்கும், மருத்துவர் ஐயா அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் பாட்டாளி உறவுகளுக்கும் என்னுடைய அன்பு வணக்கமும்! வாழ்த்துகளும்!

    சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு சிறக்கட்டும்!

    மக்கள் நலக் கோரிக்கைகள் வெல்லட்டும்! என்று கூறியுள்ளார். 

    • நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
    • மக்களவை தேர்தலில் மைக் சின்னத்தை தேர்வு செய்து நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது.

    சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, 2016 சட்டமன்றத் தேர்தலில் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டி போட்டது. அதன்பிறகு வந்த 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது.

    பிறகு கடந்த மக்களவை தேர்தலில் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

    இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. எனினும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

    இதையடுத்து, தேர்தல் ஆணையம் வைத்துள்ள சின்னங்கள் பட்டியலில் இருந்து மைக் சின்னத்தை தேர்வு செய்து நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது.

    நாடாளுமன்ற தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி, மாநில கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெற்றது.

    இந்த நிலையில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

    அதன்படி, கலப்பையுடன் விவசாயி இருப்பது போன்ற சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சின்னத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள சீமான், "மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 10-05-2025 அன்று அறிவித்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்தில் சீமான் நடித்துள்ளார் .
    • சீமான் அடுத்ததாக தர்மயுத்தம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    நடிகர் மற்றும் இயக்குனர் சீமான் தற்போது முழு நேர அரசியலில் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்தில் சீமான் விவசாயியாக நடிப்பதாக தகவல் வெளியானது. மு.களஞ்சியம் சீமானை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

    இதைத்தொடர்ந்து சீமான் அடுத்ததாக தர்மயுத்தம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.

    படக்குழு வெளியிட்ட இந்த போஸ்டரில் 'தீர விசாரிப்பதே மெய்' என்ற ஹேஷ்டேக் உடன் வெளியாகியுள்ளது, சீமான், அனு சித்தாரா மற்றும் ஆர்கே சுரேஷ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆர் சுப்பிரமணியம் என்பவர் எழுதி இயக்கும் இந்த படத்தை ஆதம்பாவா மற்றும் சிவக்குமார் ஆகியோர் தயாரித்து வருகின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சூரி அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கத்தில் உருவான படம் டூரிஸ்ட் ஃபேமிலி.
    • உலகமெங்கும் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இப்படம் கடந்த 1-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார்.

    இந்த திரைப்படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்த அவர் இயக்குனர் அபிஷன் ஜீவின்ந்த்-ஐ கட்டிப்பிடித்து "சிறந்த படத்தை எடுத்து வச்சிருக்க தம்பி" எனப் பாராட்டியதுடன், ஒட்டுமொத்த படக்குழுவையும் பாராட்டியுள்ளார்.

    இலங்கையில் இருந்து அகதியாக தமிழகம் வரும் ஒரு குடும்பத்தை பற்றிய கதை டூரிஸ்ட் ஃபேமிலி ஆகும்.

    • தமிழ்நாட்டில் மட்டும் நீட் தேர்வில் இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?
    • அனிதா இறந்தவுடன் நீட்டை ஒழிப்போம், ரகசியம் வைத்துள்ளோம் என சொன்ன தி.மு.க. இதுவரை என்ன செய்துள்ளது?

    சென்னை:

    நாடு முழுவதும் நேற்று மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் மாணவர்கள் கடும் சோதனைக்குட்பட்டே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதனால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், நீட் தேர்வு நடைமுறைகள் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    * நீட் தேர்வு முறை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

    * பயிற்சி மையங்கள் சம்பாதிக்கவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

    * நீட் தேர்வை அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் நடத்தி கொண்டிருக்கிறது. நமது நாட்டினரால் நடத்த முடியாதா?

    * ஒரு மாணவனை தேர்வு செய்யும் தேர்வு நடத்த முடியாதவர்களால் நாட்டிற்கான தலைவரை எப்படி தேர்ந்தெடுக்க முடியும்?

    * நீட் தேர்வு எழுதுவதாலேயே தரமான மருத்துவர்கள் வருவார்கள் என்பது பைத்தியக்காரகத்தனமாது.

    * நீட் தேர்வால் கிராம மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறவில்லை.

    * வசதி படைத்த மாணவன் மருத்துவன் ஆகலாம், கிராமப்புறங்களில் கஷ்டப்படும் ஒரு மாணவனுக்கு மருத்துவ கனவு வரக்கூடாதா?

    * தமிழ்நாட்டில் மட்டும் நீட் தேர்வில் இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?

    * வட இந்தியாவில் புத்தகத்தை திறந்து வைத்து நீட் தேர்வு எழுதுகின்றனர், மேற்பார்வையாளர் காவலுக்கு நிற்கின்றனர்.

    * மூக்குத்தி மூலம் மாணவி எப்படி பிட் கொண்டு செல்ல முடியும்? பட்டன்கள் மூலம் மாணவர்கள் பிட் கொண்டு செல்ல முடியுமா?

    * உள்ளாடைகளை கழட்டச் சொல்வதால் ஜவுளிக்கடையில் நீட் தேர்வுக்கு ஏற்ற ஆடை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சோதனை என்ற பெயரில் வதை செய்தால் மாணவர்கள் எப்படி தேர்வெழுதும் மனநிலைக்கு வருவர்.

    * அனிதா இறந்தவுடன் நீட்டை ஒழிப்போம், ரகசியம் வைத்துள்ளோம் என சொன்ன தி.மு.க. இதுவரை என்ன செய்துள்ளது? என கேள்வி எழுப்பினார்.

    • சீமானுக்கு எதிரான புலன் விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • விசாரணையை ஜூலை 31ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் ரீதியாக ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீஸார் சீமான் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடந்த 2011-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கடந்த பிப்.17-ம் தேதி சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்தார்.

    மேலும், கருக்கலைப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதால், சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கில் 12 வார காலத்துக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென வளசரவாக்கம் போலீஸாருக்கு உத்தரவிட்டு சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

    சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி போலீஸார் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை கோரி சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

    இந்நிலையில் இன்று, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் மீதான பாலியல் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர்.

    நடிகை விவகாரத்தில் சீமானுக்கு எதிரான புலன் விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நடிகை விவகாரம்- மோசடி, வல்லுறவு புகார் வழக்கை ரத்து செய்ய கோரும் சீமானின் மேற்குறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது.

    சிமானின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க நடிகைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    மேலும், விசாரணையை ஜூலை 31ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கொலை மிரட்டல் பதிவு வெளியிட்டுள்ளதாக புகார்.
    • நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும் என பதிவிடப்பட்டது.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நேற்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

    சீமானுக்கு விடுத்த கொலை மிரட்டல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டது.

    அதில், தேனியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு வெளியிட்டுள்ளதாக புகார் எழுந்தது.

    அந்த இன்ஸ்டா ஸ்டோரி பதிவில், சீமானின் தலை விரைவில் துண்டிக்கப்படும், விரைவில் நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும் என பதிவிடப்பட்டது.

    இந்த நிலையில், சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த சந்தோஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம்.
    • விரைவில் நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும் என கொலை மிரட்டல்.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    சீமானுக்கு விடுத்த கொலை மிரட்டல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    அதில், தேனியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு வெளியிட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    அந்த இன்ஸ்டா ஸ்டோரி பதிவில், சீமானின் தலை விரைவில் துண்டிக்கப்படும், விரைவில் நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும் என பதிவிட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    • வீரபாண்டிய கட்டபொம்மனை சீமான் இழிவுபடுத்துவதை பொறுக்க முடியாது.
    • தெலுங்கர்கள் வேண்டாம் என்றால் தனது மனைவி கயல்விழியை வீட்டைவிட்டு அனுப்பிடுவாரா சீமான்?

    தெலுங்கர்கள் குறித்து தொடர்ந்து சீமான் அநாகரிகமாக பேசி வருவதாக தெலுங்கு முன்னேற்றக் கழகத்தினர் குற்றம் சாட்டி சென்னையில் போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்தில் தெலுங்கு முன்னேற்றக் கழக நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    * விடுதலைக்காக போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனை சீமான் இழிவுபடுத்துவதை பொறுக்க முடியாது.

    * சீமான் பாஞ்சாலங்குறிச்சி படம் எடுத்த போது அவருக்கு உறுதுணையாக இருந்தது நாங்கள் தான்.

    * அநாகரிகமாக பேசுவதை சீமான் நிறுத்தாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும்.

    * தெலுங்கர்கள் வேண்டாம் என்றால் தனது மனைவி கயல்விழியை வீட்டைவிட்டு அனுப்பிடுவாரா சீமான்?

    என்று தெரிவித்தார். 

    • ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சியை தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.
    • எதிர்காலத்தில் புதிய கூட்டணியை அமைத்து இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்தே போட்டியிட தயாராகி வருகிறது.

    இருப்பினும் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் சீமானை சேர்ப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பா.ஜ.க., அ.தி.மு.க. தலைவர்கள் நடத்தி வரும் இந்த ரகசிய பேச்சுவார்த்தை பலன் அளிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இதற்கிடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி பேசியுள்ளனர்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவாகியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சியை தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இதுபோன்ற சூழலில் ஓ.பன்னீர்செல்வத்தை சீமான் சந்தித்து பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. இருவரும் எதிர்காலத்தில் புதிய கூட்டணியை அமைத்து இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஓ.பன்னீர்செல்வத்துடனான இந்த சந்திப்பு பற்றி சீமானிடம் கேட்டபோது, எங்கள் இருவருக்குமிடையேயான உறவு தந்தை-மகன் உறவு போன்றது. அடிக்கடி நான் அவரை சந்திப்பது வழக்கம். அந்த அடிப்படையிலேயே தற்போதும் சந்தித்துள்ளேன். அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை என்றார்.

    • நேர்மைக்கும் உண்மைக்கும்தான் இங்கு பஞ்சம். அதனால், நான் தனித்து நிற்கின்றேன்.
    • நாங்கள் அரசியல் வியாபாரம் செய்ய வந்தவர்கள் அல்ல.

    கடலூர் மாவட்ட மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    அப்போது, செய்தியாளர்களை சந்தித்த சீமான்" சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள்.. வரும் தேர்தலில் இனி என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்" என்று கூறியுள்ளார்.

    வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும்போது பூமியை சொர்க்கமாய் மாற்றுவேன். சிவன் ஆட்டத்தைப் பார்த்திருப்பீர்கள். சீமான் ஆட்டத்தை இனி பார்ப்பீர்கள்.

    நேர்மைக்கும் உண்மைக்கும்தான் இங்கு பஞ்சம். அதனால், நான் தனித்து நிற்கின்றேன். தேர்தலில் ஏற்படும் தற்காலிக தோல்விக்காக நிரந்த வெற்றியை விடமாட்டோம். நாங்கள் அரசியல் வியாபாரம் செய்ய வந்தவர்கள் அல்ல.

    பாமக நடத்தும் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு அழைத்தால் செல்வேன். மேடையில் ஏறி பேசுவேன் நான் அங்கிருந்து வந்தவன் தான். அதனால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு கட்சி மற்றொரு கட்சியை கூட்டணிக்கு அழைப்பது இயல்பு தான்.
    • 5- வது முறையாக ஒரு கட்சி தனித்து போட்டியிடுவது என்றால் அது நாம் தமிழர் கட்சி தான்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வெற்றி, தோல்வியை தாண்டி தனித்து போட்டியிடும் கட்சி தான் நாம் தமிழர். நாங்கள் மக்களை தேடி சென்று மக்களுக்காக அரசியல் செய்கிறோம். கூட்டணி எங்கள் கொள்கை அல்ல. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பி தான். அடுத்தவர் கால்கள், தோள்களை நம்பினால் எங்கள் இலக்கின் பயணத்தை அடைய முடியாது.

    ஒரு கட்சி மற்றொரு கட்சியை கூட்டணிக்கு அழைப்பது இயல்பு தான். நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு ஒரே நிலைப்பாடு தான். தொடர்ச்சியாக 4 முறை 2 சட்டமன்ற தேர்தல், 2 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். 5- வது முறையாக ஒரு கட்சி தனித்து போட்டியிடுவது என்றால் அது நாம் தமிழர் கட்சி தான்.

    மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 117 பெண்கள், 117 ஆண்கள் போட்டியிடுவார்கள். த.வெ.க. தலைவர் விஜய் எதார்த்தமானவர். விஜய் இப்தார் நோன்பில் பங்கேற்றதில் உள் நோக்கம் கற்பிக்க வேண்டியதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×