search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கதேச கிரிக்கெட் அணி"

    • முன்னாள் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஷகிப் அல்-ஹசனுக் இடம் கிடைக்கவில்லை.
    • கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய போது ஷகிப் பந்துவீச்சு விதிமுறைக்குட்பட்டு இல்லை என கூறி ஐ.சி.சி. தடைவிதித்தது.

    9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது.

    இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம், நியூசிலாந்து அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. 19-ந் தேதி கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான வங்காளதேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் முன்னாள் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஷகிப் அல்-ஹசனுக் இடம் கிடைக்கவில்லை.

    கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய போது அவரது பந்துவீச்சு விதிமுறைக்குட்பட்டு இல்லை என கூறி ஐ.சி.சி. தடைவிதித்தது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் சென்னையில் நடந்த பந்து வீச்சு சோதனையிலும் அவர் தேறவில்லை. இதனால் அவரது பந்துவீச்சுக்கு தடை தொடருகிறது. இதன் காரணமாகவே ஷகிப் அல்-ஹசன் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

    சாம்பியன்ஸ் கோப்பை போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடைபெற இருந்த அவரது கனவு கலைந்தது. பார்மின்றி தடுமாறும் விக்கெட் கீப்பர் லிட்டன் தாசும் கழற்றிவிடப்பட்டுள்ளார்.

    வங்காளதேச அணி வருமாறு:-

    நஜ்முல் ஷூசைன் ஷன்டோ (கேப்டன்), முஷ்பிகுர் ரஹிம், தவ்ஹித் ஹரிடாய், சவுமியா சர்கார், தன்சித் ஹசன், மக்முதுல்லா, ஜாக்கர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹூசைன், தஸ்கின் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான், பர்வேஸ் ஹூசைன், நசும் அகமது, தன்சிம் ஹசன், நஹித் ராணா.

    ×