என் மலர்
நீங்கள் தேடியது "சுற்றுச்சூழல் அனுமதி"
- டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக சுற்றுச்சூழல் அனுமதிகோரி தமிழக அரசிடம் டைடல் லிமிடெட் நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது.
- மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 5.67 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பூங்கா அமைகிறது.
தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரியில் பட்ஜெட் உரையின்போது, திருச்சி மற்றும் மதுரையில் டைடல் பூங்கா நிறுவப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பூங்காவை கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.
டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக சுற்றுச்சூழல் அனுமதிகோரி தமிழக அரசிடம் டைடல் லிமிடெட் நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது.
இந்நிலையில் மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பூங்கா அமைக்கும் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் என்ற இடத்தில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு அருகே டைடல் பூங்கா 14.16 ஏக்கரில் 5.58 லட்சம் சதுர அடியில் ரூ.315 கோடியில் அமைகிறது. 6 தளங்களுடன் அமைய உள்ளது.
மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 5.67 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பூங்கா அமைகிறது. மதுரையில் ரூ.289 கோடி செலவில் கட்டப்படும் டைடல் பூங்காவில் 5,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சுற்றுச்சூழல் அனுமதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையம் வழங்கியுள்ளது.
- டாபர் நிறுவனத்தின் தொழிற்சாலை மூலம் 250 பேருக்கு வேலைவாய்ப்புக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டிவனம் சிப்காட் உணவுப் பூங்காவில் டாபர் நிறுவனம் தொழிற்சாலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அனுமதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையம் வழங்கியுள்ளது.
திண்டிவனம் சிப்காட் உணவு பூங்காவில் ரூ.400 கோடி முதலீட்டில் உற்பத்தி ஆலையை டாபர் நிறுவனம் தொடங்க உள்ளது.
மேலும், 1,36,585 சதுர அடி பரப்பளவில் அமைய உள்ள இந்த தொழிற்சாலையில் தேன், ஓடோ டெல், டாபர் ரெட், ரோஸ் வாட்டர் உள்ளிட் பொருட்களை தயாரிக்க டாபர் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டாபர் நிறுவனத்தின் தொழிற்சாலை மூலம் 250 பேருக்கு வேலைவாய்ப்புக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆலையை நிறுவவுவதற்கு கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஆண்டுக்கு குறைந்தது 750 கிலோ தங்கத்தை வெட்டி எடுக்க அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
- புவியியலாளர் டாக்டர் மாதிரி ஹனுமா பிரசாத் தலைமையிலான பெங்களூருவை சேர்ந்த ஜியோ மைசூர் சர்வீசஸ் லிமிடெட் உரிமம் பெற்றது.
இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜொன்னகிரி பகுதியில் தங்கம் இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் கடந்த 1994ம் ஆண்டு கண்டறிந்தது.
பின்னர், தனியார் நிறுவனங்களுக்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டன. இருப்பினும், முதற்கட்ட ஆய்வை முடிக்க கூட பெரிய முதலீடு தேவைப்பட்டதால் எந்த நிறுவனமும் முன்வரவில்லை. 2005 ஆம் ஆண்டில், அரசாங்கம் மீண்டும் திறந்த உரிமக் கொள்கை மூலம் தனியார் நிறுவனங்களைத் தேடியது.
அப்போது புவியியலாளர் டாக்டர் மாதிரி ஹனுமா பிரசாத் தலைமையிலான பெங்களூருவை சேர்ந்த ஜியோ மைசூர் சர்வீசஸ் லிமிடெட் ஜொன்னகிரி மண்டலத்தில் ஆய்வு செய்ய 2013 ஆம் ஆண்டில் முதற்கட்ட உரிமத்தைப் பெற்றது. ஆனால் இந்த ஆய்வை தொடங்க அனைத்து அனுமதிகளையும் பெற நிறுவனத்திற்கு 10 ஆண்டுகள் வரை ஆனது.
இதற்கிடையில், டெக்கான் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் (டிஜிஎம்எல்) ஜியோமைசூரில் 40% பங்குகளை வாங்கியது. மேலும் சுமார் 1,500 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, துக்காலி மற்றும் மடிகேரா வயல்களில் இருந்து சுமார் 750 ஏக்கர் நிலத்தை வாங்கி 2021 இல் சோதனைகளைத் தொடங்கியது. மேலும் ஒரு சிறிய செயலாக்க யுனிட்டை நிறுவி ஆய்வுப் பணிகளைத் தொடங்கியது.

இதுகுறித்து பேசிய ஜியோ மைசூரின் நிர்வாக இயக்குனர் பிரசாத், இப்போது இங்கு சுமார் 30 ஆயிரம் ஆழ்துளை கிணறுகள் மூலம் சோதனை நடத்தி வருகிறோம். 2 ஆண்டு ஆய்வில் இங்கு வர்த்தக ரீதியாக தங்கத்தை வெட்டி எடுப்பது சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். கடந்த டிசம்பர் மாதமே பணிகளை தொடங்க முயன்றோம். ஆனால், சில ஆய்வு முடிவுகள் வர தாமதமானது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு ஆந்திர பிரதேச அரசு சுற்றுசூழல் அனுமதியை விரைவில் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த மூன்று மாதங்களுக்குள் தங்க உற்பத்தி தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம் இப்போது ஜொன்னகிரியில்தான் அமைகிறது. இப்பகுதியில் இருந்து ஆண்டுக்கு குறைந்தது 750 கிலோ தங்கத்தை வெட்டி எடுக்க அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.