என் மலர்
நீங்கள் தேடியது "ரைனோப்ளாஸ்டி சிகிச்சை"
- 14 வகை மூக்குகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
- அகத்தின் அழகு முகத்தில் இருக்கிறது.
ஒருவரின் முகத்தில் அவருடைய மூக்கு எந்த வடிவில், எவ்வாறு அமைந்துள்ளது என்பதை வைத்துத்தான், அவரது முக அழகே முடிவு செய்யப்படுகிறது. கிளி மூக்கு, வளைந்த மூக்கு, அகல மூக்கு, பெரிய மூக்கு, சின்ன மூக்கு, சப்பை மூக்கு, உருண்டை மூக்கு, ரோமன் மூக்கு என்று உலகிலுள்ள மனிதர்களுக்கு சுமார் 14 வகை மூக்குகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
வெட்கமோ, கோபமோ, அதிர்ச்சியோ முதலில் சிவந்து போவது மூக்கின் நுனிதான். ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியின் மூக்கினைத்தான் உலகிலுள்ள அநேக பெண்கள் அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது.
உலகிலேயே கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர்களுக்குத் தான் சரியான அளவுள்ள சரியான வடிவமுள்ள சரியான அமைப்புள்ள மிக அழகான மூக்கு இருப்பதாக ஒரு பதிவு இருக்கிறது.
மூக்கு சப்பையாக இருப்பவர்களுக்கு பொதுவாகவே ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. ஆனால் அவர்கள் அதற்காக கவலைப்பட வேண்டிய தேவையில்லை. அதுவும் ஒரு அழகுதான்.
மூக்கு தட்டையாக இருப்பதனால், மூக்கின் இரண்டு காற்றுப்பாதைகளும் மிகக் குறுகலாக இருக்கும். இதனால் காற்று எளிதாக உள்ளே போவதும், வெளியே வருவதும் சிரமமாக இருக்கும் என்று நிறையபேர் நினைப்பதுண்டு.
இதுபோக ஜலதோஷம், புளூ காய்ச்சல், சுவாசப்பாதை தொற்று நோய் சமயங்களில் சுவாசிக்கும் காற்று எளிதாக உள்ளே போக முடியாமல் ஆகிவிடுகிறது. இம்மாதிரி நேரத்திலெல்லாம் சப்பையாக மூக்கு இருப்பவர்கள் தனக்கு மூக்கு சப்பையாக இருப்பதனால் தான் இந்த பிரச்சனைகள் எல்லாம் ஏற்படுகிறது என்று கவலைப்படுவதுண்டு. மேற்கூறிய பிரச்சனைகளுக்கு மூக்கின் வடிவம் ஒரு காரணமல்ல. கவலை வேண்டாம்.
அதிக அளவில் மூக்கு சப்பையாக இருக்கிறது, பார்ப்பதற்கு சங்கடமாக இருக்கிறது என்று நினைப்பவர்கள், பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணரைச் சந்தித்து தட்டையான மூக்கை எப்படி வேண்டுமோ அப்படி அழகுபடுத்திக் கொள்ளலாம்.
'சிலிகான்' என்று அழைக்கக்கூடிய ஒருவித செயற்கை பொருளால் செய்யப்பட்ட இந்த மூக்கு வடிவ பொருளை மூக்கின் நடுவில் உள்ளே பொருத்தி விடுவார்கள். இதற்கு 'நேஸல் இம்ப்ளாண்ட்' என்று பெயர்.
தட்டையான மூக்கை சரிசெய்ய, உயரப்படுத்த, அழகுபடுத்த செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சைக்கு 'ரைனோப்ளாஸ்டி' என்று பெயர். மூக்கு அழகின் மேல் அதிகம் கவலைப்படுபவர்களும், திரைப்பட நட்சத்திரங்களும் மூக்கின் அழகை மேம்படுத்திக் கொள்ள இந்த அறுவை சிகிச்சையை செய்து கொள்வதுண்டு.
அகத்தின் அழகு முகத்தில் இருக்கிறது. முகத்தின் அழகு மூக்கில் இருக்கிறது.