என் மலர்
நீங்கள் தேடியது "மதுரவாயல்"
- என்.எஸ்.கே. நகர், மற்றும் உள்வட்ட சாலை பாலத்தில் உள்ள தற்காலிக தரைப்பாதைகள் அகற்றப்பட்டன.
- அனைத்து தற்காலிக தளங்களையும் அகற்றியதை நீர்வளத்துறை சமீபத்தில் உறுதிப்படுத்தியது.
சென்னை:
சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே உயர்மட்ட மேம்பாலம் கட்ட கடந்த 2009-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டம் கூவம் ஆற்றின் வழியே செயல்படுத்தும் பணி தொடங்கியது.
ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் கூவம் நதியில் அமைக்கப்படும் பறக்கும் சாலை திட்டத்தால் நதியின் நீரோட்டம் பாதிக்கப்படும் எனக் கூறி தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்தஉடன் பறக்கும் சாலை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரூ.5509 கோடியில் மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதற்கிடையில் இந்த திட்டத்திற்கு கடந்த ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. இதைத் தொடர்ந்து கூவம் ஆற்றின் குறுக்கே மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை பணி மீண்டும் தொடங்கியது. தீர்ப்பாயத்தின் அனுமதியை தொடர்ந்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டுமான பணியை தொடங்கி உள்ளது.
கடந்த ஆண்டு கூவம் ஆற்றங்கரையில் குறிப்பாக அமைந்தகரை அருகே வெள்ள அபாயத்தை உணர்த்தும் வகையில் குப்பைகள் கொட்டப்படுவதை அறிந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தேவையான சுற்றுச்சூழல் அனுமதிகள் உள்ளதா என்பதை சரிபார்க்க அரசு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியது.
தமிழக நீர்வளத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை இது தொடர்பான விரிவான அறிக்கைகளை தீர்ப்பாயத்திற்கு சமர்ப்பித்தது. பாடிக்குப்பம் மற்றும் செயின்ட் ஆண்ட்ரூஸ் பாலம் இடையே உள்ள நீளம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து அனைத்து தற்காலிக தளங்களையும் அகற்றியதை நீர்வளத்துறை சமீபத்தில் உறுதிப்படுத்தியது.
மேலும் என்.எஸ்.கே. நகர், மற்றும் உள்வட்ட சாலை பாலத்தில் உள்ள தற்காலிக தரைப்பாதைகள் அகற்றப்பட்டன. குப்பைகள் அகற்றப்பட்டு, கூவம் ஆற்றின் கரைக்கு மாற்றப்பட்ட தற்கான புகைப்பட ஆதாரங்களையும் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கை முடித்தது. தேசிய நெடுஞ்சாலை துறைக்கு தேவையான போது மட்டுமே தற்காலிக நடைபாதைகள் மற்றும் 'பைலிங்'ரிக்குகளை அமைக்க அனுமதித்தது.