search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்ககிரி ராஜ்குமார்"

    • பிரபாகரனை சந்தித்தாக சீமான் கூறிய கதைகள் எனக்கு குற்ற உணர்வை தந்தன.
    • பிரபாகரனின் குடும்ப உறுப்பினரை சீமான் தகாத வார்த்தையால் பொது வெளியில் திட்டியுள்ளார்.

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் இருக்கும் படம் போலியானது, அதை எடிட் செய்து கொடுத்ததே நான்தான் என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன் புயலைக் கிளப்பினார்.

    சமீப காலமாக பெரியார் குறித்த எதிர்மறையான கருத்துக்களை கூறி வரும் சீமானின் சர்ச்சை லிஸ்டில் இந்த எடிட்டிங் விவகாரமும் சேர்ந்துள்ளது.

    பிரபாகரனை சந்தித்தது, அவருடன் பேசியது குறித்த கதைகளை பல முறை மேடைகளில் சீமான் பேசி வந்துள்ளார். தமிழ் தேசியம் மற்றும் பிரபாகரன் பின்புலத்தை வைத்தே சீமானின் கட்சி பிரபலமானது. பிரபாகரனை சந்தித்தது, அவருடன் பேசியது, ஆமைக்கறி சாப்பிட்டது என பல மேடைகளில் சீமான் சிலாகித்து வந்துள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான பிரபாகரனுடன் சீமான் எடுத்துக்கொண்ட புகைப்படமும் நாம் தமிழர் மேடைகளில் இடம்பெறும்.

    இந்த நிலையில் வெங்காயம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சங்ககிரி ராஜ்குமார் சமீபத்தில் பேசுகையில், பிரபாகரனுடன் சில ஆளுமைகள் இருக்கும் புகைப்படங்களையும், அண்ணன் சீமான் இருக்கும் புகைப்படத்தையும் கொண்டு வந்து இரண்டையும் அருகருகே வைத்து மேட்ச் செய்து தருமாறு எனக்கு நெருக்கமான ஒருவர் கேட்டிருந்தார்.

    தமிழ் தேசியவாதியான எனக்கு சீமானும் பிரபாகரனும் பிடிக்கும் என்பதால் அதை செய்தேன். ஆனால் பிரபாகரனை சந்தித்தாக சீமான் கூறிய கதைகள் எனக்கு குற்ற உணர்வை தந்தன. பிரபாகரன் இமேஜை டேமேஜ் செய்ததோடு மட்டுமல்லாமல், தந்தை பெரியாரை டேமேஜ் செய்யும் நிலைக்கு சீமான் வந்துவிட்டார்.

    சமூக நீதிக்கு அரணாக இருந்த இருவரையும் டேமேஜ் செய்து பிற்போக்குவாதிகளுக்கு இடம் அமைத்துக் கொடுக்கும் வேலையில் சீமான் இறங்கிவிட்டார் என்னும்போது, தற்போது உண்மையை கூறுகிறேன் என்று தெரிவித்திருந்தார்.  

     இந்த பேட்டி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தொடர்ந்து சீமானின் பல சந்தர்ப்பங்களில் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். விழுப்புரத்தில் நடந்த கள் விடுதலை மாநாட்டின்போது செய்தியாளர்களின் இந்த போட்டோ குறித்த கேள்வியை தட்டிக் கழித்த சீமான், அத விடுங்க என்று கூறிவிட்டு நகர்ந்தார்.

    மற்றொரு பேட்டியில் 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான புகைப்படம் அது. 15 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்.. பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் போலி என்கிறார்கள்.. அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று சீமான் கூறியிருந்தார்.

    முன்னதாக 2018-ஆம் ஆண்டு மதுரையில் பேசியிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரபாகரனோடு சீமான் புகைப்படம் எடுக்கவில்லையென்றும் கிராபிக்ஸில் அதுபோல புகைப்படம் உருவாக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்ததும் கவனிக்கத்தக்கது.

    இதற்கிடையே சீமான் பிரபாகரன் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதுதான் என்று தற்போது திமுக மாணவரணித் தலைவர் ராஜீவ் காந்தியும் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய 3000 நபர்கள் இன்று திமுகவில் இணைந்த நிகழ்ச்சிக்கு பின் பேசிய ராஜீவ் காந்தி, 'அந்தப் படம் எடிட் செய்யப்பட்டது தான். அந்தப் படம் வந்த ஹார்ட் டிஸ்க்கை அலுவலகத்தில் வாங்கியதே நான்தான்' என ராஜீவ் காந்தி கூறியுள்ளார்.

    தொடர்ந்து விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் அண்ணன் மகன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மைதான். ஆனால், அவர் சொல்வதுபோல் மணிக்கணக்கில் எல்லாம் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை.

    குறைந்தது 8ல் இருந்து 10 நிமிடம் வரை அந்தச் சந்திப்பு நடந்திருக்கலாம். சீமான் பிரபாகரனுடன் சேர்ந்து உணவு அருந்துவதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது.

    சீமான் சொல்லும் ஆமைகறி, இட்லி உள்ளிட்ட அனைத்தும் பொய். இயக்கத்தின் கேமராவால் மட்டுமே அங்கு போட்டோ எடுக்க முடியும். அந்த போட்டோவை தருவதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. சீமானிடம் போட்டோ தரப்படாமல் இருந்திருக்கலாம். எனவே அவர் தனது அரசியல் தேவைக்காக இப்படியான ஒரு எடிட் செய்த புகைப்படத்தை உபயோகித்துவருகிறார் என்று கூறினார்.

     இதன் முகாந்திரத்தில் இன்று சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து பெண் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, தகாத வார்த்தையை பயன்படுத்தி பிரபாகரன் அண்ணன் மகனை சீமான் திட்டியுள்ளார்.

    பொதுவெளியில் சீமான் கொச்சையாக பேசியது அங்கிருந்த பலரை முகம் சுளிக்க வைத்தது. பெரியார் சொன்னதாக சில தகாத சொற்களையும் சீமான் தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகத் தொடங்கி உள்ளன. தனது தலைவர் என சீமான் கூறிக்கொள்ளும் பிரபாகரனின் குடும்ப உறுப்பினரை சீமான் தகாத வார்த்தையால் பொதுவெளியில் திட்டியுள்ளது விஷயத்தை மேலும் சிக்கல் ஆகியுள்ளது.

    முன்னதாக பொங்கலையொட்டி கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "தந்தை பெரியாருக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? மதுவுக்கு எதிரான போராட்டத்தில் மரத்தை வெட்டி சாய்த்தது தான் பெரியாரின் பகுத்தறிவா? காம இச்சையை தாய், மகளுடன் ... என கூறியவர் பெரியார்" என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

    இதற்கு பெரியாரிய திராவிட இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன. சீமானை எதிர்த்து கண்டனப் போராட்டங்கள் நடத்தின. இருப்பினும் தொடர்ந்து பெரியார் குறித்து சீமான் பல்வேறு எதிர்மறையான கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.

     பெரியார் குறித்து தொடர்த்து பேசும் சீமான், பிரபாகரன் உடனான புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது பற்றிய கேள்விகளை தட்டிக் கழிப்பது ஏன் என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். சர்ச்சையாக ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகவே சீமான் இதுபோன்ற கருத்துக்களை கூறி வருகிறார் என்பதும் பலரது அபிப்பிராயமாக உள்ளது. 

    • கடந்த நான்கு ஐந்து நாட்களாக என் அலைபேசிக்கு நேரடியாகவும் வாட்ஸ் அப் மூலமாகவும் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
    • அழைப்பை எடுத்தால் வீட்டில் இருக்கும் பெண்களை வசை பாடுகிறீர்கள் அல்லது மிரட்டுகிறீர்கள்.

    விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு சீமான் மறுப்பு தெரிவித்தார்.


    பெரியாரைப் பற்றி தொடர்ந்து பேசி வருவதால் எங்கள் தலைவர் பிரபாகரனோடு நான் எடுத்த படம் எடிட் செய்யப்பட்டது என்கிற அவதூறை பரப்பி வருகிறார்கள். இப்போது எடிட் செய்து கொடுத்ததாக சொல்லும் நபர் இவ்வளவு நாட்களும் என்ன செய்து கொண்டு இருந்தார் என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து ஆதாரத்துக்கு ஒரு ஆதாரம் தேவையா என சீமானுக்கு இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கேள்வி எழுப்பி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

    இதனையடுத்து நாம் தமிழர் தொண்டர்கள் தன்னை மிரட்டுவதாக எக்ஸ் தளத்தில் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    அண்ணனின் தம்பிகளுக்கு வணக்கம். கடந்த நான்கு ஐந்து நாட்களாக என் அலைபேசிக்கு நேரடியாகவும் வாட்ஸ் அப் மூலமாகவும் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கிறீர்கள். அழைப்பை எடுத்தால் வீட்டில் இருக்கும் பெண்களை வசை பாடுகிறீர்கள் அல்லது மிரட்டுகிறீர்கள். அதற்காக அச்சப்பட்டு கொண்டு இந்த பதிவை எழுதவில்லை.

    கசப்பை சுவைத்த உங்கள் நாவிற்கு இந்த ஆபாச வார்த்தைகள் தான் ஆறுதல் தரும் என்றால் பேசிவிட்டு போங்கள். இடையிடையே டேய்..சங்ககிரி ராஜ்குமார் நீ எந்த ஊர் காரன்டா என்று கேட்டு சிரிப்பும் மூட்டுகிறீர்கள்.

    உங்கள் அச்சுறுத்தலுக்கோ.. ஆபாச வசவுகளுக்கோ நான் கவலைப்படவில்லை. உங்களிடம் வைக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான். எனக்கு அழைப்பதற்கு முன்பாக உங்கள் முகப்பு படமாக வைத்திருக்கும் தலைவர் பிரபாகரன் படத்தை நீக்கிவிட்டாவது அழையுங்கள்.

    வீரம் நிறைந்த அவர் புகைப்படத்தை கண்களில் பார்த்துக் கொண்டே, காதுகளில் உங்கள் அழுக்கு வார்த்தைகளை கேட்பதற்கு அருவருப்பாக இருக்கிறது. உலகே கண்டு வியந்த ஒரு ஒப்பற்ற தலைவரை முடிந்த வரை இழிவு செய்து விட்டீர்கள் இனியேனும் விட்டு விடுங்கள்.

    என சங்ககிரி ராஜ்குமார் கூறினார்.


    ×