என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜன நாயகன்"

    • ஜூனியர் என்.டி. ஆரின் 31 ஆவது படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார்.
    • ரூ. 350 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகிறது.

    கே.ஜி.எப் படங்கள் மூலம் இந்திய திரைத்துறையை கர்நாடகாவை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த பிரசாந்த் நீல் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக இயங்கி வருகிறார். பிரசாந்த் நீல் - பிரபாஸ் கூட்டணியில் சலார் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

    இதற்கிடையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி கதநாயகன் ஜூனியர் என்.டி. ஆரின் 31 ஆவது படத்தை பிரசாந்த் நீல் இயக்குவதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருத்தது.

    பான் இந்தியா படமாக உருவாகும் இதை ரூ. 350 கோடி பட்ஜெட்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    'NTR-31' படம் கடந்த ஜனவரியில் பூஜையுடன் துவங்கியது. இந்நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பில் ஜுனியர் என்டிஆர் கலந்துகொள்ள உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இந்த படமானது 2026 ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.அதே நாளில் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
    • இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகிறது.

    எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இப்படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

    இந்த நிலையில், 'ஜனநாயகன்' படத்தின் படப்பிடிப்பு மே மாதம் 15-ந்தேதிக்குள் முடிவடைய உள்ளதாக என தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு முன்னதாகவே விஜய் தொடர்பான காட்சிகள் எடுத்து முடிக்கப்படும் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விஜய் ஜுன் மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜன நாயகன்'.
    • திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது

    எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜன நாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

    அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது அதற்கு பின் முழுநேர அரசியலில் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.

    திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு சமீபத்தில் புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்தனர். படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் படத்தின் டிஜிட்டல் உரிமையை பல ஓடிடி தளங்கள் போட்டி போட்டாலும். படத்தின் உரிமையை பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. இப்படத்தை அமேசான் பிரைம் 121 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. மேலும் ஜன நாயகன் படத்தின் இந்தி வெர்ஷனை ஓடிடியில் 8 வாரம் திரையரங்கில் ஓடிய பிறகே ஓடிடியில் வெளியிடவுள்ளனர். திரைப்படத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    • ரூ. 350 கோடி பட்ஜெட்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
    • அதே நாளில் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படமும் வெளியாக உள்ளது.

    கே.ஜி.எப் படங்கள் மூலம் இந்திய திரைத்துறையை கர்நாடகாவை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த பிரசாந்த் நீல் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக இயங்கி வருகிறார். பிரசாந்த் நீல் - பிரபாஸ் கூட்டணியில் சலார் இரண்டாம் பாகம் சுடசுட தயாராகி வருகிறது.

    இதற்கிடையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி கதநாயகன் ஜூனியர் என்.டி. ஆரின் 31 ஆவது படத்தை பிரசாந்த் நீல் இயக்குவதாக கடந்த மே 20 ஆம் தேதி என்.டி.ஆர் பிறந்தநாள் அன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருத்தது.

    பான் இந்தியா படமாக உருவாகும் இதை ரூ. 350 கோடி பட்ஜெட்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    'NTR-31' படம் கடந்த ஜனவரியில் பூஜையுடன் துவங்கியது. இந்நிலையில் இந்த படமானது 2026 ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.அதே நாளில் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் உருவாகும் "தளபதி 69" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. திரைப்படத்திற்கு `ஜன நாயகன்' என்ற தலைப்பை வைத்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர்.

    அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் அக்டோபர் மாத வாக்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் இதுவே விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

    படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் விஜய் வாகனத்தின் மீது நின்று கொண்டு அவரது ரசிகர்களுடன் செல்பி எடுப்பது போல் காட்சி அமைந்துள்ளது. இப்படம் கண்டிப்பாக ஒரு அரசியல் பின்னணி கொண்ட திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    முன்னதாக நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் பலமுறை வாகனத்தின் மீது நின்றபடி செல்ஃபி எடுத்துள்ளார். அந்த வகையில் தனது அடுத்த படத்தின் முதல் தோற்றத்திலேயே தன் நிஜ வாழ்க்கை சம்பவத்தை ரீகிரியேட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் நடிக்கும் 69 படமான ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.
    • படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் உருவாகும் தளபதி விஜய் நடிக்கும் 69 படமான ஜன நாயகன்  படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. திரைப்படத்திற்கு `ஜன நாயகன்' என்ற தலைப்பை வைத்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர்.

    அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் இதுவே விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

    படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் விஜய் வாகனத்தின் மீது நின்று கொண்டு அவரது ரசிகர்களுடன் செல்பி எடுப்பது போல் காட்சி அமைந்துள்ளது. இந்நிலையில் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது. எனவே விஜய்யின் ரசிகர்கள் டபுள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • "தளபதி 69" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.
    • திரைப்படத்திற்கு `ஜன நாயகன்’ என்ற தலைப்பை வைத்துள்ளனர்.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் உருவாகும் விஜய் நடிக்கும் 69 படமான ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை திரைப்படத்திற்கு `ஜன நாயகன்' என்ற தலைப்பை வைத்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர்.

    அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் அக்டோபர் மாத வாக்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் இதுவே விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

    அந்த போஸ்டரில் விஜய் வாகனத்தின் மீது நின்று கொண்டு அவரது ரசிகர்களுடன் செல்பி எடுப்பது போல் காட்சி அமைந்துள்ளது. இந்நிலையில் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. இப்போஸ்டரில் விஜய் சாட்டை எடுத்து சுழற்றுவது போன்றும் அதில் நான் ஆணையிட்டால் வசன் இடம் பெற்றுள்ளது. படத்தின் போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் ஜன நாயகன்
    • இதுவே விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் விஜய் நடிக்கும் 69 படமான ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர்.

    அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் அக்டோபர் மாத வாக்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் இதுவே விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் படத்தின் கதாநாயகியான பூஜா ஹெக்டே சமீபத்தில் கலந்துக் கொண்ட நேர்காணலில் ஜனநாயகன் திரைப்படத்தை குறித்த சுவாரசிய விஷயங்களை பகிர்ந்தா அதில் அவர் கூறியதாவது. " மக்கள் நானும் அவரும் நடித்த பீஸ்ட் திரைப்படத்தை மிகவும் விரும்பினர். அதைத்தொடர்ந்து அடுத்ததாக எப்பொழுது மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்க போகிறீர்கள் என்ற கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தனர். மக்களின் அன்பிற்காக மட்டுமே இப்படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்த படத்திலும் எங்களை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன். அதுமட்டும் இல்லாமல் இது விஜய் சாரின் கடைசி திரைப்படம் என கூறுகிறார்கள் ஆனால் அப்படி இருக்கக் கூடாது என ஆசைப்படுகிறேன். இந்த வாய்ப்பை தவறவிட்டால் என்னால் மீண்டும் பெற இயலுமா என்று தெரியவில்லை." என கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
    • படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், காதலர் தினத்தன்று 'ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

    ஏற்கனவே விஜய் நடித்த கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ போன்ற படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத் இந்த படத்திற்கும் இசையமைத்திருப்பதால் இந்த முதல் பாடல் விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனிடையே, இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அல்லது 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், படப்பிடிப்புக்காக காரில் செல்லும் நடிகர் விஜயை காண சாலையோரம் சிறுவர்கள் கூடினர். அப்போது காரில் சென்ற நடிகர் விஜயை 'அண்ணா... அண்ணா' என்று சிறுமி அழைக்க கார் மெல்ல செல்ல சிறுமி ஒருவர் விஜய்க்கு பரிசு வழங்கினார். அதை விஜய் புன்னகையுடன் பெற்றுக்கொண்டு சென்றார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'.
    • இப்படத்தின் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது அதற்கு பின் முழுநேர அரசியலில் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.

    இதனிடையே, இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அல்லது 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் படத்தை குறித்த சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குனர்களான அட்லீ, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் ஜனநாயகன் படத்தில் வரும் ஒரு பாடலில் இடம்பெறவுள்ளதாகவும் அவர்கள் நடிகர் விஜய்-க்கு செண்ட் ஆஃப் கொடுக்கும் காட்சிகளாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் மற்றும் பிகில் திரைப்படங்களும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் மற்றும் லியோ திரைப்படங்களும், நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் நடித்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×