என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓமர்சாய்"

    • ஐசிசி விருதை வென்ற முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை ஓமர்சாய் படைத்துள்ளார்.
    • ஐபிஎல் ஏலத்தில் ஓமர்சாயை ரூ.2.4 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.

    அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த ஆண்கள் ஒருநாள் வீரராக ஆப்கானிஸ்தான் அணியின் ஓமர்சாயை ஐ.சி.சி. தேர்வு செய்துள்ளது. இதன்மூலம் ஐசிசி விருதை வென்ற முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை ஓமர்சாய் படைத்துள்ளார்.

    அவர் கடந்த ஆண்டில் 14 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் ஒரு சதம் 3 அரைசதத்துடன் 417 ரன்கள் குவித்துள்ளார். பந்து வீச்சில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    ஐபிஎல் ஏலத்தில் ஓமர்சாயை ரூ.2.4 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது. 

    • இங்கிலாந்துக்கு எதிராக 41 ரன்கள் எடுத்ததுடன், ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 63 பந்தில் 67 ரன்கள் விளாசினார்.

    சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா (மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது) ஆகியவற்றின் மூலம் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

    என்றாலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 325 ரன்கள் குவித்து 8 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதற்கு அந்த அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான அஸ்மதுல்லா ஓமர்சாய் முக்கிய காரணமாக இருந்தார். அவர் 31 பந்தில் 41 ரன்கள் விளாசினார். மேலும், 9.5 ஓவர்களில் 58 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட் சாய்த்தார்.

    அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கைவிடப்பட்ட போட்டியில் 63 பந்தில் 67 ரன்கள் விளாசினார். மேலும் தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    இதன்மூலம் ஐசிசி இன்று வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிக்கான ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் அஸ்மதுல்லா ஓமர்சாய் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    3-வது இடத்தில் இருந்து தற்போது 2 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி முதல் இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். ஜிம்பாப்வே வீரர் சிகந்தர் ரசா 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

    நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னெர் 6-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேக்ஸ்வெல் 7-வது இடத்திலும், ஸ்காட்லாந்து வீரர் பிராண்டன் மெக்முலன் 8-வது இடத்திலும் ஜடேஜா 9-வது இடத்திலும், நமீபியா வீரர் எராமஸ் 10-வது இடத்திலும் நீடிக்கின்றன்ர்.

    இந்தியாவின் மற்றொரு வீரர் அக்சார் படேல் 17 இடங்களில் முன்னேறி 13-வது இடத்தை பிடித்துள்ளார். ஹர்திக் பாண்ட்யா 3 இடங்களில் முன்னேறி 21-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ×