என் மலர்
நீங்கள் தேடியது "நடிகை ஜான்வி கபூர்"
- திருமணத்துக்கு பிறகு கணவருடன் திருப்பதியில் குடியேற வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்.
- மூன்று குழந்தைகளை பெற்றுக்கொண்டு அங்கேயே அமைதியாக வாழவும் விரும்புகிறேன்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். ஜூனியர் என்.டி.ஆருடன் 'தேவாரா' படத்தில் நடித்து தெலுங்கிலும் அறிமுகமானார். தமிழ் படங்களில் நடிக்கவும் கதை கேட்டு வருகிறார்.
ஜான்வி கபூர் அடிக்கடி திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வருகிறார். தனது தாயாரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களிலும் திருப்பதிக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். திருப்பதி ஏழுமலையானை பற்றி யார் பேசினாலும் அவரது முகம் பிரகாசமாகி விடுகிறது. ஏழுமலையான் மீதான பக்தியால் திருப்பதியிலேயே குடியேறவும் விருப்பம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து ஜான்வி கபூர் கூறும்போது, ''திருமணத்துக்கு பிறகு கணவருடன் திருப்பதியில் குடியேற வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன். திருப்பதியில் சாதாரணமான பெண்ணாக வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

திருப்பதியில் வாழை இலையில் உணவை சாப்பிட்டு தினமும் கோவிந்த நாம சங்கீர்த்தனத்தை கேட்டுக் கொண்டு காலத்தை கழிக்கவும், மூன்று குழந்தைகளை பெற்றுக்கொண்டு அங்கேயே அமைதியாக வாழவும் விரும்புகிறேன். ஏழுமலையான் கோவிலில் கடைபிடிக்கும் சம்பிரதாயத்துக்கு ஏற்ற மாதிரி எனது கணவரை வேட்டி அணியும்படியும் சொல்வேன்'' என்றார்.
- தடக் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஜான்வி கபூர்.
- இந்த படத்தின் மூலம் அறிமுக கதாநாயகிக்கான விருதையும் பெற்றுள்ளார்.
பிரபல தயாரிப்பாளரான போனிகபூரின் மகள் ஜான்வி கபூர் 'தடக்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். இவர் தனது நடிப்பால் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் சிறந்த அறிமுக கதாநாயகிக்கான விருதையும் பெற்றுள்ளார்.

ஜான்வி கபூர்
இவர் நடித்துள்ள குட்லக் ஜெரி திரைப்படம் ஜுலை 29-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக். ஆனால் அவர் நடித்த இரண்டு படங்களுமே தமிழ் படங்களின் ரீமேக் என்பதால் ஸ்ரீதேவி நடித்த படங்களை ரீமேக் செய்தால் எந்த படங்களில் நடிக்க விரும்புவீர்கள் என்று ஜான்வியிடம் கேள்வி கேட்கப்பட்டது.

ஜான்வி கபூர்
இதற்கு ஜான்வி கூறியதாவது, என்னுடைய அம்மாவின் படங்களை ரீமேக் செய்வது என்பது முடியாதது. அவர் ஓவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு விதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதை என்னால் செய்ய முடியுமா என்று தெரியாது. அதனால் அந்தப் படங்களை நாம் தொடக்கூடாது. அது அப்படியே ரசிக்கப்பட வேண்டும். என்னால் அவர் போல் ஸ்கோர் பண்ண முடியுமா என்பது தெரியவில்லை என்றார்.
- தடக் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஜான்வி கபூர்.
- இந்த படத்தின் மூலம் அறிமுக கதாநாயகிக்கான விருதையும் பெற்றுள்ளார்.
பிரபல தயாரிப்பாளரான போனிகபூரின் மகள் ஜான்வி கபூர் 'தடக்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். இவர் தனது நடிப்பால் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் சிறந்த அறிமுக கதாநாயகிக்கான விருதையும் பெற்றுள்ளார்.

ஜான்வி கபூர்
இவர் நடித்துள்ள குட்லக் ஜெரி ஜுலை 29-ஆம் தேதி வெளியாகவுள்ளதை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி உள்ளார். விளம்பர தூதுவரான இவர் பாலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக இருக்கிறார். சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவரது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியது மட்டுமல்லாமல் இணையத்தில் வைரலாகவும் செய்கிறது.

ஜான்வி கபூர்
இந்நிலையில், நடிகை ஜான்வி கபூர் நீல நிற ஆடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.
- தமிழில் வெளியான கோலாமாவு கோகிலா இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
- இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஜான்விகபூர் நடித்துள்ளார்.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த "கோலமாவு கோகிலா" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சாதாரண குடும்பம் எப்படி போதை மருந்தை கடத்துகிறார்கள் என்ற சுவாரஸ்யமான கதையமைப்புடன் உருவாகியிருந்த இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

குட் லக் ஜெரி
சித்தார்த் சென் இயக்கியுள்ள இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ளார். "குட் லக் ஜெர்ரி" என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆனந்த் எல் ராயின் கலர் எல்லோ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படம் ஜூலை 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.








