என் மலர்
நீங்கள் தேடியது "இந்தியர்கள்"
- மனிதாபிமானம் சிறிதும் இல்லாமல் பயங்கரவாதிகள் போன்று இந்தியர்களை வெளியேற்றியதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
- வெளியுறவுத்துறை அமைச்சர் இது நடைமுறையில் உள்ளதுதான் என்கிறார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமெரிக்கா ராணுவ விமானத்தின் மூலம், இந்தியர்கள் 104 நபர்கள் கைவிலங்குகள் மற்றும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, 40 மணி நேரத்திற்கும் அதிகமாக பயணத்தில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதில் 19 பெண்களும் அடங்குவர். அவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே இருந்துள்ளது. மனிதாபிமானம் சிறிதும் இல்லாமல் பயங்கரவாதிகள் போன்று இந்தியர்களை வெளியேற்றியதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெளியுறவுத்துறை அமைச்சர் இது நடைமுறையில் உள்ளதுதான் என்கிறார். கொலம்பியா போன்ற ஒரு சிறிய நாடு, தனது நாட்டின் பிரஜைகளுக்கு துணை நின்று, அமெரிக்கா மீது தனது கோபத்தை காட்டியது. ஆனால், விஸ்வகுரு என்று பாஜகவினரால் பெருமைப்படுத்தப்பட்டு, ஒரு பொய் பிம்பத்தை கட்டி வைத்திருக்கும் பிரதமர் மோடியால் தனது குடிமக்களை அவமானத்திலிருந்து பாதுகாக்க முடியாதா?
இதற்குதான் இந்திய நாட்டினரின் வரிப்பணத்தில் இருந்து 100 கோடிக்கும் மேல் செலவு செய்து 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியை நடத்தினாரா பிரதமர் மோடி?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.