என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டீடாக்ஸ் டயட்"

    • அடிவயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்க உதவி செய்யும்.
    • பெருங்குடல், சிறுகுடல் என ஒட்டுமொத்த வயிறும் சுத்தமாகும்.

    உடல் ஆரோக்கியம் சார்ந்த பழக்கவழக்கங்கள் நவீனமாகி வரும் நிலையில், 'டயட்' முறைகளும் நாளுக்கு நாள் புதிது புதிதாக வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், உணவுப் பழக்கத்துடன், பருகும் தண்ணீர் வகைகளிலும் பலவிதமான டயட் முறைகள் வந்துள்ளன. குறிப்பாக, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த டீடாக்ஸ் தண்ணீர் பழக்கம் அதிகரித்திருக்கிறது.


    'டீடாக்ஸ் டயட்' என்றால் என்ன?

    டீடாக்ஸ் என்பது, தண்ணீர் மூலம் உடலில் சேர்ந்திருக்கும் கழிவுகளை, கொழுப்புகளை வியர்வையாக, சிறுநீர் வாயிலாக வெளியேற்றும் முறை. இந்த டீடாக்ஸ் டயட் தண்ணீரின் மூலமாக, உடலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.


    'டீடாக்ஸ் டயட்' எப்படி இருக்க வேண்டும்?

    டீடாக்ஸ் டயட் என்பது மென்மையாக ஜீரணித்து, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சிக் கொள்வதற்கு ஏதுவானதாக இருக்க வேண்டும். ஜீரண செயல்பாடு சீராக இருக்கும்போது கல்லீரலின் செயல்திறனும் அதிகரிக்கும். அதனால் கூடுதலாக உடலில் உள்ள 'டாக்சின்'களை வெளியேற்ற முடியும். டீடாக்ஸ் டயட் இருக்கையில், மென்மையான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

    எப்படி தயாராவது?

    உடலை சுத்தம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் டீடாக்ஸ் டயட்டை தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே உடலை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் வழக்கமாக நீங்கள் எடுத்துக் கொள்ளும் கலோரி அளவுகள், உணவுகள் அனைத்தும் மாறும் என்பதால் அதற்கு உடலை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஆல்கஹால், சிகரெட், காபி, சர்க்கரை, சாச்சுரேட்டட் கொழுப்பு உணவுகள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.


    டீடாக்ஸ் டயட்டின் நன்மைகள் என்ன?

    * திட உணவுகள் தவிர்க்கப்பட்டு திரவ உணவுகளாக எடுக்கும்போது மிக எளிதில் ஜீரணமடைந்து சிறுநீர், வியர்வை வழியே கழிவுகள் முழுக்க வெளியேறும். நம்முடைய பெருங்குடல், சிறுகுடல் என ஒட்டுமொத்த வயிறும் சுத்தமாகும்.

    * வயிற்றுப் பகுதியில் குறிப்பாக அடிவயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்க உதவி செய்யும்.

    * உடலில் உள்ள கழிவுகள் முழுவதுமாக வெளியேற்றப்படுவதால் சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் மாறும்.

    * கடினமான மூலக்கூறுகள் கொண்ட கார்போஹைட்ரேட் உள்ளிட்ட திட உணவுகளை இந்த டயட்டில் தவிர்ப்பதால் மற்ற உணவுகள் மிக எளிதில் ஜீரணமாகும்.

    * டீடாக்ஸ் டயட்டில் ஊட்டச்சத்துக்கள் செறிவாக உள்ள உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.


    எப்படி மேற்கொள்வது?

    எலுமிச்சை, வெள்ளரிக்காய், புதினா, இஞ்சி, பெர்ரி பழ வகைகள் அல்லது ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள் மற்றும் அன்னாசி பழம் இவற்றுடன் லவங்கபட்டை, துளசி விதை அல்லது ரோஸ்மெரி ஆகியவற்றை 4 முதல் 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, வடிகட்டி அந்த தண்ணீரை 7 முதல் 10 நாட்கள் குடித்து வரலாம்.

    சிலர், வெந்நீரில் பழங்களை போட்டும் தண்ணீர் பருகுவார்கள். விருப்பத்திற்கு ஏற்ப பழம், மூலிகை வகைகளை கலந்து சூடாக பருகும் டீடாக்ஸ் குடிநீர் வகைகளும் நிறைய இருக்கிறது.

    ×