என் மலர்
நீங்கள் தேடியது "ஹர்ஷா போக்ளே"
- ஹர்ஷா போக்ளே விமானம் புறப்படும் நேரத்தை தாண்டி காத்திருக்க வேண்டியிருந்ததாக புகார் கூறினார்.
- தாமதம் ஏற்பட்டதற்கு விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
தனக்கு நேர்ந்த அசவுகரியங்களால் இண்டிகோ விமான நிறுவனத்தை கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில், 'ஒரு நாள் விமான ஊழியர்களை எனது வீட்டிற்கு இரவு உணவிற்கு அழைக்கலாம், ஆனால் உணவு சமைத்து முடிக்கும் வரை அவர்களை வெளியே காத்திருக்க வைக்க வேண்டும்,' என்று கூறியிருந்தார்.
இவரது பதிவு வைரலான நிலையில், தனக்கு நேர்ந்த அசவுகரியங்கள் குறித்த தகவல்களை வெளியிடாத ஹர்ஷா போக்ளே விமானம் புறப்படும் நேரத்தை தாண்டி காத்திருக்க வேண்டியிருந்ததாக புகார் கூறினார்.
இதுதொடர்பாக ஹர்ஷா போக்ளேவின் பதிவை மேற்கொள் காட்டி, விமானத்தில் மாற்றுத்திறனாளி பயணிகள் சக்கர நாற்காலி மூலம் விமானத்தில் ஏற்ற ஊழியர்கள் முன்னுரிமை அளித்தனர். இதனால் தாமதம் ஏற்பட்டதற்கு விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
மேலும், ரன்வேயில் வாகனங்கள் மற்றும் விமானங்களின் இயக்கத்தைப் பொறுத்து, தொலைதூர விமானத்தில் ஏறுவதற்கு சில சமயங்களில் கால தாமதம் ஆகலாம் என்று விமான நிறுவனம் விளக்கம் அளித்தது. இது குறித்த பதிவில், "உங்கள் ஆதரவிற்கு நன்றி. உங்களுக்கு இனிமையான விமான பயணம் கிடைத்ததாக நம்புகிறோம்! விரைவில் உங்களுக்கு மீண்டும் சேவை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறோம்," என்று கூறியுள்ளது.