என் மலர்
நீங்கள் தேடியது "கூட்டிக்கல் ஜெயச்சந்திரன்"
- நடிகர் ஜெயச்சந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
- கைது செய்யப்பட்டால் ஜாமீனில் விடுவிக்கவும் ஆணை பிறப்பித்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் கூட்டிக்கல் ஜெயச்சந்திரன். பிரபல மலையாள நடிகரான இவர், ஒரு சிறுமியை பாலியல் ரீதியான துன்புறுத்தியதாக கடந்த ஆண்டு புகார் கூறப்பட்டது. அதன்பேரில் நடிகர் ஜெயச்சந்திரன் மீது கோழிக்கோடு போலீசார், போக்சோ வழக்கு பதிந்தனர்.
இந்த வழக்கில் இருந்து முன்ஜாமீன் வழங்குமாறு நடிகர் ஜெயச்சந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நடிகர் ஜெயச்சந்திரனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. நடிகர் கைது செய்யப்பட்டால் ஜாமீனில் விடுவிக்கவும் சுப்ரீம் கோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது.

மேலும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், விசாரணை அதிகாரிகள் அழைக்கும் போது நேரில் ஆஜராக வேண்டும் என்று நடிகருக்கு உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட்டு, ஜாமீன் நிபந்தனைகளை பின்பற்றப் படாவிட்டால் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை தலையிடலாம் என்றும் கூறியிருக்கிறது.