என் மலர்
நீங்கள் தேடியது "பட்டோடி டிராபி"
- இங்கிலாந்து மண்ணில் இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடர் பட்டோடி கோப்பை என அழைக்கப்படுகிறது.
- இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இங்கிலாந்து மண்ணில் இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடர் 2007-ம் ஆண்டு முதல் பட்டோடி கோப்பை என்று அழைக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பட்டோடி கோப்பைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஓய்வு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது ஆஸ்திரேலியா-இந்தியா மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை போல இந்தியா-இங்கிலாந்து நாடுகளை சேர்ந்த 2 ஜாம்பவான்களின் பெயரில் புதிய கோப்பையை உருவாக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது.
இந்த நிலையில் இந்த முடிவுக்கு இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பட்டோடி கோப்பைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஓய்வு கொடுக்க உள்ளதாக வந்துள்ள தகவல்கள் ஏமாற்றம் அளிக்கிறது. இங்கிலாந்தின் இந்த முடிவு பற்றி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த முடிவு இந்தியா-இங்கிலாந்து ஆகிய 2 கிரிக்கெட்டுக்கும் பட்டோடிகள் ஆற்றிய பங்களிப்பிற்கு முழுமையான பதில் உணர்த்திறன் இல்லாததைக் காட்டுகிறது. சமீபத்திய வீரர்களின் பெயரில் புதிய கோப்பையை உருவாக்குவதற்காக இங்கிலாந்து வாரியம் எந்த இந்திய வீரரையாவது அணுகினால் அவர்கள் அதை மரியாதையுடன் மறுக்க வேண்டும்.
இது நமது 2 முன்னாள் கேப்டன்களின் மரியாதைக்காக செய்யப்பட வேண்டிய ஒன்று. வேண்டுமானால் அந்தக் கோப்பையின் பெயரில் இங்கிலாந்து தங்கள் நாட்டின் ஒரு வீரர் பெயரை இணைத்துக் கொள்ளலாம். அதை இந்தியர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். ஆனால் பட்டோடி வரலாறு மீண்டும் பேசப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி பெயரில் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டு வந்தது.
- இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பட்டோடி கோப்பையை 'ஓய்வு' செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் தொடரிலிருந்து இது நடைமுறைக்கு வரக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2007-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் வாகை சூடும் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி பெயரில் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டு வந்தது.
இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இருந்து புதிய கோப்பை அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோப்பையை ஓய்வு பெறுவதற்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் இரு நாடுகளிலிருந்தும் சமீபத்திய ஜாம்பவான்களின் பெயர்களைக் கொண்ட மற்றொரு கோப்பை உருவானால் அது ஆச்சரியமாக இருக்காது.