என் மலர்
நீங்கள் தேடியது "ஆஸ்திரேலிய ஒப்பந்த பட்டியல்"
- ஆரோன் ஹார்டி, டாட் மர்ஃபி மற்றும் சீன் அபோட் ஆகியோர் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
- ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிக்காமல் உள்ள கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 2025-26-ம் ஆண்டிற்கான வீரர்கள் மத்திய ஒப்பந்தத்தை இன்று அறிவித்துள்ளது. மொத்தம் 23 பேர் அடங்கிய இந்த மத்திய ஒப்பந்தத்தில் இளம் வீரர்கள் சாம் சாம் கான்ஸ்டாஸ், பியூ வெப்ஸ்டர், மேத்யூ குஹ்னேமன் ஆகியோர் முதல் முறையாக இடம்பிடித்துள்ளனர்.
இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் சாம் சாம் கான்ஸ்டாஸ் மற்றும் பியூ வெப்ஸ்டர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றவும் உறுதுணையாக இருந்தனர்.
அதேசமயம் மேத்யூ குஹ்னமேன் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற உதவினர். இதன் காரணமாக இவர்கள் மூவருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.
அதேசமயம் முன்னதாக மத்திய ஒப்பந்தத்தில் இடம்பிடித்திருந்த ஆரோன் ஹார்டி, டாட் மர்ஃபி மற்றும் சீன் அபோட் ஆகியோர் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் இளம் அதிரடி வீரர்கள் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், கூப்பர் கன்னொலி உள்ளிட்டோருக்கும் இந்த ஒப்பந்த பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிக்காமல் உள்ள கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ் ஆகியோரும் இந்த ஒப்பந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா ஆடவர் ஒப்பந்தப் பட்டியல் 2025-26:
சேவியர் பார்ட்லெட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் சாம் கான்ஸ்டாஸ், மேத்யூ குஹ்னேமன், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், லான்ஸ் மோரிஸ், ஜெய் ரிச்சர்ட்சன், மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர், ஆடம் ஜாம்பா.