என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94389"

    • முருகனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
    • 6 நாட்களுக்கு தினசரி மாலை 6.30 மணியளவில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில், எல்.கே.சி நகர் புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி விழா முதல் நாளான நேற்று முருகனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    நேற்று செவ்வாய் கிழமை முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு தினசரி மாலை 6.30 மணியளவில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • 110 மது பாட்டில்கள் 10 பீர் பாட்டில்கள் பறிமுதல்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நகர் பகுதியில் வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது கோயம்புத்தூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் அருகே விற்பனைக்காக மது பாட்டில்களை வைத்திருந்த திண்டுக்கல் மாவட்டம், சிலுவத்தூர் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் பாண்டியன் (வயது 43) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 110 மது பாட்டில்கள் 10 பீர் பாட்டில்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    • எல். கே. சி. நகர் புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
    • சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் எல். கே. சி. நகர் புற்றுக்கண்ஆனந்த விநாயகர் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு பெளர்ணமி முன்னிட்டு சிறப்பு அலங்காரம், தேன், பன்னீர், பஞ்சாமிரம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம்,பூ அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்டஅனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை எல்.கே.சி., நகர் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிபதி கண்ணன் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.
    • வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் கண்ணனை தேடி வந்தனர்

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 2017 ம் ஆண்டு வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட வந்த வெள்ளகோவில், திருவள்ளூர் நகர் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் கண்ணன் (40) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த மார்ச் 14ந்தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிபதி கண்ணன் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.

    அதன் பேரில் காங்கயம் போலீஸ் துணை சூப்பிரெண்ட் பார்த்திபன் உத்தரவின் பேரில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட கண்ணனை தேடி வந்தனர். இந்நிலையில் கொளைளயன் கண்ணனை நேற்று மூலனூர் அருகே போலீசார் கைது செய்து காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    • வெள்ளகோவில் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்ட் மேற்பார்வையில், போலீஸஇன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்
    • ராமகிருஷ்ணன் என்பவரது மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நகர் பகுதியில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில், காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்ட் பார்த்திபன் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், வெள்ளகோவில் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் பாலமுருகன் ஆகியோர் நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது வெள்ளகோவில், இந்திரா நகர் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவரது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்து ரூ 5 ஆயிரம் அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்தனர்.

    அதேபோல் வெள்ளகோவிலில், மூலனூர் ரோட்டில் பிரபாகரன் என்பவரது டீக்கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 10 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கைப்பற்றி பிரபாகரனை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வெள்ளகோவில் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய புகையிலை மற்றும் குட்கா, கான்ஸ் மற்றும் கஞ்சா போன்றவற்றை யாரேனும் வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ சட்டப்படி கடுமையாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி தெரிவித்துள்ளார்.

    • நாமக்கல் பகுதியில் சேர்ந்த இளஞ்செல்வன் (35) என்பவரை அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    நாமக்கல் பகுதியில் சேர்ந்த இளஞ்செல்வன் (35) என்பவர் வெள்ளகோவிலில், முத்தூர் ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து வந்தார், இந்நிலையில் இன்று அதிகாலை முத்தூர் ரோட்டில் உள்ள ஒரு வங்கி அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதனால் இளஞ்செல்வன் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். உடனே தகவல் அறிந்த போலீசார் இளஞ்செல்வன் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆசிரியர்கள் சங்கங்கள் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
    • கல்வி மாவட்டம் ஒதுக்குவதில் வெள்ளகோவில் வட்டாரத்தை திருப்பூர் கல்வி மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வட்டாரத்தை தாராபுரம் கல்வி மாவட்டத்திலேயே சேர்க்க ஆசிரியர்கள் சங்கங்கள் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளகோவில் வட்டாரத்தில் உள்ள ஆசிரியர்கள் கூட்டணி சங்கம் சார்பில் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்ட கல்வித்துறை, கல்வி மாவட்டம் ஒதுக்குவதில் வெள்ளகோவில் வட்டாரத்தை திருப்பூர் கல்வி மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதை முன்பு இருந்த தாராபுரம் கல்வி மாவட்டத்திலேயே தொடர்ந்து செயல்பட உதவிட வேண்டுமாறு மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • 100வது ஆண்டு விழாவையொட்டி மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
    • போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதார துறையின் 100வது ஆண்டு விழாவையொட்டி மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்களுக்கு பேச்சுப்போட்டி, பட்டிமன்றம், கோலப்போட்டி, அடுப்பு இல்லா சமையல், இசை நாற்காலி, ஓட்டப்பந்தயம், சதுரங்கப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தனர்.

    செப்டம்பர் 29 உலக இருதய தினத்தை முன்னிட்டு நோயாளிகளுக்கு மருத்துவர்கள் நோயாளிகளுக்கு இருதயத்தை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக் கொள்வது, ரத்த அழுத்தத்தை எவ்வாறு கட்டுக்குள் வைத்துக் கொள்வது உணவு பழக்க வழக்கங்கள் குறித்து எடுத்துக் கூறினர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி செய்திருந்தார்.

    • 116 விவசாயிகள் கலந்து கொண்டு 86ஆயிரத்து 531கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.54.29க்கும், குறைந்தபட்சம் ரூ.44.26க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    வியாழக்கிழமை 116 விவசாயிகள் கலந்து கொண்டு 86ஆயிரத்து 531கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 12 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.54.29க்கும், குறைந்தபட்சம் ரூ.44.26க்கும் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ. 44லட்சத்து 49ஆயிரத்து 37க்கு வணிகம் நடைபெற்றது.விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை புதன்கிழமை காலை 6 மணி முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம் என வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
    • ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

    வெள்ளகோவில் :

    பொது சுகாதாரத்துறை ஆரம்பிக்கப்பட்டு தற்போது 100வது ஆண்டு நடைபெறுவதால், சுகாதாரத் துறை சார்பில் 100வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நேற்று வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. அதை தொடர்ந்து இந்த வாரத்தில் தினசரி ஒரு நிகழ்வாக மருத்துவர் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கு கபடி போட்டி, இசை நாற்காலி, பேச்சு போட்டி, கோலப்போட்டி, சதுரங்க போட்டி, ஆரோக்கியமான குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பது ஆண்களா பெண்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி மற்றும் மருத்துவர் கார்த்திகா, சுகாதார மேற்பார்வை யாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் கதிரவன், வேல்முருகன் உட்பட வெள்ளகோவில், கம்பளியம்பட்டி, முத்தூர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • குறுக்குபாளையம் என்ற இடத்தில் குளம் உள்ளது.
    • விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் குழாய் நீர் நிலை உயரும்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள குறுக்குபாளையம் என்ற இடத்தில் குளம் உள்ளது. இந்த குளத்திற்கு மழைக்காலங்களில் வெள்ளகோவிலில் இருந்து வரும் மழை நீர் மூலனூர் ரோடு, சின்னக்கரை வழியாக குறுக்குபாளையத்தில் உள்ள குளத்திற்கு வந்து சேரும்.இந்த குளத்தில் தண்ணீர் நிற்பதால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் குழாய் நீர் நிலை உயரும். தற்போது குளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது.

    இந்தநிலையில் குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீன்கள் இறந்தது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மோட்டார் சைக்கிளுடன் தலையில் பலத்த அடிபட்ட நிலையில் கீழே கிடந்துள்ளார்.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள மூத்தநாயக்கன் வலசு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 62) . இவர் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் கரட்டுப்பாளையம்- மயில்ரங்கம் ரோட்டில் மோட்டார் சைக்கிளுடன் தலையில் பலத்த அடிபட்ட நிலையில் கீழே கிடந்துள்ளார்.

    இதை கண்ட அந்த வழியாக சென்ற நபர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து அவரது உறவினர்கள் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து சுப்பிரமணி தனது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்தாரா? அல்லது ஏதேனும் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×