search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95440"

    ஏற்கனவே ராயுடுவின் ட்வீட் குறித்து சென்னை அணி சி.இ.ஓ காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்திருந்தார்.
    மும்பை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வுப்பெறப்போவதாக கடந்த மே 14-ஆம் தேதி ட்விட்டரில் அறிவித்துவிட்டு பதிவை உடனே நீக்கினார். இதுகுறித்து சென்னை அணி சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறுகையில், 'ராயுடு கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடாததால் மன உளைச்சலில் இருந்தார். அதனால் அவ்வாறு ட்வீட் செய்து பின் நீக்கிவிட்டார். அவர் தொடர்ந்து அணியில் இடம்பெறுவார்' என கூறினார்.
    இதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியில் ராயுடு இடம்பெறவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சென்னை அணி தலைமை பயிற்சியாளர் ஃபிளெமிங் விளக்கம் அளித்துள்ளார். 
    அவர் கூறுகையில், ராயுடு கடந்த சில நாட்களாக தனிப்பட்ட காரணங்களுக்காக மன உளைச்சலில் இருந்தார். இப்போது அவர் சரியாகிவிட்டார். அவர் அணியில் தொடர்ந்து இடம்பெறுவார். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர வீரராக திகழ்ந்த சுரேஷ் ரெய்னாவை கழற்றிவிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வரும் ஐ.பி.எல். 20 ஓவர் போட்டித் தொடரில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடத்தப்படுகிறது.

    அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் வருகிற ஏப்ரல் 2-ந்தேதி சென்னையில் தொடங்குகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    அதற்கு முன்பாக வீரர்கள் மெகா ஏலம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்த பட்சம் ஒரு வெளிநாட்டு வீரர் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் டோனி தக்க வைக்கப்படுவது ஏற்கனவே உறுதியாகி விட்டது. மற்ற 3 வீரர்கள் யார்? என்பதில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்படும் 3 வீரர்களின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. ஆல்ரவுண்டர் ரவீந்தர ஜடேஜா, தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ஆகியோர் தக்கவைக்கப் படுவார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    வெளிநாட்டு வீரர்களில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி தக்க வைக்கப்படலாம். அவர் சென்னை அணியில் இடம்பெற விரும்பவில்லை என்றால் இங்கிலாந்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் சாம் கர்ரன் 4-வது வீரராக தக்க வைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    அதேபோல் மற்றொரு தொடக்க வீரரான டூபெலிசிஸ் தக்கவைக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர வீரராக திகழ்ந்த சுரேஷ் ரெய்னா சமீபத்தில் நடந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து கழற்றி விடப்படுவார் என்று தெரிகிறது. இதையடுத்து அவரது பெயர் ஏலம் பட்டியலில் இடம் பெறும்.

    டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கேப்டன் ரி‌ஷப் பண்ட், அக்‌ஷர்படேல், பிரித்வி ஷா, நார்ஜே ஆகியோரும், மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா, பும்ரா ஆகியோரும் தக்க வைக்கப்படுகிறார்கள். அந்த அணியில் பொல்லார்டும், இஷான்கி‌ஷனும் தக்க வைக்கப்பட வாய்ப்பு உள்ளது. சூர்யகுமார் யாதவை ஏலத்தில் எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி திட்டமிட்டுள்ளது.

    புதிய அணியான லக்னோவுக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

    அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் மேலும் புதிய அணிகள் இணைவதால் போட்டி மிகவும் உற்சாகமாக இருக்கும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.
    சென்னை:

    14வது ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர்  கிங்ஸ் அணி வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பேசியதாவது:-

    சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் விளையாடுவதைப் பார்க்க நீங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். அதற்கான தருணம் வெகு தொலைவில் இல்லை. ஐபிஎல் 15வது சீசன் இந்தியாவில் நடைபெறவுள்ளது. மேலும் புதிய அணிகள் இணைவதால் போட்டி மிகவும் உற்சாகமாக இருக்கும். புதிய அணிகள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க ஒரு மெகா ஏலம் நடைபெறவிருக்கிறது.

    பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கான பெருமை அணியின் உரிமையாளர் சீனிவாசனையே சேரும். இக்கட்டான காலங்களில் அணிக்கு ஆதரவாக நின்றார். இதேபோல் காசி விஸ்வநாதன் அணியை ஒன்றிணைக்கும் பசை போன்றவர். ஒவ்வொரு சீசனிலும் அவர் அணியை வழிநடத்தினார்.

    டோனி போன்ற கேப்டன் இருக்கும்போது, சென்னை சூப்பர் கிங்சை எப்படி எளிதாக எடுத்துக்கொள்ள முடியும்? அணியின் இதயத்துடிப்பு மற்றும் முதுகெலும்பு டோனி. இந்தியா இதுவரையில் உருவாக்கிய மிக வெற்றிகரமான கேப்டன். அவர் ஏற்படுத்திய பிணைப்பு, அவர் உருவாக்கிய மரபு நிலைத்து நிற்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    பாகிஸ்தானுக்கு எதிராக 93 பந்தில் 128 ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு வெற்றியைத் தேடிக்கொடுக்க ஐபிஎல் மிகப்பெரிய உதவியாக இருந்தது என பேர்ஸ்டோவ் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவ். இவர் முதன்முறையாக இந்த சீசனில் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடினார். 10 போட்டிகளில் 445 ரன்கள் குவித்து அசத்தினார். சராசரி 55.62 ஆகும். ஆர்சிபி-க்கு எதிராக சதம் விளாசினார்.

    தற்போது இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது.

    பேர்ஸ்டோவ் 93 பந்தில் 128 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடியது மிகப்பெரிய உதவியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து பேர்ஸ்டோவ் கூறுகையில் ‘‘ஐபிஎல் தொடரில் விளையாடுவதன் மூலம் மாறுபட்ட பயிற்சியாளர்கள், மாறுபட்ட வீரர்களிடம் இருந்து பல்வேறு மாறுபட்ட விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அதில் சிறிய அளவில் போட்டியின் திட்டங்களும் இருக்கும்.

    டேவிட் வார்னர் முற்றிலும் மாறுபட்ட பகுதிகளில் பந்தை விரட்டக்கூடியவர். இது வேறெங்கும் இல்லாத முறை. இதில் இருந்து வார்னர் போன்ற வீரர்கள் இருக்கும்போது, நெருக்கடியான நிலையில் எப்படி சிறப்பாக விளையாட முடியும் என்பதை கற்றுக் கொள்ளலாம்’’ என்றார்.
    வயதான வீரர்களை கொண்ட அணி என்று அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களை மாற்றியமைப்பது அவசியம் என பிளெமிங் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டோடு 12 சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ளது. 10 வருடங்கள் முடிந்து கடந்த வருடம் 11-வது சீசனின்போது வீரர்கள் அனைவரும் பொது ஏலம் மூலம் எடுக்கப்பட்டனர். நான்கு வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரையும் 8 அணிகள் ஏலம் மூலமே எடுத்தது.

    டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும்பாலும் அனுபவ வீரர்களை தேர்வு செய்தது. இதனால் ‘Daddy Army’ என்றும் ‘Ageing Squad’ என்றும் அழைத்தனர். ஆனால் இதைப்பற்றி கவலைப்படாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரை சந்தித்தது.

    கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த சீசனில் இறுதிப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தழுவவிட்டது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சராசரியே 34 ரன்கள்தான். இதனால் அணியில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் என தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில் ‘‘இறுதிப் போட்டி தோல்வி குறித்த காயம் குறைய சற்று நேரம் கொடுக்க வேண்டும். நாங்கள் ஒருமுறை வெற்றி பெற்றுள்ளோம். 2-வது முறை இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளோம். இரண்டு வருடங்கள் சிறப்பாக அமைந்துள்ளது. சிஎஸ்கே ஒரு ‘Ageing Team’ என்பதை நாஙகள் புரிந்துகொள்ள வேண்டும்.

    மீண்டும் சிறந்த அணியை உருவாக்க வேண்டும் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும். டோனியும் இதே எண்ணத்தில் உள்ளார். டோனி உலகக்கோப்பை தொடரில் விளையாட செல்கிறார். உலகக்கோப்பை தொடர் முடிந்த பின்னர் அடுத்த சீசன் குறித்து திட்டமிடப்படும்’’ என்றார்.
    பிரபலமான கிரிக்இன்போ இணையதளம் வெளியிட்டுள்ள ஐபிஎல் 2019 சீசன் கனவு அணிக்கு எம்எஸ் டோனி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    12-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி பரபரப்பான இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை 1 ரன்னில் தோற்கடித்து 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.

    இந்த ஐபிஎல் போட்டியையொட்டி கிரிக்கெட் இணைய தளமான ‘கிரிக்இன்போ’ கனவு அணியை வெளியிட்டுள்ளது. இந்த அணிக்கு டோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வீரர்கள் வருமாறு:-

    வார்னர் (ஐதராபாத்), தவான் (டெல்லி), லோகேஷ் ராகுல் (பஞ்சாப்), ரி‌ஷப் பந்த் (டெல்லி), எம்எஸ் டோனி (கேப்டன்- சென்னை), ரஸல் (கொல்கத்தா), ஹர்த்திக் பாண்டியா (மும்பை), ஷ்ரேயாஸ் கோபால் (ராஜஸ்தான்), ரபாடா (டெல்லி), பும்ரா (மும்பை), இம்ரான் தாஹிர் (சென்னை).
    மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றதைபோல், உலகக்கோப்பையிலும் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்ற விரும்புகிறேன் என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியில் இடம்பிடித்துள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    ஹெலிகாப்டர் ஷாட் மூலம் ரசிகர்களை மகிழ்வித்தார். 11 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதுடன், 402 ரன்கள் குவித்தார். ஸ்டிரைக் ரேட் 191 ஆகும்.

    ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதுபோல், உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே விருப்பம் எனத் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில் ‘‘இந்த ஐபிஎல் சீசனில் நான் சிறப்பாக விளையாடினேன். ஆனால், தற்போது இதில் இருந்து நகர்ந்து செல்ல வேண்டும். ஐபிஎல் கோப்பையை வென்று முத்தமிட்டதுபோல், உலகக்கோப்பையையும் வென்று முத்தமிட விரும்புகிறேன்’’ என்றார்.
    ஐபிஎல் கோப்பையை ஐந்து முறை கைப்பற்றிய ஒரே வீரர் என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
    ஐபிஎல் 2019 சீசன் இறுதிப் போட்டி நேற்றிரவு ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் ஹிட்மேன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - தல எம்எஸ் டோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் பலப்பரீட்சை நடத்தின.

    இதில் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்று கோப்பை 4-வது முறையாக கைப்பற்றியது. இந்த நான்கு முறையும் மும்பை இந்தியன்ஸ்  கேப்டனாக ஹிட்மேன் ரோகித் சர்மாவே இருந்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல் கோப்பையை நான்கு முறை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.



    மேலும், டெக்கான் சார்ஜர்ஸ் அணி 2009-ம் ஆண்டு கில்கிறிஸ்ட் தலைமையில் கோப்பையை வெல்லும்போது அந்த அணியில் இடம்பிடித்திருந்தார். அதன்பின் 2013, 2015, 2017, 2019 ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக கோப்பையை கைப்பற்றியுள்ளார்.

    இதன்மூலம் ஐந்து முறை கோப்பையை முத்தமிட்ட ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    பிராவோ வீசிய கடைசி ஓவரில் ‘வைடு’ கொடுக்காததால் நடுவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்த பொல்லார்டுக்கு 23 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    ஐபிஎல் 2019 சீசன் இறுதிப் போட்டி ஐதராபாத்தில் நேற்றிரவு நடைபெற்றது. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளம் என்று கணிக்கப்பட்டதால் மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நேர்த்தியான பந்து வீச்சால் மும்பை இந்தியன்ஸ் ரன் குவிக்க திணறியது. அதிரடி பேட்ஸ்மேன் பொல்லார்டு கடைசி வரை நின்று ஸ்கோரை முடிந்த அளவிற்கு உயர்த்தினார். 19 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி ஓவரை வெயின் பிராவோ வீசினார். முதல் பந்தில் ரன்ஏதும் எடுக்கவில்லை. 2-வது பந்தை வலது பக்கம் வைடாக வீசினார். பொல்லார்டு பேட்டை சுழற்றினார். ஆனால் பேட் பந்தில் படவில்லை. பொல்லார்டு பேட்டை சுழற்றாமல் இருந்திருந்தால் அந்த பந்து வைடாக கருதப்பட்டிருக்கும்.

    3-வது பந்தையும் அதேபோல் பிராவோ வீசினார். இந்த முறை பொல்லார்டு பேட்டை சுழற்றவில்லை. பந்து வைடாக சென்றது. ஆனால், நடுவர் ‘வைடு’ கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் பொல்லார்டு கடுங்கோபம் அடைந்தார். தனது பேட்டை மேல்நோக்கி வீசினார்.

    பின்னர் அடுத்த பந்தை பிராவோ வீச ஓடிவந்தார். பொல்லார்டு வலது பக்கம் நடந்து சென்றார். இதனால் பிராவோ பந்து வீசுவதை நிறுத்தினார். இரண்டு நடுவர்களுகம் பொல்லார்டு அருகில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் கடைசி இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் 25 பந்தில் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.



    பொல்லார்டு மைதானத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவது வழக்கம். ஆனால், யாரிடமும் பெரிய அளவில் வாக்குவாதம்  செய்யப்பட்டார். அவருக்கான ஸ்டைலில் எதிர்ப்பு தெரிவிப்பார். ஒருமுறை மைதானத்தில் அதிகமாக பேசக்கூடாது என நடுவர் எச்சரிக்க, வாயை டேப் வைத்து ஒட்டுக்கொண்டு விளையாடினார். நேற்றைய போட்டியில் பேட்டை வீசிய விதிமுறைக்கு மாறான என, ஐபிஎல் நிர்வாகம் அவருக்கு 25 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.
    ஐதராபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற எம்எஸ் டோனியின் ‘ரன்அவுட்’தான் திருப்புமுனை என சச்சின் தெரிவித்தார்.
    ஐதராபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 148 ரன்கள் அடித்து 1 ரன்னில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

    மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற டோனியின் ‘ரன்அவுட்’தான் திருப்புமுனை என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகரும், கிரிக்கெட் சகாப்தமுமான சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘டோனியின் ‘ரன்அவுட்’தான் ஆட்டத்தின் திருப்புமுனை. அதுவே முக்கியமான தருணம். பும்ராவின் பந்து வீச்சும் முக்கிய பங்கு வகித்தது. மலிங்கா ஒரு மோசமான ஓவரை வீசினார். ஆனால், கடைசி ஓவரை சிறப்பாக வீசினார். 2 ஆண்டுகளுக்கு முன்பு 124 ரன்களை வதை்து கோப்பையை வென்றோம். இதனால் எனக்கு நம்பிக்கை இருந்தது’’ என்றார்.
    சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்
    ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜயந்த் யாதவ் நீக்கப்பட்டு மெக்ளெனகன் சேர்க்கப்பட்டார். சென்னை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில் இரண்டு ரன் கொடுத்தார். அடுத்த ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் ரோகித் சர்மா ஒரு சிக்ஸ் விளாசினார். தீபக் சாஹர் வீசிய 3-வது ஓவரில்  டி காக் மூன்று சிக்ஸ் விளாசினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் 3 ஓவரில் 30 ரன்னைத் தொட்டது.

    டி காக் விஸ்வரூபம் எடுப்பார் என்று நினைக்கையில், சர்துல் தாகூர் வீசிய ஐந்தாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 17 பந்தில் 4 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். அடுத்த ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹிட்மேன் ரோகித் சர்மா எம்எஸ் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் 5.2 ஓவரில் 45 ரன்களாக இருந்தது.



    3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். தொடக்க ஜோடி ஆட்டமிழந்ததும், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் அப்படியே படுத்துவிட்டது. அந்த அணி 7 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது.

    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சூர்யகுமார் யாதவ் 15 ரன்னிலும், இஷான் கிஷன் 23 ரன்னிலும், குருணால் பாண்டியா 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மும்பை 14.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.  3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் - இஷான் கிஷன் ஜோடி 36 பந்தில் 37 ரன்களே எடுத்தது.

    6-வது விக்கெட்டுக்கு பொல்லார்டு உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். அப்போது 14.4 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்தது.

    பொல்லார்டு அவ்வப்போது சிக்ஸ் தூக்கி மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. 18-வது ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்ஸ் தூக்கினர். 19-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். முதல் பந்தை ஹர்திக் பாண்டியா சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 18.2 ஓவரில் 140 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது பந்தில் சாஹர் ஆட்டமிழந்தார். கடைசி 4 பந்திலும் சாஹர் ரன் விட்டுக்கொடுக்கவில்லை.



    கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ரன்கள் விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.  பொல்லார்டு 25 பந்தில் தலா மூன்று பவுண்டரி, 3 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்
    ஐபிஎல் 2019 சீசன் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
    ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் மெக்ளெனகன் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றம் ஏதுமில்லை



    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:-

    1. வாட்சன், 2. டு பிளிசிஸ், 3. ரெய்னா, 4. அம்பதி ராயுடு, 5. எம்எஸ் டோனி, 6. ஜடேஜா, 7. பிராவோ, 8. ஹர்பஜன் சிங், 9. இம்ரான் தாஹிர், 10. தீபக் சாஹர், 11. சர்துல் தாகூர்.

    மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்:-

    1. டி காக், 2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ், 4. குருணால் பாண்டியா, 5. ஹர்திக் பாண்டியா, 6. பொல்லார்டு, 7. ராகுல் சாஹர், 8. மலிங்கா, 9. பும்ரா, 10. மெக்ளெனகன் 11. இஷான் கிஷன்.
    ×