என் மலர்
நீங்கள் தேடியது "slug 95579"
- திடீர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது.
- பருவநிலை மாற்றம் காரணமாக இத்தகைய தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகமாவதாக நிபுணர்கள் தகவல்
பீஜிங்:
சீனாவில் பரவலாக கோடைவெப்பம் வாட்டி வரும் நிலையில், நேற்று திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதன்காரணமாக தென்மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஒன்றரை நாளில் 98.9 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் பெய்யும் சராசரி மழையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
இந்த திடீர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. மழை வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
பருவநிலை மாற்றத்தின் காரணமாக இத்தகைய தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகமாகி வருகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வெப்பமான காற்று அதிக நீரைச் சேமித்து வைக்கும். அது வெளியிடப்படும் போது பெரிய மேக வெடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறி உள்ளனர்.
- சீனா 2014 மற்றும் 2018 -ம் ஆண்டுகளில் செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் தங்கம் வென்றுள்ளது.
- உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ஏற்கனவே ரஷியாவுக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
பீஜிங்:
சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக சீன அணி அறிவித்துள்ளது. ஆனால்,அதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இதற்கு முன்னதாக, 2014, 2018-ம் ஆண்டுகளில் செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவின் தங்கம் வென்றுள்ளது. குறிப்பாக, சீன மகளிர் அணியினர் இதற்கு முன் நடந்த இரண்டு தொடர்களிலும் தங்கம் வென்றிருந்தனர்.
உக்ரைன் மீது போர் தொடுத்ததன் காரணமாக ஏற்கனவே ரஷியா அணிக்கு செஸ் ஒலிம்பியாட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு தங்க பதக்க வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.
- கொரோனாவை கட்டுப்படுத்த, மதுக்கடைகள், திரையரங்குகள் மூடப்பட்டன.
- 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
பெய்ஜிங்
கொரோனா முதன்முறையாக பரவிய சீனாவில் கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்நாட்டில் மொத்தம் 2,25,487பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சீனாவின் தென் கடற்கரை நகரமான மக்காவ்வில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதை அடுத்து அங்குள்ள 12க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அந்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாக சைனா டெய்லி இதழ் தெரிவித்துள்ளது
அந்த நகரத்தில் 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மதுக்கடைகள், திரையரங்குகள், சலூன்கள், பூங்காக்கள் மூடப்பட்டன. மக்காவோ நகரத்தில் 600,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களிடம் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்கள் புதிய தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
- பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் நாடுகளுடன் சீனாவிற்கு கடல்சாா்ந்த பிரச்சினை உள்ளது.
- அமெரிக்கா ஆசிய நாடுகளிடம் அச்சத்தை உருவாக்கி, தென் சீனக் கடல் பகுதிகளில் போர்க் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை நிறுத்துகிறது.
பெய்ஜிங்:
சீனாவுக்கு ஆசிய நாடுகள் தரும் ஆதரவை அபகரிக்க அமொிக்கா முயற்சிப்பதாக சீனாவின் பாதுகாப்பு மந்திரி வெய் ஃபெங்க் குற்றம் சாட்டி உள்ளாா்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பன்முகத்தன்மை என்ற போா்வையில் அமெரிக்கா தனது நாட்டின் நலன்களை பிற நாடுகளின் மீது திணிக்கிறது. எந்த நாடும் தன் விருப்பத்தை மற்ற நாடுகள் மீது திணிக்கக்கூடாது, பிற நாடுகளை கொடுமைப்படுத்த கூடாது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிா்ப்பதற்காக, இந்தோ-பசிபிக் என்ற பெயரில் ஒரு சிறிய அமைப்பை அமெரிக்கா உருவாக்கும் முயற்சி, ஆசிய நாடுகள் சீனாவுக்கு தரும் ஆதரவை பறிக்கும் முயற்சியே ஆகும்.
இது மற்றவர்களைக் கட்டுப்படுத்தவும் மோதலையும் உருவாக்குவதற்கான ஒரு உத்தியாகும். சீனா தனது ராணுவத்தை விரைவாக நவீனப்படுத்தி வருகிறது. சமீபத்தில் சீனா, சாலமன் தீவுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது. இது பசிபிக் கடற்பகுதியில் சீன கடற்படை தளம் உருவாகலாம் என்ற அச்சத்தை அமெரிக்கா உருவாக்கி, தென் சீனக் கடல் பகுதிகளில் போர்க் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அமெரிக்கா நிறுத்துகிறது. இது எங்கள் பிராந்திய விவகாரங்களில் தலையிடுவதாகும்.
பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் நாடுகளுடன் சீனாவிற்கு கடல்சாா்ந்த பிரச்சினை உள்ளது. இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தங்கள் கடல் சாா்ந்த பிரச்சினைகளை தாங்களாகவே தீா்த்து கொள்ள வேண்டும். தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே சீனாவை எதிர்க்கும் போர்வையில் தைவானுக்கு ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இவ்வாறு சீனா பாதுகாப்பு மந்திரி கூறினார்.
- கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர்தான் தளர்த்தப்பட்டன.
- பீஜிங்கில் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்தது.
பீஜிங் :
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்தது. நாட்டில் வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து இல்லாத அளவுக்கு தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு பதிவாகி வந்தது. இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பீஜிங்கில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர்தான் தளர்த்தப்பட்டன. இந்த நிலையில் பீஜிங்கில் புதிய கொரோனா அலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பீஜிங்கில் அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் இரவுநேர கேளிக்கைகள், 'ஷாப்பிங்' உள்ளிட்டவற்றுக்கு பெயர்பெற்ற சாயோயாங் மாவட்டத்தில் தொற்று பரவலின் வேகம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
குறிப்பாக அங்குள்ள பிரபலமான மதுபான விடுதி ஒன்று கொரோனா பரவலின் மையமாக உருவெடுத்துள்ளதாகவும், அந்த மதுபான விடுதிக்கு சென்ற பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இதனிடையே சீனாவின் வர்த்தக தலைநகரமாக கருதப்படும் ஷாங்காயில் ஒரு அழகு நிலையம் மூலம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, அங்கு மிகப்பெரிய அளவில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.
- டாங்ஷான் நகரில் போலீஸ் வன்முறை தாக்குதல் மற்றும் பிரச்சினையைத் தூண்டுதல் ஆகிய சந்தேகத்தின் பேரில் போலீசார் எட்டு பேரைக் கைது செய்தனர்.
- தலைமறைவான மற்றொரு நபரைத் தேடும் பணி நடந்து வருகிறது.
வட சீனாவின் ஹெபெய் மாகாணாத்தில் உள்ள பார்பிக்யூ உணவகத்தில் பெண்கள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆண் நபர் ஒருவர் பெண்ணின் முதுகில் கை வைத்துள்ளார். அந்த பெண் நபரை தள்ளிவிட்டுள்ளார்.
இதைக்கண்ட மற்ற நபர்கள் பெண்ணை இழுத்து தரையில் தள்ளி சரமாரியாக அடித்துள்ளனர். மற்றொரு பெண் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இததொடர்பாக, டாங்ஷான் நகரில் போலீஸ் வன்முறை தாக்குதல் மற்றும் பிரச்சினையைத் தூண்டுதல் ஆகிய சந்தேகத்தின் பேரில் போலீசார் எட்டு பேரைக் கைது செய்தனர். தலைமறைவான மற்றொரு நபரைத் தேடும் பணி நடந்து வருகிறது.
சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்த பெண்கள் இருவரையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சகிச்சைப் பெற்று வரும் நிலையில் இருவரும் நலமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சில நாடுகள் சீனாவைக் கட்டுப்படுத்த தைவானை பயன்படுத்துவது ஒருபோதும் வெற்றிபெறாது என தெரிவித்துள்ளார்.
- தைவானை சீனா நாட்டின் ஒரு பகுதியாக கருதுகிறது என்றும் தெரிவித்தார்.
பெய்ஜிங்:
சீனாவின் எல்லையில் அமைந்துள்ள தைவான் மீது சீனா படையெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஷங்ரி-லா பாதுகாப்பு உச்சிமாநாட்டில் அமெரிக்கப் பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் , சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் தைவான் பிரச்சினையை பற்றி இருவரும் விவாதித்தனா். அப்போது அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின், தைவான் நாட்டை சீா்குலைக்கும் நடவடிக்கையை சீனா தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த வெய் ஃபெங், தைவானை சீனா நாட்டின் ஒரு பகுதியாக கருதுகிறது. தைவானை சீனாவில் இருந்து பிரிக்க துணிந்தால் அதன் மீது போர் தொடுக்கவும் சீனா தயங்காது. மேலும், சில நாடுகள் சீனாவைக் கட்டுப்படுத்த தைவானை பயன்படுத்துவது ஒருபோதும் வெற்றிபெறாது. தைவானின் சுதந்திரம் என்னும் சதியை முறியடித்து நாட்டின் ஒருங்கிணைப்பை சீனா உறுதிசெய்யும்.
இவ்வாறு சீன அமைச்சர் தெரிவித்தார்.
- இலங்கைக்கு இந்தியா ரூ.20,000 கோடி மதிப்பிலான நிதி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் உதவிகளை வழங்கியுள்ளது.
- இதைத்தவிர ரூ.2000 கோடி மதிப்பிலான மருத்துவ உதவிகளையும் இந்தியா வழங்கியுள்ளது.
பெய்ஜிங்:
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர். இதை தொடர்ந்து அந்நாட்டு அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளன. இருப்பினும் பொருளாதார பிரச்சனைகள் மட்டும் தீரவில்லை.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா பல்வேறு கடனுதவிகளை வழங்கி வருகிறது. ரூ.20,000 கோடி மதிப்பிலான நிதி மற்றும் அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது. இதைத்தவிர 2000 கோடி ரூபாய் அளவிலான மருத்துவ உதவிகளையும் இந்தியா வழங்கி இருக்கிறது.
இந்தியாவின் இந்த உதவிகளை பாராட்டுவதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீனா வெளியுறவுத்துறை மந்திரி ஜாவோ லிஜியன் கூறியதாவது:-
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிகளை நாங்கள் அறிவோம். அதை சரி செய்வதற்கு இந்தியா எடுக்கும் முயற்சிகளையும் நாங்கள் குறித்து வைத்திருக்கிறோம். அவற்றை பாராட்டவும் செய்கிறோம். இந்தியா மற்றும் உலக நாடுகளுடன் இணைந்து, இலங்கை மற்றும் கடினமான சூழலை எதிர்கொள்ளும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவ சீனா தயாராக இருக்கிறது.
சீனாவும் இலங்கைக்கு தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. எங்களால் முடிந்த அளவிற்கு சீனாவின் சமூக- பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆதரவை வழங்கி வருகிறோம். 500 கோடி அளவிலான மனிதாபிமான உதவிகளையும் நாங்கள் வழங்குகிறோம்.
இவ்வாறு ஜாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.
- கான்சு மாகாணத்தில் உள்ள ஜியூகுவான் ஏவுதளத்தில் இருந்து இன்று, மார்ச்-2 எப் ராக்கெட் மூலம் இந்த விண்கலம் ஏவப்பட்டது. அவர்களை சுமந்து சென்ற விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சென்றது.
- சீனாவின் இந்த விண்வெளி நிலையம் தான் உலகில் செயல்படக் கூடிய ஒரே விண்வெளி மையமாக திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த விண்வெளி நிலையம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் உலகில் தனியாக விண்வெளி நிலையத்தை அமைத்த பெருமை சீனாவுக்கு கிடைக்கும்.
சமீபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் அடங்கிய விண்வெளி வீரர்கள்குழு தியாங்காங் விண்வெளி மையத்திற்கு சென்றனர். அவர்கள் 6 மாதம் அங்கு தங்கி இருந்து முக்கிய பாகங்களை பொருத்திவிட்டு கடந்த ஏப்ரல் மாதம் பத்திரமா கபூமிக்கு திரும்பினார்கள்.
விண்வெளி நிலையத்தில் இத்தனை காலங்கள் வீரர்கள் தங்கி இருந்தது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில் இறுதிகட்ட பணிகளை மேற்கொள்வதற்காக தற்போது மேலும் 3 பேர் கொண்ட விண்வெளி வீரர்கள் அடங்கிய குழுவினரை சீனா அனுப்ப முடிவு செய்தது.
இந்த குழுவில் காய்ஜூஷே, சென்டாங், லியூயாங் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். இவர்கள் இன்று காலை விண்வெளிக்கு சென்றுள்ளனர். சென்ஷோ -14 என்ற விண்கலம் மூலம் இவர்கள் விண்வெளி நிலையத்துக்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
கான்சு மாகாணத்தில் உள்ள ஜியூகுவான் ஏவுதளத்தில் இருந்து இன்று, மார்ச்-2 எப் ராக்கெட் மூலம் இந்த விண்கலம் ஏவப்பட்டது. அவர்களை சுமந்து சென்ற விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சென்றது.
இந்த விண்கலம் தியாங்காங் விண்வெளி நிலையத்தை அடைந்ததும் இந்த விண்கலம் அத்துடன் இணைக்கப்படும். அதில் இந்த குழுவினர் இறங்கி விண்வெளி நிலையத்தை முழுமையாக கட்டமைக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
சீனாவில் உள்ள சி.எம்.எஸ் ஏ ஆய்வு மையக்குழுவினர் வழிகாட்டுதலுடன் 6 மாதங்களில் விண்வெளி நிலைய பணிகளை அவர்கள் நிறைவு செய்வார்கள் என சீனா ஆய்வு மையத்தின் இணை இயக்குனர் லீன் ஜிகி யாங் தெரிவித்து உள்ளார்.
இன்னும் சில ஆண்டுக்குள் சர்வதேச விண்வெளி நிலையம் ஓய்வுபெற உள்ளது. அதன் பிறகு சீனாவின் இந்த விண்வெளி நிலையம் தான் உலகில் செயல்படக் கூடிய ஒரே விண்வெளி மையமாக திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்டுள்ள நாடு சீனா. ஆனால் அங்கு இப்போது குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.இந்த நிலையில் அங்கு இப்போது திருமணங்கள் செய்வதும் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 17 ஆண்டுகளாக தொடர்ந்து திருமண பதிவுகள் குறைந்துள்ளதாக சீன புள்ளியியல் ஆண்டு புத்தகம் காட்டுகிறது. நடப்பு 2021-ம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் அங்கு 58 லட்சத்து 70 ஆயிரம் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் குறைவுதான்.
இது தொடர்ந்து குறையும் என எதிர்பார்ப்பதாக சீன அரசு நாளிதழ் கூறி உள்ளது. சீனாவில் குழந்தைகள் பிறப்புவிகிதத்தை பொறுத்தமட்டில் அது கடந்த ஆண்டில் 0.85 சதவீதமாக இருந்தது. 1978-க்கு பின்னர் தொடர்ந்து பிறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கு கீழே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.