என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95897"
புதுடெல்லி:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டி உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 போட்டிகளை நடத்துகிறது.
2024 முதல் 2031-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. போட்டி விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டு இருந்தது.
2025-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.சி.சி.யின் பெரிய போட்டியை அந்த நாடு நடத்துகிறது.
கடைசியாக 1996-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பையை இந்தியா, இலங்கையுடன் இணைந்து பாகிஸ்தான் நடத்தி இருந்தது.
பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பங்கேற்குமா? என்பது தொடர்பாக மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாகூர் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கடந்த காலங்களில் பல நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்வதில் இருந்து விலகி இருந்தன. இது அனைவருக்கும் தெரியும். அங்கு விளையாடும் போது வீரர்கள் தாக்கப்பட்டனர். இது ஒரு பெரிய பிரச்சினையாகும்.
சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படும் போது பல்வேறு விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படும். நேரம் வரும்போது என்ன செய்வது என்று பார்ப்போம். பாதுகாப்பு நிலைமையை அப்போது மதிப்பீடு செய்து முடிவு செய்வோம்.
பாகிஸ்தான் செல்வது குறித்து மத்திய உள்துறை அமைச்சகமே முடிவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே நேரடி போட்டி தொடர் 2012-ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை நடைபெறவில்லை. ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் நேரடியாக மோதியுள்ளன.
2009-ம் ஆண்டு லாகூரில் இலங்கை வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக சர்வதேச போட்டிகள் நடத்த முடியவில்லை.
சமீபத்தில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் பயணத்தில் இருந்து கடைசி நேரத்தில் விலகின என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்...ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டியின் தலைவரானார் சவுரவ் கங்குலி
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டி உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 போட்டிகளை நடத்துகிறது.
2024 முதல் 2031-ம் ஆண்டுவரையிலான கால கட்டத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. போட்டி விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று அறிவித்தது.
2025-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.சி.சி.யின் பெரிய போட்டியை அந்த நாடு நடத்துகிறது.
கடைசியாக 1996-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பையை இந்தியா, இலங்கையுடன் இணைந்து பாகிஸ்தான் நடத்தி இருந்தது.
இந்த நிலையில் 2025 ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-
2025 ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பாகிஸ்தான் நடத்துவது மிகவும் பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. இந்த செய்தி பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் உலக ரசிகர்களை நிச்சயம் உற்சாகப்படுத்தும். நாங்கள் இந்த போட்டியை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி எங்களது திறமையை வெளிப்படுத்துவோம்.
இவ்வாறு ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.
‘ரவுண்ட் ராபின்’ முறை இந்த உலகக்கோப்பை தொடர் நடத்தப்படுவதால், 45 லீக் ஆட்டங்கள் நடைபெறும். அரையிறுதிகள் மற்றும் இறுதிப் போட்டி என 48 ஆட்டங்களாக நடத்தப்படுகின்றன.
இதற்கான டிக்கெட்டை ஐசிசி விற்பனை செய்து வருகிறது. ரசிகர்கள் எளிமையான வகையில் டிக்கெட்டுக்களை வாங்குவதற்கான வழிவகைகளை ஐசிசி செய்து கொடுத்துள்ளது. அதன் விளைவாக இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று ஐசிசி உலகக்கோப்பை தொடருக்கான இயக்குனர் ஸ்டீவ் எல்வோர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரசிகைகைள் டிக்கெட்டுக்கள் வாங்கியுள்ளனர். டிக்கெட் வாங்கியவர்களில் ஒரு லட்சம் பேர் 16 வயதிற்குட்பட்டோர் என தெரிவித்துள்ளார்.
12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன. 46 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் ஆட்டம் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு கடந்த முறை (2015) ரூ.26 கோடியும், 2-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.12 கோடியும் வழங்கப்பட்டது. தற்போது இந்த இரண்டு தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரைஇறுதியில் தோல்வி பெறும் அணிகளுக்கு ரூ.5 கோடியே 61 லட்சம் பரிசாக கிடைக்கும். இந்த தொகையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த உலக கோப்பை போட்டியில் அரைஇறுதியில் தோல்வி கண்ட அணிகளுக்கு ரூ.4 கோடியே 20 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
லீக் சுற்றில் அணிகளின் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.28 லட்சம் கிடைக்கும். லீக் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு ரூ.70 லட்சம் வழங்கப்படும்.
பாகிஸ்தான் பேட்டிங் செய்யும்போது இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. குறிப்பிட்ட நேரத்திற்குள் இரண்டு ஓவர்கள் குறைவாக வீசியிருந்தனர். இதனை போட்டி நடுவர் சுட்டிக்காட்டி கேப்டன் மோர்கனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதித்தார். அத்துடன் 40 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சக வீரர்களுக்கு தலா 10 சதவீதம் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.
மோர்கன் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் இதேபோன்று குறிப்பிட்ட நேரத்திற்குள் சில ஓவர்கள் குறைவாக வீசியிருந்தனர்.
ஒரு வருடத்திற்குள் இரண்டு முறை இப்படி நடந்தால் ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்படும். அதனடிப்படையில் மோர்கனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளைமறுநாள் நாட்டிங்காமில் நடைபெறும் 4-வது போட்டியில் மோர்கன் விளையாடமாட்டார்.
சச்சின் தனது சிறுவயது நண்பரான வினோத் காம்ப்ளி உடன் டி.ஒய். பாட்டீல் மைதானத்திற்கு சென்றார். அங்கு அமைத்திருந்த பயிற்சிக்கான இடத்தில் (Net Session) சச்சின் தெண்டுல்கர் பந்து வீசினார். வினோத் காம்ப்ளி அதை எதிர்கொண்டார்.
இந்த வீடியோவை சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் அப்லோடு செய்திருந்தார். அந்த வீடியோவில் சச்சின் க்ரீஸ்க்கு வெளியே வந்து பந்து வீசியது தெரிந்தது.
இதை சுட்டுக்காட்டி ஐசிசி, முன்னாள் அம்பயரான ஸ்டீவ் பக்னர் படத்தை அப்லோடு செய்து, நீங்கள் வீசியது நோ-பால் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
Felt great to be back in the nets with @vinodkambli349 during the @tendulkarmga lunch break!
— Sachin Tendulkar (@sachin_rt) May 11, 2019
It sure took us back to our childhood days at Shivaji Park... 🏏
Very few people know that Vinod & I have always been in the same team and never played against each other. #TMGApic.twitter.com/DzlOm12SKa
இந்த நிலையில் ராஞ்சி போட்டியில் இந்திய வீரர்கள் ராணுவ வீரர்களுக்குரிய தொப்பியை அணிந்ததற்கு பாகிஸ்தான் அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெமூத் குரேஷி கூறுகையில், ‘‘இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் அணிக்குரிய தொப்பியை தவிர்த்து ராணுவ தொப்பியை அணிந்து விளையாடியதை உலகமே பார்த்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இதை பார்க்கவில்லையா?. இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது ஐ.சி.சி.யின் பொறுப்பு’’ என்றார்.
பாகிஸ்தான் தகவல்துறை மந்திரி பவாத் சவுத்ரி, ‘‘ராணுவ வீரர்களின் தொப்பியுடன் இந்திய வீரர்கள் வலம் வந்த புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘‘இது வெறும் கிரிக்கெட் அல்ல. ஜென்டில்மேன் விளையாட்டில் அரசியல் கலக்கப்பட்டு இருக்கிறது. இதன் மீது ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்’’ என்று பதவிட்டிருந்தார்.
மேலும் அவர் ‘‘இதுபோன்ற செயலை இந்திய அணி நிறுத்திக் கொள்ளாவிட்டால், காஷ்மீரில் இந்தியர்களின் அத்துமீறலை உலகுக்கு தெரியப்படுத்தும் வண்ணம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள். இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யிடம் முறைப்படி புகார் கொடுக்க வேண்டும்’’ என்றார்.
பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், தற்போதைய தேர்வுக்குழு தலைவருமான இன்ஜமாம் உல்-ஹக் கூறுகையில், ‘‘நான் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர். கிரிக்கெட் மட்டுமே எனது பணி. இது அரசியல் விவகாரம். இதில் தலையிட நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் கிரிக்கெட்டையும், அரசிலையும் ஒன்றாக கலக்கக்கூடாது’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ‘‘ராணுவ தொப்பியை பயன்படுத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் முன்கூட்டியே ஐ.சி.சி.யிடம் ஆலோசனை நடத்தியது. இது விதிமீறல் அல்ல என்று உறுதி செய்யப்பட்ட பிறகே அந்த விசேஷ தொப்பியை இந்திய வீரர்கள் அணிந்தனர். இது நலநிதி திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாகும்’’ என்று ஐ.சி.சி. செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்