என் மலர்
நீங்கள் தேடியது "குளிர்கால கூட்டத்தொடர்"
- ராகுல் காந்தி பாரத் ஜோடோ நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
- இதனால் அவர் கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கி 20 அமர்வுகள் நடைபெறும். இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல்கள் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்பட உள்ளது.
இதற்கிடையே, நடப்பு ஆண்டிற்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி டிசம்பர் 7-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், பாரத் ஜோடோ நடைபயணம் மேற்கொண்டுள்ளதால் ராகுல் காந்தி பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவித்துள்ளார்.
- பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.
- இதில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கி 20 அமர்வுகள் நடைபெறும். இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல்கள் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது.
இதற்கிடையே, நடப்பு ஆண்டிற்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தெரிவித்துள்ளது.
- குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 29-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது.
- மத்திய அரசு நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் மாதம் தொடங்குகிறது.
இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. டிசம்பர் 29-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறும்.
இந்தத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள 16 மசோதாக்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.
இதற்கிடையே, கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க மத்திய அரசு நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. இரு அவைகளின் அரசியல் கட்சி குழு தலைவர்களுக்கு பாராளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
இதில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள், விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
- ஜம்மு காஷ்மீரில் நடப்பு ஆண்டில் 123 பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன.
- இந்த ஆண்டில் 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் பதிலளித்தார். அவர் பேசியதாவது:-
ஜம்மு காஷ்மீரில் நடப்பு ஆண்டில் நவம்பர் வரை 123 பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், 31 வீரர்கள் பணியின்போது உயிரிழந்து உள்ளனர். பொதுமக்கள் தரப்பிலும் 31 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த ஆண்டில் 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் பெரிய அளவில் குறைந்துள்ளன. 2018-ம் ஆண்டில் பயங்கரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை 417 ஆக இருந்தது. இது, 2021-ம் ஆண்டில் 229 ஆக குறைந்தது. 2022-ம் ஆண்டில் ஜனவரி முதல் நவம்பர் 30-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் 3 காஷ்மீரி பண்டிட்டுகள் உள்பட சிறுபான்மை சமூகத்தினர் 14 பேர் காஷ்மீரில் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
- துணை ஜனாதிபதியாக ஜகதீப் தங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. துணை ஜனாதிபதியாக ஜகதீப் தங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
ஜனநாயகத்தின் மூன்று தூண்களான பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாகம் ஆகியவை தங்கள் வரையறைக்குள் செயல்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் செழிப்பாக வளரும்.
இந்த மூன்றில் ஏதேனும் ஒரு தூண் மற்றொன்றின் வரம்புக்குள் ஊடுருவினால் அது ஆட்சி முறையில் சிக்கலை ஏற்படுத்தக் கூடும். இந்த ஊடுருவல் அவ்வப்போது நடப்பதைப் பார்க்க முடிகிறது.
மக்கள் பிரதிநிதிகளால் கொண்டுவரப்பட்ட தேசிய நீதி துறை நியமன ஆணையத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. மேலும் பாராளுமன்றத்தின் இறையாண்மையை உச்சநீதிமன்றத்தின் போக்கு கேள்விக்கு உள்ளாக்குகிறது.
ஜனநாயக வரலாற்றில் முறையாக சட்டபூர்வமாகப்பட்ட அரசமைப்பு பரிந்துரையை நீதித்துறை ரத்து செய்த இந்த சம்பவத்துக்கு நிகராக வேறு எந்த சம்பவமும் இல்லை.
கடந்த 7 ஆண்டுகளாக இந்த மசோதா உறக்கத்தில் உள்ளது. இது குறித்து சட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்' என தெரிவித்தார்.
- ஆளுங்கட்சியின் தலைவரால் தனது சொந்த மாநிலத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை.
- செல்வந்தர்கள் பணம் செலுத்தி மற்ற நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள்.
புதுடெல்லி:
மக்களவையில் 2022-23ஆம் ஆண்டிற்கான கூடுதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பேசும்போது, தொழில்துறை உற்பத்தி தொடர்பான தரவுகளை மேற்கோள் காட்டி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-
பொருளாதார முன்னேற்றம் குறித்து அரசு பொய்யான தகவல்களைக் கூறி வருகிறது. பொருளாதாரம் சிறப்பாக உள்ளது, அனைவருக்கும் எரிவாயு சிலிண்டர்கள், வீடுகள் மற்றும் மின்சாரம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கிறது என்று பிப்ரவரி மாதம்தோறும் மத்திய அரசு பொதுமக்களை நம்ப வைக்கப் பார்க்கிறது.
ஆனால் மத்திய அரசு கூறியது அனைத்தும் பொய். 8 மாதங்களுக்கு பிறகு உண்மை இப்போது வெளிவருகிறது. இப்போது மத்திய அரசுக்குச் செலவுகளைச் சமாளிக்க பட்ஜெட் மதிப்பீட்டை விட கூடுதலாக ரூ.3.26 லட்சம் கோடி நிதி தேவை என்று அரசே கூறியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி நரேந்திர மோடி அரசு தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது. இப்போது இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. அதை மேம்படுத்த நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பப்பு என்ற சொல்லை உருவாக்கியது இந்த அரசாங்கமும் ஆளும் கட்சியும்தான். இழிவுபடுத்தவும் திறமையின்மையை குறிக்கவும் அந்த வார்த்தையை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். ஆனால் உண்மையான பப்பு யார்? என்பதை புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அக்டோபர் மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி 26 மாதங்களில் இல்லாத அளவிற்கு நான்கு சதவீதம் சரிந்தது. மிகப்பெரிய வேலைகளை உருவாக்கும் உற்பத்தித் துறை 5.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆளுங்கட்சியின் தலைவரால் தனது சொந்த மாநிலத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. இப்போது சொல்லுங்கள் யார் பப்பு?
நேற்று கேள்வி நேரத்தின் போது, வளர்ந்து வரும் சந்தைகளில் செய்யப்படும் முதலீடுகளில் 50% வெளிநாட்டு நேரடி முதலீடுகள் இந்தியாவிற்குள் வருவதாக நிதி மந்திரி குறிப்பிட்டார். ஆனால் வெளியுறவுத்துறை இணை மந்திரி, கடந்த வெள்ளிக்கிழமை, இதே அவையில் ஒரு தகவலை தெரிவித்தார். அதாவது இந்த ஆண்டு முதல் பத்து மாதங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர், தங்கள் இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த அரசு அமைந்த பிறகு 2014 முதல் சுமார் 12.5 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர். செல்வந்தர்கள் பணம் செலுத்தி மற்ற நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்கள். இதுதான் ஆரோக்கியமான பொருளாதாரச் சூழலின் அறிகுறியா? இதுதான் ஆரோக்கியமான வரிச் சூழலா? இப்போது சொல்லுங்கள் யார் பப்பு?
இந்த நாட்டில் ஒரு பயங்கரமான சூழல் நிலவுகிறது. அதிக சொத்து வைத்துள்ளவர்கள், தொழிலதிபர்களின் தலைக்கு மேலே அமலாக்கத் துறையின் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது.
ஆளுங்கட்சி பல நூறு கோடியை செலவழித்து மக்கள் பிரதிநிதிகளை வாங்குகிறது. அதேநேரம் அமலாக்கத்துறை விசாரிக்கும் 95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் குறி வைத்தே இருக்கிறது. 2016-ல் அறிவிக்கப் பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது அதன் இலக்கை அடைவதில் தோல்வி அடைந்துவிட்டது. கள்ள நோட்டுகளை ஒழிப்பது இன்னுமே கூட கனவாகவே உள்ளது
இவ்வாறு அவர் பேசினார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவின் இந்த அனல்பறக்கும் உரையானது வைரலாகி வருகிறது.
- பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜூன் முண்டா மசோதாவை அறிமுகம் செய்தார்.
- இன்று நடைபெற்ற விவாதத்திற்கு பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது.
புதுடெல்லி:
தமிழகத்தில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் சமூகம் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 19-ம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பரில் ஒப்புதல் வழங்கியது.
இதையடுத்து பழங்குடியினர் அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டது. அரசியல் சாசன திருத்த மசோதாவை, நேற்று முன்தினம் மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜுன் முண்டா மக்களவையில் அறிமுகம் செய்தார். இந்த மசோதா இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- மல்லிகார்ஜூன கார்கேவின் பேச்சை கண்டித்து பாராளுமன்றத்தில் பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
- தனது கருத்திற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.
புதுடெல்லி:
இந்திய ஒற்றுமை பயணத்தின்போது ராஜஸ்தானின் அல்வாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றினார். அப்போது, அருணாசல பிரதேச எல்லையில் சமீபத்தில் நடந்த இந்தியா-சீனா மோதல் குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.
அவர் பேசும்போது, "காங்கிரஸ் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது. நாட்டின் ஒற்றுமைக்காக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உயிரை தியாகம் செய்தார்கள். எங்கள் கட்சி தலைவர்கள் நாட்டு ஒற்றுமைக்காக தங்கள் உயிரைக் கொடுத்தார்கள். பாஜக எதையும் இழக்கவில்லை. உங்கள் வீட்டில் உள்ள நாய் கூட நாட்டுக்காக இறந்ததா? இருப்பினும், அவர்கள் தங்களை தேசபக்தர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். நாங்கள் ஏதாவது சொன்னால் நாங்கள் தேச விரோதிகள் என அழைக்கப்படுகிறோம்" என்றார்.
கார்கே, பாஜகவை தாக்கி பேசும்போது நாய் என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் பாஜகவினர் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. கார்கே கூறிய கருத்திற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்.பி.க்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதற்கு காங்கிரஸ் தரப்பில் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
நாகரிமற்ற வகையில் மனதை புண்படுத்தும் வார்த்தையை பயன்படுத்தியதற்காக பாஜகவிடமும், பாராளுமன்றத்திடமும், நாட்டு மக்களிடமும் கார்கே மன்னிப்பு கேட்கவேண்டும் என மாநிலங்களவையில் மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் வலியுறுத்தினார். இந்த விவகாரம் காரணமாக சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர், இந்த கருத்து பாராளுமன்றத்திற்கு வெளியே கூறப்பட்டதாக கூறினார். நாட்டின் 135 கோடி மக்கள் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வெளியில் யாரோ எதையோ பேசியிருக்கலாம். நீங்கள் ஒன்றும் குழந்தைகள் இல்லை என்றும் அவைத்தலைவர் கூறினார்.
இதற்கிடையே தனது கருத்திற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.
புதுடெல்லி:
அருணாச்சல பிரதேச மாநில எல்லை பகுதியான தவாங் செக்டாரில் சீன ராணுவ வீரர்கள் கடந்த 9ந்தேதி ஊடுருவ முயன்றனர். இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த மோதலில் இரு தரப்பு வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
சீனாவின் அத்துமீறல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதுதொடர்பாக இரு அவைகளிலும் ஒத்தி வைப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டன.
அதேநேரத்தில் சீனாவின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து இருந்தார். ஆனாலும் சீன ஊடுருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியால் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்கு இரு அவைத் தலைவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த விஷயத்தில் மத்திய அரசை கண்டித்து இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீன ஊடுருவல் குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சோனியா காந்தி, ப.சிதம்பரம், வேணுகோபால், ஆ.ராசா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
சீன எல்லை குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் இன்றும் ஒத்திவைப்பு நோட்டீசை கொடுத்தது. காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி இதை அளித்தார்.
பாராளுமன்ற மக்களவை கூடியதும் சீன ஊடுருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முறையிட்டது. ராகுல்காந்தியின் பாத யாத்திரைக்கு நிபந்தனை விதிக்கப்பட்ட பிரச்சினையும் எழுப்பப்பட்டது. இதன் காரணமாக அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக சபா நாயகர் ஓம்பிர்லா 12 மணி வரை அவையை ஒத்திவைத்தார்.
பின்னர் அவை கூடியபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கையை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்தனர்.
- அருணாசலபிரதேச மாநில எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துகிறது
- பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இதில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அருணாசலபிரதேச மாநில எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. அதே போல் மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களும் பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி விவாதிக்க கோரி வருகின்றனர்.
எதிர்க்கட்சியினர் அமளியால் பாராளுமன்றத்தில் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில் இன்றும் அமளி ஏற்பட்டது. காலை மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சீன எல்லை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
அவர்களை அமைதி காக்கும் படியும், இருக்கையில் அமருமாறும் சபாநாயகர் வலியுறுத்தினார். ஆனால் எம்.பி.க்கள் கோஷங்கள் எழுப்பியவாரே இருந்தனர். தொடர்ந்து கூச்சல், அமளி நிலவியது. இதனால் மக்களவையை மதியம் 12 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். அதேசமயம் அமளிக்கு மத்தியில் மாநிலங்களவை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றன.
- 5 மாநில தேர்தல் காரணமாக இந்த ஆண்டு டிசம்பரில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது.
- பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கி 20 அமர்வுகள் நடைபெறும். இந்த ஆண்டு 5 மாநில தேர்தல் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது.
இதற்கிடையே, நடப்பு ஆண்டிற்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெற உள்ளது என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
- 5 மாநில தேர்தல் காரணமாக இந்த ஆண்டு டிசம்பரில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது.
- பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கி 20 அமர்வுகள் நடைபெறும். இந்த ஆண்டு 5 மாநில தேர்தல் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது.
இதற்கிடையே, நடப்பு ஆண்டிற்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெற உள்ளது என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி டிசம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரின் போது பல்வேறு பிரச்சனைகளைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.