என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மங்கலம்"
- பூமலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
- நாளை 23- ந்ேததி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
மங்கலம் :
பூமலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 23- ந்ேததி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் கே.ஆா்.சபரிராஜன் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: மங்கலம், சுல்தான்பேட்டை, இடுவாய், பாரதிபுரம், கணபதிபாளையம், செட்டிபாளையம், சீரணம்பாளையம், சின்னகாளிபாளையம், சின்னப்புத்தூா், பெரியபுத்தூா், வேட்டுவபாளையம், மலைக்கோயில், வெள்ளச்செட்டிபாளையம், வடுகாளிபாளையம், புக்கிலிப்பாளையம், வேலாயுதம்பாளையம், பூமலூா், கணக்கம்பாளையம், பெருமாப்பாளையம், பள்ளிப்பாளையம், கிடாத்துரை புதூா் ஆகிய பகுதிகள் ஆகும்.
- மங்கலம் ஊராட்சியை பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத ஊராட்சியாக மாற்றுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கினார்.
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டமானது மங்கலத்தை அடுத்த வேட்டுவபாளையம் பகுதியில் உள்ள ரேசன் கடை வளாகத்தில் நடைபெற்றது. மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர் ,திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகிஎபிசியண்ட்மணி, திருப்பூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நவமணி, மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் மங்கலம் ஊராட்சி செயலாளர் ரமேஷ், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மங்கலம் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவது எனவும், மங்கலம் ஊராட்சியை பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத ஊராட்சியாக மாற்றுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- எம்.செட்டிபாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
- மங்கலம் போலீசார் 30 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மங்கலம் :
மங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சமாதா னபிரபு மற்றும் போலீசார் மங்கலத்தை அடுத்த எம்.செட்டிபாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அதே பகுதியில் மளிகைகடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த ராஜேந்திரன் (50) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 10 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.இதே போல மங்கலம் போலீசார் மங்கலத்தை அடுத்த இடுவாய் -பாரதிபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதே பகுதியில் உள்ள மளிகைகடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த முத்துச்செல்வன் (35) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 15 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.இதே போல மங்கலம் போலீசார் மங்கலத்தை அடுத்த இச்சிப்பட்டி பகுதியில் தீவிர ரோந்து சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது அதேபகுதியில் உள்ள மளிகை கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த பிரின்ஸ் (50)என்பவரை கைது செய்த மங்கலம் போலீசார் அவரிடம் இருந்து 30 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
- இந்தியன்நகர் பகுதியில் தி.மு.க. சார்பில் கட்சி கொடியேற்றப்பட்டது.
- அண்ணாவின் உருவ படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
மங்கலம் :
பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட இந்தியன்நகர் பகுதியில் தி.மு.க. சார்பில் கட்சி கொடியேற்றப்பட்டது. பின்னர் அண்ணாவின் உருவ படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியானது தி.மு.க. வர்த்தகஅணி திருப்பூர் ஒன்றிய அமைப்பாளர் சுல்தான்பேட்டை கோபால் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றிய பொருளாளர் மு.சர்புதீன் முன்னிலை வகித்தார் . மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மு.ரபிதீன் , ஒன்றிய கழக அவைத்தலைவர் மு.அப்துல்பாரி, மாவட்ட பிரதிநிதி மா.சிவசாமி, , திருப்பூர் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஷா.தம்பிரஹீம், மு.ஐக்கிரியா, மு.முஜிபுர்ரகுமான் க.முபாரக்ராஜா மற்றும் மங்கலம் தி.மு.க. ஊராட்சி கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கெ௱ண்டனர்.
- தி.மு.க.கிழக்கு மாவட்டம், திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் தலைமையில் ஏராளமானோர் பஸ்கள் மூலமாக புறப்பட்டு சென்றனர்.
மங்கலம் :
தமிழக முதலமைச்சர் மு.௧.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி,நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
முன்னதாக நேற்று அவர் கோவை மாவட்டம்,பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அங்கிருந்து காரில் இரவு திருப்பூர் வந்தார். அப்போது திருப்பூர் மாவட்டம்,பல்லடம்-வடுகபாளையத்தில் தி.மு.க.கிழக்கு மாவட்டம்,திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்க மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமையில் ஏராளமானோர் மங்கலத்தில் இருந்து பஸ்கள் மூலமாக புறப்பட்டுச் சென்றனர்.இதில் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் மு.சகாபுதீன், மாவட்ட பிரதிநிதிகள் ரவிச்சந்திரன்,சுந்தரவடிவேல், திருப்பூர் தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர்கள் இடுவாய் ரவி, பாபு ,நூர்முகமது , திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் முகமது ஜீனைத், சசி, திருப்பூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சரவணகுமார், முகமது உசேன், திருப்பூர் வடக்கு மாவட்ட மாணவரணியை சேர்ந்தவரும் ,மங்கலம் ஊராட்சி மன்ற 9-வது வார்டு உறுப்பினருமான முகமது இத்ரீஸ், மற்றும் தி.மு.க. நிர்வாகிகளான இடுவாய் சுரேஷ், குமார், மயில்சாமி, ராமாத்தாள், திருமூர்த்தி உள்ளிட்ட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.
- வாஜ்பாய் உருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.
- பா.ஜ.க.கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
மங்கலம் :
திருப்பூர் ஒன்றியம், மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அக்ரஹாரப்புத்தூர் பகுதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவுதினத்தை முன்னிட்டு பா.ஜ.க.திருப்பூர் தெற்கு ஒன்றியம் சார்பில் வாஜ்பாய் உருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.
இதில் பா.ஜ.க.கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு செயலாளர் மகேந்திரன், பா.ஜ.க. திருப்பூர் வடக்கு மாவட்ட தொழில் பிரிவு துணைத் தலைவர் ஐ.ஈ.டி.சி.விநாயகமூர்த்தி, திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகம்மணி, பா.ஜ.க. திருப்பூர் தெற்கு ஒன்றிய துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி,மற்றும் நிர்வாகிகளான பொன்னுசாமி, சுப்பு,சுப்பிரமணியம், ராமு, துரை உள்பட கலந்து கொண்டனர்.
- ராஜவேல் பல்லடம் காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார்.
- கோபாலகிருஷ்ணன் மங்கலம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மங்கலம் :
மங்கலம் போலீஸ் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜவேல் ,பல்லடம் காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார்.
பல்லடம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கோபாலகிருஷ்ணன் மங்கலம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
- கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
- கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுதினம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுதினம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் தி.மு.க. கட்சியின் சாமளாபுரம் பேரூர் கழகத்தின் சார்பாக கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியானது கட்சியின் சாமளாபுரம் பேரூர் செயலாளர் பி. வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது .இதில் தி.மு.க. கட்சியின் சாமளாபுரம் பேரூர் துணைச் செயலாளர் தியாகராஜன், மாவட்ட பிரதிநிதி தங்கராஜ் , சாமளாபுரம் பேரூராட்சி மன்ற 11 -வது வார்டு கவுன்சிலர் தயாளன்வினோஜ்குமார் , ஒன்றிய பிரதிநிதி சண்முகம், எழிலரசன் மற்றும் வார்டு செயலாளர்கள் பாலசுப்பிரமணியம், பழனிச்சாமி, ஈஸ்வரமூர்த்தி, சீனிவாசன், பாலு, ஆறுமுகம், பழனிச்சாமி, மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள் ,பொதுமக்கள் உள்பட கலந்துகொண்டனர்.
திருப்பூர் மாவட்டம்,மங்கலத்தில் மங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கருணாநிதி நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியானது மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.இதில் மலர்களால் அலங்கரிங்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, இதில் மங்கலம் தி.மு.க. கட்சியை சேர்ந்த தம்பணன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜுனைத், தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணகுமார், கிளை செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட பிரதிநிதி சகாப்தீன், வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மற்றும் மங்கலம் ஊராட்சி மன்ற 9வது வார்டு உறுப்பினர் முகமது இத்ரிஸ், ஒன்றிய பொறுப்புகுழு பாபு, நீலி,ஆதிதிராவிடர் காலனி கிளை செயலாளர் முருகசாமி, சுல்தான்பேட்டை ஆதி திராவிடர் காலனி கிளை செயலாளர் கிட்டான் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மங்கலத்தில் சுமார் 10000, பூமலூரில் 8000, அக்ரஹாரபுத்துரில் 5000, வஞ்சிப்பாளையத்தில் 9000 இணைப்புகள் உள்ளன.
- இணைப்புகளை ஒன்றாக இணைத்து மங்கலம் மின் செயற்பொறியாளர் அலுவலகம் அமைத்திட வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
சோமனூர் மின் வாரிய டிவிசனுக்கு உட்பட்டு மங்கலம், பூமலூர், அக்ரஹாரப்புத்தூர், வஞ்சிபாளையம், பரமசிவப்பாளையம், அய்யன்கோவில், கோம்பக்காடு, போன்றவை உதவி செயற்பொறியாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதனை திருப்பூர், பல்லடம், அவினாசி என 3 டிவிசன்களாக பிரிக்க உத்தேசிக்கப்பட்டு வருவதாக தெரிய வருகிறது. இதனை இணைப்பதற்கு விவசாயிகள், மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் மாற்றம் செய்ய கூடாது. மங்கலம் செயற்பொறியாளர் அலுவலகம் அங்கேயே செயல்பட வேண்டும். மங்கலத்தில் சுமார் 10000 இணைப்புகளும் , பூமலூரில் 8000 இணைப்புகளும், அக்ரஹாரபுத்துரில் 5000 இணைப்புகளும், வஞ்சிப்பாளையத்தில் 9000 இணைப்புகளும் உள்ளன. இந்த இணைப்புகளை ஒன்றாக இணைத்து மங்கலம் மின் செயற்பொறியாளர் அலுவலகம் அமைத்திட வேண்டும்.
மங்கலம், வஞ்சிப்பாளையம் ஆகியவற்றை திருப்பூர் டிவிசனுடன் இணைத்திட வேண்டும். மங்கலம் திருப்பூர் நகரத்திற்கு அருகில் உள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திருப்பூருக்கு வந்து செல்ல எளிதாக இருக்கும். அவினாசியுடன் மங்கலத்தை இணைப்பதை நிறுத்த வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .
- ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுடன் கோரிக்கைகளை கேட்டறிந்து கலந்துரையாடினார்.
- சமுதாயகூடத்தில் மக்கள் சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம்,திருப்பூர் ஒன்றியம்,இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட சீரங்ககவுண்டம்பாளையம் பகுதியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை பணித்தளத்தில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுடன் கோரிக்கைகளை கேட்டறிந்து கலந்துரையாடினார்.பின்னர் இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் உள்ள சமுதாயகூடத்தில் மக்கள் சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.இந்த நிகழ்ச்சியில் இடுவாய் ஊராட்சி மன்றத்தலைவர் கே.கணேசன் வரவேற்புரை ஆற்றினார்.மேலும் இதில் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன்,திருப்பூர் தெற்கு தாசில்தார்,திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் பிரபு பாலசுப்பிரமணியம்,இடுவாய் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பரமசிவம்,இடுவாய் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .
இதனைத் தொடர்ந்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்திருப்பூர் ஒன்றியம்,மங்கலம் ஊராட்சி மங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.இதில் மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி,மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகிஎபிசியண்ட் மணி,மற்றும் மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மங்கலம் பெண்கள் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு முககவசம் , கிருமிநாசினி வழங்கப்பட்டது.
- மங்கலம் நால்ரோடு பகுதியில் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சியில் சித்தர்குரு சித்தா மருந்தகம் மற்றும் தி.மு.க. இளைஞரணி சார்பில் மங்கலம் பெண்கள் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு முககவசம் , கிருமிநாசினி வழங்கப்பட்டது. இதனை மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லிஸியம்மாள் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மங்கலம் நால்ரோடு பகுதியில் காவல்துறையினருக்கும் , பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கினார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜவேல்,சித்தர் குரு மருந்தக உரிமையாளர் முகமது ஹாசிம், தி.மு.க. கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது ஜீனைத், மங்கலம் ஊராட்சி மன்ற 9-வது வார்டு உறுப்பினர் முகமதுஇத்ரீஸ் , மாவட்ட பிரதிநிதி சகாபுதீன்,தி.மு.க. கட்சியின் மங்கலம் ஊராட்சி 3-வது வார்டு செயலாளர் முஜிபுர்ரகுமான், திருப்பூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் முகமது உசேன்,மங்கலம் சரவணக்குமார், மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரபிதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.
- ரூ.15,000 மதிப்புள்ள பிரிண்டரை மங்கலம் ஊராட்சி மன்றத்தினர் தலைமையாசிரியரிடம் வழங்கினர்.
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் ஒன்றியம்,மங்கலம் ஊராட்சியில் அரசு பெண்கள்உயர்நிலைப்பள்ளி உள்ளது.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மங்கலம்- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் மங்கலம் அரசு பெண்கள்உயர்நிலைப்பள்ளிக்கு பிரிண்டர் வழங்கப்பட்டது. பள்ளிக்கு தேவையான ரூ.15,000 மதிப்புள்ள உபகரணத்தை (பிரிண்டர்) மங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தாஹா நசீர் மற்றும் மங்கலம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ரபிதீன் ஆகியோர் மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் லிஸியம்மாளிடம் வழங்கினர்.
அப்போது பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர் .
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்