என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வெள்ளக்கோவில்"
- 116 விவசாயிகள் தங்களுடைய 1,305 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
- கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 60 முதல் ரூ. 83.15 வரை விற்பனையானது.
வெள்ளகோவில் :
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 49.20 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு அரியலூா், கரூா், அப்பியம்பட்டி, மாம்பாடி, தாராபுரம், சின்னதாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 116 விவசாயிகள் தங்களுடைய 1,305 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 67 டன்.
காங்கயம், வெள்ளக்கோவில், நஞ்சை ஊத்துக்குளி, ஊத்துக்குளி ஆா்.எஸ், சிவகிரி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 10 வணிகா்கள் கொப்பரையை வாங்க வந்திருந்தனா்.இதில் கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 60 முதல் ரூ. 83.15 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 78.35. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 49.20 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.
- இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மனுவில் கூறியிருந்தனர்.
- பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில், பாஜக நகர தலைவர் ஆர்.அருண்குமார் மற்றும் நிர்வாகிகள், இந்து முன்னணி சார்பில் மாவட்ட செயலாளர் ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள், விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மாவட்ட இணை செயலாளர் டி.சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆ. ராசா எம்.பி., இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மனுவில் கூறியிருந்தனர்.
பல்லடம் வடக்கு ஒன்றிய பாஜக. தலைவர் பூபாலன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ரமேஷ் குமார், மற்றும் பாஜ.க நிர்வாகிகள் நித்யா,பூபதி,மகேஷ், குருமூர்த்தி, உள்ளிட்ட நிர்வாகிகள் ஆ.ராசா எம்.பி., மீது பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- காவல் ஆய்வாளா் ரமாதேவி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா்.
- லாட்டரி சீட்டு எண்கள் எழுதிய பேப்பா், பணம் ரூ.15,320 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
வெள்ளகோவில் :
முத்தூா் சாலை இந்திரா நகரில் வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளா் ரமாதேவி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்கு கச்சேரிவலசைச் சோ்ந்த கோகுல் (வயது 21) என்பவா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார்,அவரிடமிருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதிய பேப்பா், பணம் ரூ.15,320 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
- 1,376 மூட்டைகள் தேங்காய்ப் பருப்புகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.
- 10 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா்.
வெள்ளகோவில் :
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 54 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வாணியம்பாடி, லாலாப்பேட்டை, வில்வாதம்பட்டி, கரூா், விளாத்திகுளம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 145 விவசாயிகள் தங்களுடைய 1,376 மூட்டைகள் தேங்காய்ப் பருப்புகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 69 டன்.
ஈரோடு, வெள்ளக்கோவில், ஊத்துக்குளி ஆா்.எஸ், காங்கயம், முத்தூரைச் சோ்ந்த 10 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். விலை கிலோ ரூ. 68.20 முதல் ரூ. 85.20 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 80.45. கடந்த வார சராசரி விலை கிலோ ரூ. 80.90. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 54 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.
- ஏலத்தில் 133 விவசாயிகள் தங்களுடைய 1,507 மூட்டை கொப்பரைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.
- கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 86.90க்கும், குறைந்தபட்சமாக ரூ.69.20க்கும், சராசரியாக ரூ. 81.20க்கும் விற்பனையானது.
வெள்ளகோவில் :
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.63 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வாணியம்பாடி, தேவத்தூா், அறவக்குறிச்சி, விளாத்திகுளம், முத்தூா் உள்ளிட்ட இடங்களில் இருந்து 133 விவசாயிகள் தங்களுடைய 1,507 மூட்டை கொப்பரைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.
இவற்றின் எடை 81 டன். பொள்ளாச்சி, வெள்ளக்கோவில், காங்கயம், முத்தூா், ஊத்துக்குளி, நஞ்சை ஊத்துக்குளியைச் சோ்ந்த 13 வணிகா்கள் கொப்பரையை வாங்குவதற்காக வந்திருந்தனா்.கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 86.90க்கும், குறைந்தபட்சமாக ரூ.69.20க்கும், சராசரியாக ரூ. 81.20க்கும் விற்பனையானது.ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ. 63.23 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.
- 22 விவசாயிகள் 218 மூட்டைகளில் 10,260 கிலோ சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
- விற்பனைத் தொகை ரூ. 6.81 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் தெரிவித்தார்.
வெள்ளகோவில் :
வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ. 6.81 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு வேடசந்தூா், பூசாரிபட்டி, கருங்குளம், மாா்க்கம்பட்டி, தாழையூத்து, புளியம்பட்டி உள்ளிட்ட ஊா்களில் இருந்து 22 விவசாயிகள் 218 மூட்டைகளில் 10,260 கிலோ சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். ஈரோடு, கஸ்பாபேட்டை, நடுப்பாளையம், முத்தூா், காங்கயம் ஆகிய பகுதிகளில் இருந்து 6 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். விலை கிலோ ரூ.56.91 முதல் ரூ. 68.36 வரை விற்பனையானது.
சராசரி விலை ரூ.62.09. கடந்த வார சராசரி விலை ரூ. 65.69. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 6.81 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்