என் மலர்
நீங்கள் தேடியது "வத்தலக்குண்டு விபத்து"
வத்தலக்குண்டு:
தேனி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் ஒரு லாரி பட்டிவீரன்பட்டி அருகே நின்று கொண்டிருந்தது. டீசல் பற்றாக்குறை காரணமாக லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் அருகில் இருந்த கடைக்கு சென்று விட்டார். நேற்று இரவு திண்டுக்கல்லில் இருந்து உத்தமபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த கார் சாலையோரம் நின்ற லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் கார் ஓட்டுனர் காஜாமைதீன் (வயது 38) காரில் வந்த மரியதாஸ் (55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் பட்டி வீரன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்த வர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் வந்த மரியதாசின் மனைவி ஆரோக்கியமேரி (50), படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகில் உள்ள பட்டிவீரன்பட்டி வினோபாஜி நகரை சேர்ந்த தங்கபாண்டி, தங்கவேல், பெருமாள் உள்ளிட்ட மாணவர்கள் ஆட்டோவில் மருதாநதி அணை பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இன்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ டிரைவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் பள்ளி மாணவர்கள் 2 பேரும், ஆட்டோ டிரைவரும் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்த அவர்கள் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்வதே இதுபோன்ற விபத்து நடைபெற காரணமாக உள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.