search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97076"

    ஆப்பிள் நிறுவனம் அறிவித்து இருக்கும் புதிய திட்டத்தில் பயனர்கள் தங்களின் ஐபோனை தாங்களாகவே சரிசெய்து கொள்ளலாம்.


    ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக செல்ப் சர்வீஸ் திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் தங்களின் ஆப்பிள் சாதனங்களை சர்வீஸ் செண்டர் செல்லாமல் தாங்களாகவே சரிசெய்து கொள்ளலாம்.

    இந்த திட்டம் ஆப்பிள் அதிகாரப்பூர்வ உதிரிபாகங்கள், டூல்கள், மேனுவல் உள்ளிட்டவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. முதற்கட்டமாக இந்த திட்டம் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மாடல்களுக்கு செயல்படுத்தப்பட இருக்கிறது. 

      ஆப்பிள் செல்ப் சர்வீஸ்

    முதலில் பயனர்களுக்கு ரிப்பேர் மேனுவல் வழங்கப்படும். இதனை வாசித்து சாதனத்தை சரி செய்யும் நம்பிக்கை பயனருக்கு ஏற்படும் பட்சத்தில், அவர்கள் ஆப்பிள் அதிகாரப்பூர்வ உதிரிபாகங்களை வாங்க முன்பதிவு செய்யலாம். சரி செய்த பின் பாழாகி போன உதிரிபாகங்களை மறுசுழற்சி செய்ய பயனர்கள் ஆப்பிளிடம் திரும்ப வழங்கலாம்.

    ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மாடல்களின் டிஸ்ப்ளே, பேட்டரி மற்றும் கேமரா சார்ந்த பிரச்சனைகளை சரி செய்ய வைக்க ஆப்பிள் கவனம் செலுத்துகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் 200 தனித்தனி உதிரிபாகங்களை வாங்கிட முடியும். ஐபோனை தொடர்ந்து எம்1 மேக் மாடல்களை சரிசெய்யும் வசதியையும் ஆப்பிள் வழங்க இருக்கிறது.

    பொறியியல் மாணவர் மறு உருவாக்கம் செய்த ஐபோன் மாடல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.


    யு.எஸ்.பி. சி கொண்ட உலகின் முதல் ஐபோன் மாடல் 80 ஆயிரத்து 1 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 59,51,074) விலைக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. பொறியியல் மாணவர் ஒருவர் பழைய ஐபோன் எக்ஸ் மாடலை மறுஉருவாக்கம் செய்து அதில் யு.எஸ்.பி. சி போர்ட்-ஐ பொருத்தினார்.

    நல்ல வேளையாக ஐபோனும் ஆப்பிள் தயாரித்ததை போன்றே சரியாக இயங்குகிறது. மாணவர் முயற்சியில் யு.எஸ்.பி. சி கொண்ட உலகின் முதல் ஐபோன் என்ற பெருமையுடன், இந்த மாடல் ஏலத்தில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. முன்னதாக இதுபோன்ற மாடிபிகேஷன்கள் பலமுறை ஐபோன்களில் செய்யப்பட்டு இருக்கின்றன.

     ஐபோன்

    எனினும் பாஸ்ட் சார்ஜிங், டேட்டா டிரான்ஸ்பர், ஃபார்ம் ஃபேக்டர் மற்றும் இதர அம்சங்களை இதுவரை யாரும் வெற்றிகரமாக மாற்றியமைக்கவில்லை. அந்த வரிசையில், யு.எஸ்.பி. சி மாட் கொண்ட இந்த ஐபோன்- டேட்டா டிரான்ஸ்பர், பாஸ்ட் சார்ஜிங் மற்றும் இதர பயன்களை வழங்குகிறது. தோற்றத்திலும் இந்த ஐபோனில் எந்த வித்தியாசமும் ஏற்படவில்லை.

    பார்ப்பதற்கும் இது வழக்கமான ஐபோன் எக்ஸ் போன்றே காட்சியளிக்கிறது. இதில் லைட்னிங் போர்ட்-க்கு மாற்றாக யு.எஸ்.பி. சி போர்ட் பொருத்தப்பட்டு இருக்கிறது. "யு.எஸ்.பி. சி ஐபோனினை ஆப்பிள் வெளியிட காத்திருந்தேன். பொருத்தவரை போதும் என நினைத்து எனக்கென நானே ஒன்றை உருவாக்கி கொண்டேன்," என பொறியியலில் முதுகலை பட்டம் பயின்று வரும் கென் பிலோயல் தெரிவித்தார். 

    ஆப்பிள் நிறுவனத்தின் 2019 ஐபோன் மாடல்களில் நிச்சயம் இந்த அம்சங்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வழங்கும் தாய்வான் நாட்டு நிறுவனம் புதிய ஐபோன்களில் வழங்குவதற்கான சிப்செட்களை உற்பத்தி செய்ய துவங்கி விட்டதாக தெரிவித்துள்ளது. ஆப்பிள் ஏ13 என்ற பெயரில் அறிமுகமாக இருக்கும் புதிய சிப்செட்கள் உற்பத்தியானதும் அவை சோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கிறது.

    புதிய சிப்செட்கள் இம்மாத துவக்கத்தில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் என தெரிகிறது. ஆப்பிள் ஏ13 சிப்செட் 2019 ஐபோன் மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது. புதிய 2019 ஐபோன் மாடல்கள் ஐபோன் 11 என்ற பெயரில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சோதனையில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாத பட்சத்தில் இம்மாத இறுதியில் புதிய சிப்செட்கள் அதிகளவு உற்பத்தி பணிகள் துவங்கலாம்.

    ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது ஐபோன்களில் புதிய சிப்செட்களை வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இதன் மூலம் புதிய ஐபோன்களின் வேகம் மற்றும் பேட்டரி பயன்பாட்டை மேம்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு ஐபோன்கள் D43 மற்றும் D44 என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 2019 ஐபோன் XR N104 என்ற பெயரில் உருவாகிறது.


    புதிய 2019 ஐபோன்களின் வடிவமைப்பில் அதிகளவு மாற்றங்கள் இருக்காது என்ற வகையில், புதிய ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களில் மொத்தம் மூன்று பிரைமரி கேமராக்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. ஐபோன் XR மாடலின் 2019 வெர்ஷனில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    அந்த வகையில் 2019 ஐபோன்களில் கேமரா அம்சம் அதிகளவு மாற்றங்களை பெற இருக்கிறது. இத்துடன் புகைப்படங்களை மிக தெளிவாக படம்பிடிக்க அல்ட்ரா-வைடு-ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படலாம் என தெரிகிறது. ஐபோன் XR மாடலின் மேம்பட்ட மாடலில் கூடுதல் சென்சார் சூம் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புகைப்படம் நன்றி
    ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே நடைபெற்ற பிரச்சனை சுமூகமாக ஆப்பிள் நிறுவனம் செலவிட்ட தொகை விவரம் வெளியாகியுள்ளது. #Apple



    ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே நடைபெற்ற வழக்குகளை இருதரப்பும் திரும்பப் பெற ஆப்பிள் நிறுவனம் குவால்காமிற்கு ரூ.34,700 கோடி முதல் ரூ.41,600 கோடி வரை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    இதுகுறித்து வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஒரு ஐபோனிற்கு 8 முதல் 9 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.550 முதல் ரூ.620) வரை இழப்பீடாக வழங்க ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    உலகின் பல்வேறு நாடுகளில் இருநிறுவனங்களும் வழக்குகளை எதிர்கொண்டிருந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி ஐபோன் வெளியீடு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் உயர் தொகையை செலவிட்டு சட்ட பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது.



    ஆப்பிள் மற்றும் குவால்காம் இதுபற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை. இருநிறுவனங்களிடையே கையெழுத்தாகி இருக்கும் புதிய ஒப்பந்தம் 5ஜி ஐபோன் வெளியீட்டை வேகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சட்ட பிரச்சனைகளுக்கான தீர்வு நடவடிக்கையின் படி ஆப்பிள் நிறுவனம் குவால்காமிற்கு பணம் கொடுக்க வேண்டும். இரு நிறுவனங்களிடையே ஆறு ஆண்டுகளுக்கு வியாபாரம் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் ஏப்ரல் 1, 2019 முதல் அமலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தை இரண்டு ஆண்டுகளுக்கு கூடுதலாக நீட்டிக்க முடியும். 

    இருநிறுவனங்களிடையே கையெழுத்தாகி இருக்கும் புதிய ஒப்பந்தத்தின் படி குவால்காம் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு பல ஆண்டுகளுக்கு சிப்செட்களை விநியோகம் செய்ய இருக்கிறது. இந்த ஒப்பந்தம் குவால்காம் நிறுவனத்தின் வியாபாரம், தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேலும் அதிகப்படுத்தும் என குவால்காம் தெரிவித்தது.

    2017 ஆம் ஆண்டு முதல் குவால்காம் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையே காப்புரிமை சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்று வந்தது.
    ஆப்பிள் நிறுவனம் 4.7 இன்ச் அளவில் புதிய ஐபோன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #iPhone



    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்களை செப்டம்பர் 2017 இல் அறிமுகம் செய்தது. சமீபத்தில் ஐபோன் 7 உற்பத்தி இந்தியாவின் பெங்களூருவில் அமைந்திருக்கும் விஸ்ட்ரன் ஆலையில் துவங்கியது. விரைவில் ஐபோன் X மாடல் சென்னையில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்நிலையில், ஆப்பிள் ஐபோன் 8 மாடலின் புதிய வெர்ஷனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தாய்வானில் இருந்து வெளியாகியிருக்கும் தகவல்களில் புதிய ஐபோன் 8 மாடலில் 4.7 இன்ச் LCD டிஸ்ப்ளே, ஏ13 சிப்செட், PCB வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    புகைப்படம் எடுக்க ஒற்றை பிரைமரி கேமரா, 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என தெரிகிறது. தற்சமயம் ஐபோன் 8 (64 ஜி.பி.) விலை இந்தியாவில் ரூ.41,500 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் புதிய ஐபோனின் விலை சற்று குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் உற்பத்தியாகும் ஐபோன்களின் எண்ணிக்கை விரைவில் இரண்டு கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபோன் 8 மாடல் மார்ச் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    ஜெர்மனி நாட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்த 80 வயதான மூதாட்டியை ஆப்பிள் வாட்ச் 4 காப்பாற்றியிருக்கிறது. #AppleWatch4



    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் பல்வேறு புதிய வசதிகள் சேர்க்கப்பட்டன. முற்றிலும் புதிய வடிவமைப்பு, வாட்ச் ஓ.எஸ். 5, ஃபால் டிடெக்‌ஷன் போன்றவற்றை ஆப்பிள் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச்சில் சேர்த்திருக்கிறது. இ.சி.ஜி. மற்றும் ஃபால் டிடெக்‌ஷன் போன்ற வசதிகள் மற்ற ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் இதுவரை வழங்கப்படவில்லை.

    இதில் இ.சி.ஜி. அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஃபால் டிடெக்‌ஷன் அம்சம் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு தானாகவே செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இ.சி.ஜி. மற்றும் ஃபால் டிடெக்‌ஷன் அம்சம் ஆபத்து காலங்களில் பலருக்கு பயன்தரும் அம்சமாக இருக்கிறது.

    அந்த வகையில் தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஜெர்மனியில் நிலை தடுமாறி கீழே விழுந்த 80 வயது மூதாட்டியை காப்பாற்ற அவசர உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் உதவியை நாடியது. ஜெர்மனியில் அவசர உதவி எண் 112-ஐ அழைத்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட குரலில், ஒருவர் பலமாக கீழே விழுந்துவிட்டார் என தகவல் கொடுத்தது.



    இதைத் தொடர்ந்து மூதாட்டியின் வீட்டு முகவரியை ஆப்பிள் வாட்ச் 4 அனுப்பியது. பின் இதே முகவரிக்கு ஆம்புலன்ஸ் வந்தது. எனினும், கதவு உள்புறத்தில் தாழிடப்பட்டிருந்ததால் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின் தீயணைப்பு துறை உதவியுடன் கதவு திறக்கப்பட்டு மூதாட்டி மீட்கப்பட்டார். 

    மீட்கப்பட்ட மூதாட்டிக்கு முதலுதவி செய்யப்பட்ட வேளையில் ஆப்பிள் வாட்ச் 4-இல் பதிவு செய்யப்பட்டிருந்த அவரது மகனுக்கு ஆப்பிள் வாட்ச் தகவல் கொடுத்தது. ஆப்பிள் வாட்ச் கொண்டு பயனர்கள் அவசர காலத்தில் காப்பாற்றப்பட்டது ஏற்கனவே நடந்திருக்கிறது. 

    முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 67 வயது முதியவர் குளியலறையில் கீழே விழுந்து, பின் ஆப்பிள் வாட்ச் கொடுத்த தகவலால் காப்பாற்றப்பட்டார். இந்தியாவில் வாட்ச் சீரிஸ் 4 மாடல் விலை ரூ.40,900 முதல் துவங்குகிறது.
    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் 2019 ஐபோன் மாடல்களின் புதிய விவரங்கள் வெளியாகியுள்ளது. #iPhone



    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பரில் புதிய ஐபோன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR உள்ளிட்ட மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன்களை புதிய சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யலாம் என பரவலாக கூறப்பட்டது.

    இதுமட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் புதிய திட்டம் கொண்டிருப்பதாக ஜப்பானில் இருந்து வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆப்பிள் இந்த ஆண்டு மொத்தம் ஐந்து ஐபோன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    புதிய ஐபோன்களில் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR மேம்பட்ட வெர்ஷன் மற்றும் 6.1 இன்ச் மற்றும் 6.5 இன்ச் அளவுகளில் OLED டிஸ்ப்ளே, மெல்லிய சேசிஸ், பெரிய சென்சார்கள், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 18 வாட் லைட்னிங்கில் இருந்து யு.எஸ்.பி. டைப்-சி வசதி கொண்ட இரண்டு புதிய ஐபோன்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது. 



    முன்னதாக வெளியான தகவல்களில் புதிய XS, XS மேக்ஸ் மற்றும் XR அப்டேட் மாடல்களில் வழக்கமான சார்ஜர்களுடன் ஒரே மாதிரியான சேசிஸ் கொண்டிருக்கும் என்றும் XR மாடலில் விலை குறைவான எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்பட்டது. 
    இவற்றை பார்க்கும் போது ஆப்பிள் நிறுவனம் ஐபோன் XS-ஐ விட புதிய ஃபிளாக்‌ஷிப் மாடலை அறிமுகம் செய்யலாம் என்றும் இது ஐபோன் ப்ரோ என்ற பெயர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    ஆப்பிள் தற்சமயம் ஏழு ஐபோன்களை விற்பனை செய்கிறது. இவற்றில் மூன்று தலைமுறை ஐபோன்கள் அடங்கும். இத்துடன் ஆறு ஆப்பிள் வாட்ச்கள், ஐந்து ஐபேட்கள், மூன்று ஆப்பிள் டி.வி.க்கள் மற்றும் ஆப்பிள் டி.வி. பிளஸ் ஸ்டிரீமிங் சாதனம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்கிறது.
    ட்விட்டர் சமூக வலைதளத்தில் லைவ் போட்டோஸ் வசதி வழங்குவதற்கான பணிகள் நடைபெறுகிறது. விரைவில் இதற்கான அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. #Twitter



    ஆப்பிள் நிறுவனம் 2015 ஆம் ஆண்டு லைவ் போட்டோஸ் அம்சத்தை அறிமுகம் செய்தது. ஐபோன் 6எஸ் மாடலுடன் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இவை 1.5 நொடிகள் கொண்ட அனிமேட்டெட் புகைப்படங்கள் ஆகும். புகைப்படம் க்ளிக் செய்யும் முன் மற்றும் க்ளிக் செய்த பின் காட்சிகளை பதிவு செய்வதே லைவ் போட்டோ என அழைக்கப்படுகிறது.

    ஃபேஸ்புக் வலைதளத்தில் லைவ் போட்டோக்களை பகிர்ந்து கொள்ளும் வசதி ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த அம்சம் தற்சமயம் ட்விட்டரிலும் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. ஐ.ஓ.எஸ். இயங்குதளத்துக்கான ட்விட்டர் செயலியின் கோட்களில் லைவ் போட்டோக்களுக்கான வசதி வழங்குவது பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

    இதனை சமூக வலைதள ஆய்வாளர் மேட் நவாரா தனது ட்விட்டரில் ஸ்கிரீன்ஷாட்களுடன் பதிவிட்டிருக்கிறார். ட்விட்டர் ஐ.ஓ.எஸ். தளத்தில் லைவ் போட்டோக்களை ஜிஃப்களாக மாற்றுவதற்கான அம்சம் சோதனை செய்யப்படுவதாக நவாரா தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் ட்விட்டரில் லைவ் போட்டோக்களுக்கான வசதி வழங்கப்படலாம் என்றே தெரிகிறது.



    எனினும், ட்விட்டர் லைவ் போட்டோக்களை சாதாரண ஜிஃப்களாக கருதுமா அல்லது லைவ் போட்டோக்களாக கருதுமா இல்லை ஃபேஸ்புக் போன்று லைவ் போட்டோக்களாகவே குறிப்பிடுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. ஐ.ஓ.எஸ். ட்விட்டர் செயலியில் ஏற்கனவே லைவ் போட்டோக்களை பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது, எனினும் இது சற்று சிரமமான காரியமாகவே இருக்கிறது.

    இதை செய்ய தற்சமயம் போட்டோஸ் செயலியை திறந்து, லைவ் போட்டோவினை தேர்வு செய்து அதனை லூப் அல்லது பவுன்ஸ் ஆக மாற்றி, பின் அந்த போட்டோவினை ட்விட்டர் ஐ.ஓ.எஸ். செயலியில் பகிர்ந்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது போட்டோ ஜிஃப் ஆக மாறியிருக்கும்.

    லைவ் போட்டோக்களுக்கான வசதியின் மூலம் பயனர்கள் எவ்வித சிரமமும் இன்றி நேரடியாக லைவ் போட்டோவினை தேர்வு செய்து செயலியில் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். இந்த அம்சம் தற்சமயம் சோதனை செய்யப்படுவதால் இது எப்போது அனைவருக்கும் வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 
    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டிற்குள் இரண்டு புதிய ஐபேட் மாடல்களை இருவித அளவுகளில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #iPad



    ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல்களை இருவித வேரியண்ட்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவை 10.2 இன்ச் மற்றும் 10.5 இன்ச் என இருவித அளவுகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    புதிய 10.2 இன்ச் ஐபேட் தற்சமயம் விற்பனை செய்யப்படும் 9.7 இன்ச் மாடலுக்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர புதிய ஐபேட் ஆப்பிள் நிறுவனத்தின் ஏழாவது தலைமுறை மாடலாக என்றும் கூறப்படுகிறது. இத்துடன் ஆப்பிள் நிறுவனம் 10.5 இன்ச் அளவில் மற்றொரு ஐபேட் மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக ததகவல் வெளியாகியுள்ளது.



    இருவித அளவுகளில் உருவாகி வருவதாக கூறப்படும் புதிய ஐபேட்கள் தனித்தனியே அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும், ஸ்கிரீன் அளவுகளை தவிர புதிய ஐபேட்களை ஆப்பிள் எவ்வாறு வித்தியாசப்படுத்தும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. 

    முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிளின் ஏழாம் தலைமுறை ஐபேட்களில் டச் ஐ.டி. மற்றும் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. டச் ஐ.டி. வழங்கப்படுவதால், ஆப்பிள் தனது ஐபேட் மாடலில் ஃபேஸ் ஐ.டி. அம்சத்தை வழங்காது என உறுதியாகியிருக்கிறது.

    ஏற்கனவே வெளியான தகவல்களில் புதிய ஐபேட் அளவுகள் பற்றி எவ்வத விவரமும் வெளியாகவில்லை. இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலத்திற்குள் ஆப்பிள் இரண்டு ஐபேட் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருப்பது சமீபத்திய காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது. #Apple #foldablesmartphone



    சாம்சங், சியோமி, ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. அந்நிறுவனம் பதிவு செய்திருந்த காப்புரிமையில் இந்த தகவல் கிடைத்துள்ளது.

    2011 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு பின் 2016 ஆம் ஆண்டு அப்டேட் செய்யப்பட்ட வடிவங்களில் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட ஐபோனினை ஆப்பிள் உருவாக்க இருப்பதாக தெரிகிறது. பிப்ரவரி 20 ஆம் தேதி சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    புதிய கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மாடல்களுடன் சாம்சங் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. ஆப்பிள் காப்புரிமையின் படி புதிய போன் பாதியாக மடிக்கக்கூடியதாக இருக்கும் என தெரிகிறது. முன்னதாக இதேபோன்ற வடிவமைப்பு மோட்டோரோலா பதிவு செய்திருந்த காப்புரிமையில் காணப்பட்டது.



    புகைப்படம் நன்றி: uspto

    சாம்சங் மற்றும் சியோமி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் விரிக்கப்பட்ட நிலையில், டேப்லெட் போன்று பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் நிலையில், ஆப்பிள் வடிவமைப்பில் வளையக்கூடிய OLED டிஸ்ப்ளே போனினை வளையச் செய்யும் என தெரிகிறது. வரைபடங்களில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன்கள் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் மடிக்கக்கூடியதாக இருக்கிறது. 

    அந்த வகையில் புதிய சாதனத்தை மேக்புக் அல்லது ஐபேட் போன்று இருக்கும் என தெரிகிறது. ஆப்பிள் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகள் வெளியாகியிருப்பதால் மடிக்கக்கூடிய ஐபோன்கள் இந்த ஆண்டே அறிமுகமாகும் என எதிர்பார்க்க முடியாது. ஆப்பிள் மடிக்கக்கூடிய சாதனம் பற்றிய புதிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகலாம்.
    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மட்டும் சுமார் மூன்று புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Apple



    ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட்கள், 16-இன்ச் மேக்புக் ப்ரோ, 31-இன்ச் 6K மாணிட்டர், இருபுறமும் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட ஐபோன்கள் உள்ளிட்டவை 2019 ஆண்டில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 2019 ஐபோன் மாடல்கள் ஐபோன் XS மற்றும் ஐபோன் XR மாடல்களின் அளவுகளை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    புதிய ஐபோன்களில் யு.எஸ்.பி. டைப்-சி கனெக்டிவிட்டி வழங்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஐபோன்கள் லைட்னிங் கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் அல்ட்ரா-வைடுபேண்ட் கனெக்டிவிட்டி தொழில்நுட்பம் வழங்கப்படும் என தெரிகிறது.

    இந்த தொழில்நுட்பத்துடன் இருபுறமும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி, அதாவது ஐபோன்களை கொண்டு வயர்லெஸ் முறையில் மற்ற சாதனங்களை சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஆப்பிள் சாதனங்களில் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ் ஐ.டி. தொழில்நுட்பம் வழங்கப்படும் என்றும், பெரிய பேட்டரி மற்றும் மூன்று கேமரா அமைப்பு கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.



    ஐபேட்களை பொருத்தவரை ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என்றும் இவற்றில் மேம்பட்ட பிராசஸர்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்போதைய 9.7 இன்ச் ஐபேட் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் இதில் 10.2 இன்ச் அளவில் மிகமெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஐபேட் மினி மாடலில் மேம்பட்ட பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இத்துடன் ஆப்பிள் நிறுவனம் 16 மற்றும் 16.5 இன்ச் அளவுகளில் மேக்புக் ப்ரோவினை புதிய வடிவமைப்பில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. டேப்லெட் மற்றும் லேப்டாப்களை தொடர்ந்து டிஸ்ப்ளே சந்தையில் ஆப்பிள் புதிய சாதனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் 31.6 இன்ச் அளவில் 6K3K மாணிட்டர் ஒன்றை அறிமுகம் செய்யலாம். இந்த டிஸ்ப்ளேவில் மினி எல்.இ.டி. போன்ற பேக்லிட் வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. வன்பொருள் சாதனங்களை தவிர ஆப்பிள் நிறுவனம் தனது மென்பொருள் சேவைகளை இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.
    வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை தொடர்ந்து ஐபோன்களுக்கும் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #WhatsAppBusiness



    வாட்ஸ்அப் நிறுவனம் தனது பிஸ்னஸ் செயலியை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. சிறு வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும் நோக்கில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் துவங்கப்பட்டது. இந்த செயலியை கொண்டு பயனர்கள் தங்களது வியாபார விவரங்களுடன் சொந்தமாக ப்ரோஃபைல்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

    வாட்ஸ்அப் பிஸ்னஸ் ப்ரோஃபைல்களில் வாடிக்கையாளர்கள் தங்களது வியாபாரத்தின் மின்னஞ்சல் அல்லது முகவரி மற்றும் வலைதள விவரங்களை பகிர்ந்து கொள்ளலாம். எனினும், இதுவரை இந்த செயலி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்திலும் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து WaBetaInfo வெளியிட்டிருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஐ.ஓ.எஸ். பதிப்பின் பீட்டா வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: wabetainfo

    வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஐ.ஓ.எஸ். பீட்டா செயலி தற்சமயம் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த செயலியில் பல்வேறு முக்கிய அம்சங்கள் மற்றும் வெவ்வேறு நிறங்களை கொண்ட பின்னணி புகைப்படங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரிகிறது.

    புதிய வசதிகளை பொருத்தவரை க்விக் ரிப்ளைக்கள், ஆட்டோமேட்டெட் கிரீட்டிங், அவே மெசேஜ்கள் மற்றும் ரெசிபியண்ட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் ஐ.ஓ.எஸ். 8 மற்றும் அதற்கும் அதிக இயங்குதளங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

    வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியை இன்ஸ்டால் செய்ததும், வாட்ஸ்அப் பிஸ்னஸ் மூலம் வியாபார நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள எளிய, பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்ற குறுந்தகவல் கிடைக்கிறது. இத்துடன் வாட்ஸ்அப் மெசஞ்சரில் இருக்கும் சாட் ஹிஸ்ட்ரியை வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் மைக்ரேட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.
    ×