என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேள்"

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
    • உணவு பொருட்களால் தேள் விமானத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    நாக்பூரில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண்ணை தேள் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் கடந்த மாதம் நடைபெற்றது.

    தேள் கொட்டியதால் பாதிக்கப்பட்ட பெண் பயணி விமான நிலையத்தில் திரையிறங்கியதும் அவரை மருத்துவர் பரிசோதனை செய்தார். பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    "கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் AI 630-இல் பயணித்த பெண்ணை தேள் கொட்டியது. இதுபோன்ற சம்பவம் அரங்கேறுவது மிகவும் அரிதான ஒன்று ஆகும்," என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமானம் முழுக்க தீவிர சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் தேள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விமானத்தில் வேறு ஏதேனும் பூச்சிக்கள் நுழைவதை தடுக்கும் வகையில், புகை போடப்பட்டது. இதோடு விமானத்தின் உணவு துறையிடம் அவர்களது பகுதியை முழுமையாக சோதனை செய்ய ஏர் இந்தியா வலியுறுத்தியது.

    உணவு பொருட்களால் தேள் விமானத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்பதால், அந்த பகுதியில் தேவைப்படும் பட்சத்தில் புகை போடவும் வலியுறுத்தி இருக்கிறது. முன்னதாக பறக்கும் விமானத்தில் பல்லி மற்றும் ஊர்வனங்கள் நுழைந்த சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

    தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பணியாற்றி வரும் பிரபு தேவா, தற்போது தேள் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
    பிரபு தேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தேள்’. ஹரிகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். அம்மாவாக ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.

    இப்படம் குறித்து பிரபுதேவா கூறும்போது, ‘இயக்குநர் ஹரிகுமார் மிகச்சிறப்பான பணியினை செய்துள்ளார். இயல்பை விடவும் பலமடங்கு அற்புதமான உழைப்பை இப்படத்திற்கு தந்துள்ளார். ஹரியும் நானும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். இருவரும் உதவி நடன இயக்குனர்களாக பணியாற்றியிருக்கிறோம். இப்போது அவர் மீண்டும் புதிய தளத்தில் தன் திறமையை நிரூபிக்கவுள்ளார். உண்மையாகவே இந்த திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. என் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது நடனம் தான். ஆனால், இந்தப்படத்தில் எனக்கு நடன காட்சியே இல்லை. மேலும் நான் இடது கை பழக்கம் கொண்டவனாக முதல் முறையாக நடித்திருக்கிறேன். 

    பிரபுதேவா

    நான் என் வழக்கமான நடிப்பை நடிக்கிறேனா என என்னை செக் செய்து கொண்டே இருப்பார் இயக்குனர். நான் அம்மாதிரி நடித்தால் உடனே அதை மாற்றுவார். ஈஸ்வரி மேடம் தமிழில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். சம்யுக்தா மிக பப்ளியான அழகான நாயகியாக மிளிர்கிறார். அவரது நடிப்பு இப்படத்தில் மிக முக்கிய அம்சமாக இருக்கும். இப்படம் மிக அழுத்தமான படைப்பாக, அனைவருக்கும் பிடிக்கும் படைப்பாக இருக்கும்’ என்றார்.

    பிரபல நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் பிரபுதேவா ‘லட்சுமி’ படத்தை அடுத்து மற்றொரு நடன இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார். #Prabhudeva
    சில்லுன்னு ஒரு காதல், பருத்தி வீரன், சிங்கம், சிறுத்தை, நான் மகான் அல்ல, கொம்பன், பிரியாணி, மாஸ், மெட்ராஸ் உள்பட பல படங்களை தயாரித்தவர், கே.ஈ.ஞானவேல்ராஜா. இவர் நடிகர் சிவகுமாரின் உறவினர் ஆவார். சூர்யா, கார்த்தி ஆகிய இருவரை வைத்தே படங்களை தயாரித்து வந்த ஞானவேல்ராஜா முதல் முறையாக ஆர்யாவை வைத்து, ‘கஜினிகாந்த்’ படத்தை தயாரித்தார்.

    அடுத்து இவர், பிரபுதேவாவை வைத்து, ‘தேள்’ என்ற படத்தை தயாரிக்கிறார். ‘தூத்துக்குடி,’ ‘மதுரை சம்பவம்’ உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்த பிரபல நடன இயக்குனர் ஹரிகுமார் கதை–திரைக்கதை எழுதி டைரக்டு செய்கிறார்.  

    பிரபுதேவா–ஹரிகுமார் இருவருமே நடன இயக்குனர்களாக இருந்து கதாநாயகன் ஆனவர்கள். படங்களை இயக்கியும் இருக்கிறார்கள். இவர்கள் கூட்டணியில், ‘தேள்’ படத்தை தயாரிப்பது பற்றி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியதாவது:–

    ‘‘ஒரு புகழ் பெற்ற நடன இயக்குனரை, இன்னொரு நடன இயக்குனர் இயக்குவது வெறும் எதேச்சையான நிகழ்வு மட்டும் அல்ல. நடனத்தில் அனுபவம் மிகுந்த இருவரும் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில், உணர்வுப்பூர்வமான ஒரு அதிரடி படத்தை கொடுக்க இருக்கிறார்கள். இது, எங்கள் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும்.’’

    இவ்வாறு ஞானவேல்ராஜா கூறினார்.
    ×