search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98111"

    கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார். அதனால் அவர் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பார் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தது, பிட்காயின் முறைகேடு போன்றவற்றால் பா.ஜனதாவுக்கு நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது.

    அதனால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த எடியூரப்பா, ‘‘முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை மாற்றும் பேச்சுக்கே இல்லை. அவர் சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார். அதனால் அவர் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பார்’’ என்றார்.
    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் நடவடிக்கையாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்க முதல்-மந்திரி குமாரசாமி முடிவு செய்துள்ளார்.
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா கடந்த ஓராண்டாக தீவிர முயற்சி செய்து வருகிறது.

    இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பா.ஜனதா 25 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த நிலையில் பா.ஜனதாவினர் மீண்டும் ஆபரேஷன் தாமரை திட்டத்தை கையில் எடுப்பார்கள் என்று பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அதற்கு ஏற்ப காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசியது பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது.

    இதனால் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை முறியடிக்கும் பணியில் முதல்-மந்திரி குமாரசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இறங்கியுள்ளனர்.

    காங்கிரசை சேர்ந்த பி.சி.பட்டீல், சுயேச்சை எம்.எல்.ஏ.வான சங்கர் ஆகிய 2 பேருக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து கூட்டணி தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான மகேஷ் கமடள்ளி நேற்று முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த பேச்சுவார்த்தையால் கூட்டணி ஆட்சிக்கு ஏற்பட்டு வந்த சிக்கல் தற்போது நீங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே காங்கிரஸ் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்க வசதியாக மூத்த தலைவர்கள் மந்திரி பதவியை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று அக்கட்சிகளின் தலைவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    தற்போது மந்திரிசபையில் காங்கிரசுக்கு ஒன்று மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 2 என்று மொத்தம் 3 மந்திரி பதவிகள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறுகையில் ‘நாங்கள் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. நாங்கள் புதிதாக சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம்.’ என்றார்.

    முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‘கூட்டணி ஆட்சி உறுதியாக இருக்கிறது.

    ரமேஷ் ஜார்கிகோளி உள்பட எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியைவிட்டு விலக மாட்டார்கள். கடந்த ஓராண்டாக எடியூரப்பா, கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்று கூறி வருகிறார். வருகிற 1-ந்தேதி கர்நாடகத்தில் பா.ஜனதா தலைமையில் அரசு அமைப்பேன் என்று எடியூரப்பா கூறியிருக்கிறார். அப்படி முடியாவிட்டால் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ய தயாரா?’ என்று சவால்விட்டு உள்ளார். இதனால் கர்நாடகத்தில் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.
    பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு கூட்டணியின் சாயம் வெளுத்துவிடும் என்று கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறியுள்ளர்.
    பெங்களூரு :

    கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியானதும், கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழந்துவிடும். தேர்தல் முடிவுக்கு பிறகு ஒரு நாள் கூட இந்த அரசு நீடிக்காது. வெளியில் பார்ப்பதற்கு, காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஒற்றுமையாக இருப்பது போல் தெரிகிறது.

    ஆனால் உள்ளே அவர்கள் மோதிக்கொள்கிறார்கள். முதல்-மந்திரி பதவியில் குமாரசாமி நீடிக்கக்கூடாது என்று சித்தராமையா சதித்திட்டம் தீட்டியுள்ளார். இதற்காகவே முதல்-மந்திரி பதவிக்கு எச்.டி.ரேவண்ணாவுக்கும் தகுதி உள்ளது என்று சித்தராமையா கூறி குழப்பத்தை உருவாக்கியுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியான பிறகு கூட்டணியின் சாயம் வெளுத்துவிடும். அதுவரை அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும். மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் முழுவதுமாக முடங்கிவிட்டது.

    மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. கால்நடைகளுக்கு தீவனம் இல்லை. வறட்சி பகுதிகளில் மந்திரிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. பெங்களூருவில் உட்கார்ந்து கொண்டு முதல்-மந்திரி காணொலி காட்சி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தினால் பிரச்சினைகள் தீராது.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
    அனந்தகுமார் ஹெக்டே, நளின்குமார் கட்டீல் ஆகியோர் கோட்சேவை ஆதரித்து கூறிய கருத்து மன்னிக்க முடியாத குற்றம் என்று எடியூரப்பா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
    பெங்களூரு :

    காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை ஆதரித்து மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, நளின் குமார் கட்டீல் எம்.பி. ஆகியோர் டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டு இருந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.அவர்கள் 2 பேரையும் கண்டித்து இன்று(சனிக்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

    கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-



    காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை ஆதரித்து மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, நளின்குமார் கட்டீல் ஆகியோர் கருத்து தெரிவித்து இருப்பது கட்சியின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அவர்களுக்கு விளக்கம் கேட்டு எங்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நோட்டீசு அனுப்பியுள்ளார். 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர் மகாத்மா காந்தி.

    ஒருவரை பற்றி பேசும்போது என்ன பேசுகிறோம் என்ற அறிவு இருக்க வேண்டும். இத்தகைய ெபாறுப்பற்ற கருத்துகளை கூறக்கூடாது. காந்தியை பற்றி கீழ்த்தரமாக பேசுவது நல்லதல்ல. அனந்தகுமார் ஹெக்டே, நளின்குமார் கட்டீல் கூறிய கருத்து, மன்னிக்க முடியாத குற்றம்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
    கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி ஆட்சியை கவிழ்த்து விட்டு சித்தராமைய்யா முதல்வர் ஆகும் முயற்சியில் தனது ஆதரவாளர்களுடன் பேசி வருகிறார். #Kumaraswamy #Siddaramaiah #congress

    பெங்களூர்:

    கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா தலைவர் எடியூரப்பா 4 தடவை முயற்சி செய்தார். ஆனால் 4 தடவையும் அந்த முயற்சி தோல்வி அடைந்தது.

    காங்கிரசில் சில எம்.எல். ஏ.க்கள் குமாரசாமி மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் எடியூரப்பா ஈடுபட்டுள்ளார். ஆனால் அதில் இன்னும் பலன் கிடைக்கவில்லை.

    இதற்கிடையே சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவி எதிர்பார்த்து போர்க்கொடி தூக்கி உள்ளனர். குறிப்பாக ரமேஷ் ஜார்கிகோலி, நாகேந்திரா, மகேஷ் கும்தஹள்ளி, பீம நாயக், காம்ப்ளி கணேஷ் ஆகிய 5 எம்.எல்.ஏ.க்கள் குமாரசாமி ஆட்சியை கவிழ்ப்போம் என்று மிரட்டல் விடுத்தப்படி இருக்கிறார்கள்.

    இந்த அதிருப்தி எம்.எல். ஏ.க்களை சமரசம் செய்யும் முயற்சிகளை குமாரசாமி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ்குண்டு ராவ் மேற்கொண்டுள்ளனர். நேற்று அவர்கள் மூவரும் சில அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசினார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்த பிறகு அமைச்சரவையை மாற்றலாம் என்று அப்போது பேசப்பட்டது. மேலும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பதவிகள் வழங்குவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஆனால் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

    இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமைய்யாவும் மீண்டும் முதல்-மந்திரி பதவியை பிடிக்க காய்களை நகர்த்தி வருகிறார். குமாரசாமியை ஒதுக்கி விட்டு பதவியை கைப்பற்ற வேண்டும் என்று அவர் கருதுகிறார். இதற்காக தனது ஆதரவாளர்களை அவர் தூண்டி விட்டுள்ளார்.

    அவரது ஆதரவாளர்களில் முக்கியமானவராக கருதப்படும் சோமசேகர் எம்.எல்.ஏ. என்பவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை ரகசியமாக கூட்டி உள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பலருக்கும் கூட்டத்துக்கு வரும்படி ரகசிய கடிதம் அனுப்பி உள்ளார்.


    இது குமாரசாமிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சியை கவிழ்த்து விடுவார்களோ என்ற புதிய தலைவலியை குமாரசாமி எதிர்கொண்டுள்ளார். #Kumaraswamy #Siddaramaiah #congress

    பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகும் வரை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதற்கு தடை விதித்து எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். #BJP #Yeddyurappa
    பெங்களூரு :

    கர்நாடக பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி சதானந்தகவுடா, தேசிய அமைப்பு துணை செயலாளர் பி.எல்.சந்தோஷ், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பாராளுமன்ற தேர்தல் நிலவரம், பா.ஜனதாவுக்கு சாதகமாக உள்ள தொகுதிகள் எவை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் எடியூரப்பா பேசியதாவது:-

    துமகூரு, கலபுரகி, கோலார் உள்ளிட்ட தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. இதை நான் பெருமைக்காக சொல்லவில்லை. அங்குள்ள கள நிலவரங்களின் அடிப்படையில் இதை சொல்கிறேன். தேர்தல் முடிவுகள் வெளியாகும் தினத்தன்று இது உண்மை என்று தெரியவரும்.

    சிஞ்சோலி, குந்துகோல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த (மே) மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி நீங்கள் அனைவரும் அந்த தொகுதிகளுக்கு சென்று தேர்தல் பணியாற்ற வேண்டும். இந்த 2 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது மிக முக்கியம்.



    அதனால் யாரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம். அவ்வாறு திட்டமிட்டிருந்தால் அதை தவிர்க்க வேண்டும். தேர்தல் முடிவு வெளியான பிறகு நீங்கள் எங்கு வேண்மென்றாலும் செல்லுங்கள்.

    இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

    சிஞ்சோலி தொகுதியில் பா.ஜனதா சார்பில் ராமச்சந்திர ஜாதவ் வேட்பாளராக நிறுத்தும்படி கர்நாடக தலைவர்கள், மேலிடத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர். இதனால் அக்கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி சுனில் வல்யாபுரே கடும் அதிருப்தியில் இருக்கிறார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் எடியூரப்பா இறங்கியுள்ளார்.

    எம்.எல்.சி. பதவி வழங்குவதாகவும், அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாகவும் கூறியதாக தெரிகிறது. அதற்கு சுனில் வல்யாபுரே, தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு சொல்வதாக கூறி இருக்கிறார். #BJP #Yeddyurappa

    பாராளுமன்ற தேர்தலில் 22 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி என்றும், சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறினார். #LokSabhaElections2019 #Yeddyurappa
    பெங்களூரு :

    கர்நாடக பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மூத்த தலைவர்கள் ஈசுவரப்பா, பிரகலாத்ஜோஷி, ஆர்.அசோக், அரவிந்த் லிம்பாவளி, சி.டி.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் நிலவரம் குறித்தும், சிஞ்சோலி, குந்துகோல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயருக்கு கட்சி மேலிடத்தில் ஒப்புதல் கிடைத்துவிட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் நிலவரம் குறித்து விரிவாக விவாதித்தோம். தலைவா்கள் தங்களின் தொகுதிகளில் நடந்த ஓட்டுப்பதிவு குறித்து எடுத்துக் கூறினர். அவர்கள் அளித்த தகவலின்படி, கர்நாடகத்தில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. இந்த எண்ணிக்கையில் இருந்து ஒரு தொகுதி கூடுமே தவிர அதில் குறைய வாய்ப்பு இல்லை.

    சிஞ்சோலி, குந்துகோல் ஆகிய சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்த தொகுதிகளில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.



    இதில் 2 தொகுதிகளுக்கு 2 பெயர்களை தேர்வு செய்து கட்சி மேலிடத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். கட்சி மேலிட தலைவர்கள், வேட்பாளர்களின் பெயா்களை நாளை (அதாவது இன்று) அறிவிப்பார்கள்.

    அந்த தொகுதிகளில் போட்டியிட விரும்பியவர்கள் அனைவரையும் அழைத்து பேசியுள்ளோம். கட்சியின் நலன் கருதி, தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படும்படி அறிவுறுத்தி இருக்கிறோம். அந்த 2 தொகுதிகளிலும் பா.ஜனதாவை வெற்றி பெற வைக்க நாங்கள் தீவிர முயற்சி செய்வோம்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    பா.ஜனதா சார்பில் சிஞ்சோலி தொகுதியில் டாக்டர் உமேஷ்ஜாதவ்வின் சகோதரர் ராமச்சந்திர ஜாதவ் மற்றும் குந்துகோல் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஐ.சிக்கனகவுடர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

    சட்டமன்ற இடைத்தேர்தலில் 2 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றால், சட்டசபையில் அக்கட்சியின் பலம் உயரும். தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்களின் பலம் 104-ல் இருந்து 106 ஆக உயரும்.#LokSabhaElections2019 #Yeddyurappa
    கர்நாடகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றி பெற்றால், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழும். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு இது நடைபெறும் என்று எடியூரப்பா கூறியுள்ளார். #Yeddyurappa #BJP
    பெங்களூரு :

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கொப்பல் தொகுதிக்கு உட்பட்ட கங்காவதியில் பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். முன்னதாக கூட்டத்தில் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பேசியதாவது:-

    கர்நாடகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றி பெற்றால், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழும். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு இது நடைபெறும். 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜனதா எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது. வெறும் 37 தொகுதிகளில் வென்ற ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆட்சி செய்கிறது.

    மண்டியாவில் சுயேச்சை வேட்பாளர் சுமலதாவுக்கு நல்ல ஆதரவு உள்ளது. ஊடகங்கள் அதை வெளிப்படுத்துகின்றன. ஆனால் ஊடகங்களை மிரட்டும் வகையில் குமாரசாமி பேசியுள்ளார். இதை நான் கண்டிக்கிறேன். இதற்காக குமாரசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இந்த தேர்தலில் குமாரசாமிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினேன். ஆனால் இந்த கூட்டணி அரசு அந்த திட்டங்களை எல்லாம் நிறுத்திவிட்டது.



    கூட்டணி கட்சிகள் பண பலம், சாதி பலம், அதிகார பலத்தை கொண்டு தேர்தலில் வெற்றி பெற முயற்சி செய்கிறது. இது சாத்தியமில்லை. அந்த கட்சிகளுக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்.

    பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு, நீர்ப்பாசன திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணி ஆட்சியின் வளர்ச்சியில் கர்நாடகம் 5 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது.

    ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவரை மோடி ஜனாதிபதி ஆக்கியுள்ளார். முஸ்லிம் மதத்தை சேர்ந்த அப்துல் கலாமை பா.ஜனதா ஜனாதிபதி ஆக்கியது. நாங்கள் சாதி, மத அரசியலை செய்வது இல்லை.

    நாங்கள் அனைத்து சாதி, மதத்தினரையும் முன்னேற்ற பாடுபடுகிறோம். ஆனால் நாங்கள் சாதி அரசியல் செய்வதாக முத்திரை குத்துகிறார்கள்.

    இவ்வாறு எடியூரப்பா பேசினார். #Yeddyurappa #BJP
    பா.ஜனதாவினரை கன்னத்தில் அறையுங்கள் என்று கூறிய சிவலிங்க கவுடா எம்.எல்.ஏ. பேச்சுக்கு கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். #Yeddyurappa #ShivalingeGowda
    பெங்களூரு:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் உள்ள ஹாசன் தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா, ஜே.டி.எஸ். வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.

    அவரை ஆதரித்து அந்த கட்சியின் அரிசிக்கெரே தொகுதி எம்.எல்.ஏ. சிவலிங்க கவுடா ஹாசனில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசாரத்தின்போது சிவலிங்க கவுடா பேசிய வீடியோ பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேமாக பரவி வருகிறது.

    அந்த வீடியோவில், சிவலிங்க கவுடா எம்.எல்.ஏ. பேசியிருப்பதாவது:-

    சிவலிங்க கவுடா

    பிரதமர் நரேந்திரமோடி, கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பரபரப்பாக பேசி இருக்கிறார். நான் ஆட்சிக்கு வந்தால் சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்பு பணத்தை எல்லாம் மீட்பேன். நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பேன். விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை உருவாக்கி, அவர்களை காப்பாற்றுவேன் என்று சரமாரியாக வாக்குறுதிகளை அளித்தார். அதில் எதையும் அவர் நிறைவேற்றவில்லை.

    500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். விவசாயிகளும், வியாபாரிகளும், தொழிலாளர்களும் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். வங்கிகளில் வாசலில் நின்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது குறித்து எந்த குற்ற உணர்வும் இல்லாமல் பா.ஜனதாவினர் மோடி வாழ்க என்று முழக்கம் எழுப்பிக் கொண்டு வலம் வருகின்றனர்.

    மோடிக்கு வாங்கு கேட்டு வரும் பா.ஜனதாவினரின் கன்னத்தில் நாலு அறைவிட்டு, மோடி வங்கியில் போடுவதாக சொன்ன 15 லட்ச ரூபாய் எங்கே? என்று தைரியமாக கேளுங்கள்.

    கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இந்த தேர்தலில் எதற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேளுங்கள். மக்கள் அமைதியாக இருப்பதால் தான் அவர்கள் பொய் வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள்.

    இவ்வாறு அந்த வீடியோவில் சிவலிங்க கவுடா எம்.எல்.ஏ. ஆவேசமாக பேசி உள்ளார்.

    இதற்கு சமூக வலைத்தளங்களில் பா.ஜனதாவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். அவரை கடுமையாக விமர்சித்து பா.ஜனதாவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    சிவலிங்க கவுடா எம்.எல்.ஏ. பேச்சுக்கு கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    சிவலிங்க கவுடாவின் பேச்சு கடும் கண்டனத்துக்குரியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோடி வாக்கு கேட்டு வந்தால் கல்லெறியுங்கள் என்று மக்களை தூண்டிவிடும் வகையில் பேசினார். தற்போது கன்னத்தில் அறையுங்கள் என்று பேசி வருகிறார்.

    முதல் மந்திரி குமாரசாமியின் ஆட்சியில் எம்.எல்.ஏக்கள் குண்டர்களை போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜனதாவினருக்கும், மோடிக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் பேசியுள்ள சிவலிங்க கவுடா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Yeddyurappa #ShivalingeGowda
    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றி பெற்றால், கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழும் என்று எடியூரப்பா கூறியுள்ளார். #Yeddyurappa #BJP
    பெங்களூரு :

    கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் பா.ஜனதா பலமான கட்சியாக உள்ளது. குறிப்பாக மும்பை-கர்நாடக பகுதியில் பா.ஜனதா நல்ல பலத்துடன் உள்ளது. ஐதராபாத்-கர்நாடக பகுதியிலும் எங்கள் கட்சி செல்வாக்குடன் திகழ்கிறது.

    கர்நாடகத்தில் 20 முதல் 22 தொகுதிகளில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால், மோதல் ஏற்பட்டு கூட்டணி ஆட்சி கவிழும். நாடு முழுவதும் பாஜகவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. மோடி அலை, கடந்த பாராளுமன்ற தேர்தலை விட இந்த முறை கட்சியின் பலத்தை அதிகரித்துள்ளது.

    மேற்கு வங்கம், ஒடிசா, வட கிழக்கு மாநிலங்களில் எங்கள் கட்சிக்கு புதிய பலம் கிடைக்கும். கடந்த முறை அந்த தொகுதிகளில் பா.ஜனதாவின் வெற்றி மிக குறைவாக இருந்தது. இதன் மூலம் பாஜக பாராளுமன்ற தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

    தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் எங்கள் கட்சிக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கும். கேரளாவிலும் எங்கள் கட்சி வெற்றி கணக்கை தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ராஜஸ்தான், மத்தியபிரதேச சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சி தோல்வி அடைந்தது.



    ஆனால் இந்த பாராளுமன்ற தேர்தலில் அந்த மாநிலங்களில் கடந்த பாராளுமன்ற தேர்தலை போலவே நல்ல வெற்றி கிடைக்கும். பா.ஜனதாவின் நிலை கர்நாடகத்தில் நன்றாகவே உள்ளது. துமகூரு, மைசூரு ஆகிய தொகுதிகளில் நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம்.

    ஹாசனில் கடும் போட்டியை கொடுப்போம். ஐதராபாத்-கர்நாடக பகுதியில் எங்கள் கட்சி நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. காங்கிரசில் இருந்து மாலிகையா குத்தேதார், பாபுராவ் சின்சனசூர், மாலகரெட்டி ஆகியோரின் வருகையால், கலபுரகி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கே தோல்வி அடைவார். மத்திய கர்நாடக பகுதியிலும் எங்கள் கட்சி பலம் வாய்ந்ததாக திகழ்கிறது.

    கர்நாடகத்தில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் பிரசாரம் மூலம், பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும். கர்நாடகத்தில் 4 தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுமாறு மோடியிடம் கூறி இருக்கிறோம். இடம், தேதி இன்னும் முடிவு செய்யவில்லை.

    அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானிக்கு எதிராக ராகுல் காந்தி வெற்றி பெறுவது கடினம். அதனால் அவரை கர்நாடகத்தில் போட்டியிடுமாறு இங்குள்ள தலைவர்கள் கேட்கிறார்கள். கர்நாடகத்தில் ராகுல் காந்தி போட்டியிட்டால், அவர் வெற்றி பெறுவது கடினம். இந்த அபாயமான முடிவை அவர் எடுக்க மாட்டார் என்று நான் நினைக்கிறேன்.

    சிவமொக்கா தொகுதியில் எனது மகன் பி.ஒய்.ராகவேந்திரா, ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். கடந்த 6 மாதமாக அவர் ஓய்வே எடுக்காமல் அந்த தொகுதியில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இன்னும் 2, 3 நாட்களில் நான் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளேன்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார். #Yeddyurappa #BJP
    வருமான வரித்துறை போலி ஆவணங்கள் என்று நிராகரித்த குறிப்புகளை வைத்து தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் அவதூறு பிரசாரம் செய்ய தொடங்கி விட்டதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார். #LSpolls #electionmileage #Yeddyurappa
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா ஆட்சிக்காலத்தில் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு ரூ.1800 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதாக வெளியான தகவலை லோக்பால் விசாரிக்க வேண்டும் என்று டெல்லியில் இன்று பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா வலியுறுத்தினார்.

    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பதிலளித்த எடியூரப்பா, வருமான வரித்துறை போலி ஆவணங்கள் என்று நிராகரித்த குறிப்புகளை வைத்து தேர்தல் நேரத்தில்  காங்கிரஸ் அவதூறு பிரசாரம் செய்ய தொடங்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.



    'ஊழல் எண்ணங்களில் மூழ்கிப்போய் கிடக்கும் காங்கிரஸ் தலைவர்கள் மோடியின் செல்வாக்கை கண்டு அச்சத்தில் உறந்துப்போய் கிடக்கின்றனர். அவரது செல்வாக்கை எதிர்த்து வெற்றிபெற முடியாதவர்கள் தேர்தலுக்காக இப்படிப்பட்ட அவதூறான குற்றச்சாட்டுகளை பரப்புகின்றனர்.

    காங்கிரஸ் தெரிவித்துள்ள கருத்துகள் எல்லாம் தவறானவை, ஆதாரமற்றவை. இதை வெளியிட்ட நபர் மீது அவதூறு வழக்கு தொடர்வதற்காக வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்’ எனவும் எடியூரப்பா தெரிவித்தார். #LSpolls #electionmileage #Yeddyurappa
    கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா ஆட்சிக்காலத்தில் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு ரூ.1800 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதாக வெளியான தகவலை லோக்பால் விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. #Congressseeksprobe #Rs1800crorepayoffs #BJPleaderss1800crore
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா இல்லத்தில் வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட டைரியில் காணப்பட்ட விபரம் என்று எடியூரப்பாவின் கையொப்பத்துடன் பிரபல ஆங்கில பத்திரிகை ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து வருமான வரித்துறை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ள இந்த டைரியின் சில பக்கங்களின் நகல்களில் எடியூரப்பா லஞ்சமாக சம்பாதித்த பணத்தில் இருந்து சுமார் 1800 கோடி ரூபாய் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்களுக்கு அளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



    இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ’கடந்த 2017-ம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட இந்த டைரியில் காணப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் இதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின்மீது மோடி தலைமையிலான மத்திய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ என கேள்வி எழுப்பினார்.  லஞ்சப்பணம் பங்குபோடும் விவகாரம் தொடர்பாக சில தலைவர்கள் எடியூரப்பாவுடன் நடத்திய உரையாடல்களையும் அவர் படித்துக் காட்டினார்.

    இந்த லஞ்சப்பணத்தை பாஜக தலைவர்கள் வாங்கினார்களா?, இல்லையா? என்பதை பிரதமர் மோடி உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டும். இந்த ஆதாரத்தில் தகுந்த முகாந்திரம் இருப்பதால் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் அனைவரிடமும் புதிதாக நியமிக்கப்பட்ட லோக்பால் நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா வலியுறுத்தியுள்ளார். #Congressseeksprobe #Rs1800crorepayoffs #BJPleaderss1800crore
    ×