search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99004"

    வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசன்ஜர் போன்ற பேஸ்புக் நிறுவன செயலிகளில் மெட்டா பிராண்டிங் அமலுக்கு வந்தது.


    வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசன்ஜர் மற்றும் இதர பேஸ்புக் குழும செயலிகளில் மெட்டா பிராண்டிங் காண்பிக்கிறது. அனைத்து செயலிகளின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். வெர்ஷன்களில் மெட்டா பிராண்டிங் தோன்றுகிறது. முன்னதாக பேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மெட்டா என மாற்றுவதாக அறிவித்தது.

    அந்த வரிசையில், தற்போது செயலிகளில் பேஸ்புக்கிற்கு மாற்றாக மெட்டா எனும் பிராண்டிங் இடம்பெற்று இருக்கிறது. முன்பை போன்று வழக்கமான சமூக வலைதளமாக நிறுவனமாக மட்டும் செயல்படுவதை தவிர்த்து, மெட்டாவெர்ஸ் எனும் புதிய மெய்நிகர் தொழில்நுட்பத்தில் இந்த நிறுவனம் முதலீடு செய்ய இருக்கிறது.

     கோப்புப்படம்

    பேஸ்புக் மட்டுமின்றி மைக்ரோசாப்ட் மற்றும் பல்வேறு இதர தொழில்நுட்ப நிறுவனங்களும் மெட்டாவெர்ஸ் போன்ற சேவைகளை உருவாக்கும் முயற்சியை துவங்கி உள்ளன.
    வாட்ஸ்அப் செயலியில் தீபாவளிக்காக பிரத்யேக அனிமேஷன் ஸ்டிக்கர்கள் வெளியிடப்பட்டுள்ளன.


    வாட்ஸ்அப் செயலியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரத்யேக அனிமேடெட் ஸ்டிக்கர்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதை கொண்டு பயனர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாடலாம். 

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பண்டிகை கொண்டாட்ட முறைகள் முற்றிலும் மாறி போயுள்ளன. இந்த காலக்கட்டத்தில் விர்ச்சுவல் முறையில் அனைவருடன் இணைந்து இருப்பதே சிறந்த வழிமுறையாக இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் இணைந்திருக்க வாட்ஸ்அப் மட்டுமே சிறந்த தளமாக இருக்கிறது.

     வாட்ஸ்அப் ஸ்டிக்கர்

    இவற்றை கருத்தில் கொண்டே தீபாவளி பண்டிகைக்காக வாட்ஸ்அப் அனிமேடெட் ஸ்டிக்கர்களை வெளியிட்டு உள்ளது. ஸ்டிக்கர்களை மற்றவர்களுக்கு அனுப்பி பயனர்கள் தங்களின் வீட்டில் இருந்தபடி தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும்.
    வாட்ஸ்அப் செயலியின் புதிய பீட்டா வெர்ஷன்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களுக்கு வெளியாகி இருக்கின்றன.


    வாட்ஸ்அப் புதிய பீட்டா வெர்ஷனில் பேஸ்புக்கின் புதிய பெயர்- மெட்டா தோன்றுகிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். பீட்டா வெர்ஷன்களில் வாட்ஸ்அப் பிரம் மெட்டா என காட்சியளிக்கிறது. இதுவரை வாட்ஸ்அப் பிரம் பேஸ்புக் என்றே தோன்றிவந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த மாற்றம் அனைத்து பயனர்களுக்கும் இதுவரை வழங்கப்படவில்லை. அனைவருக்கும் இந்த மாற்றம் அமலாக மேலும் சிலகாலம் ஆகும் என்றே தெரிகிறது. கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனம் தனது புதிய பெயரை அறிவித்தது. இத்துடன் சமூக வலைதள நிறுவனமாக மட்டும் இல்லாமல், மெய்நிகர் ஆன்லைன் உலகமாக மெட்டாவெர்ஸ் நோக்கி கவனம் செலுத்த போவதாக தெரிவித்தது.

     மெட்டா

    புது மாற்றம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.21.22.21 வெர்ஷனில் காட்சியளிக்கிறது. இது வாட்ஸ்அப் ஸ்பிலாஷ் ஸ்கிரீன் மற்றும் செட்டிங் மெனுவில் காட்சியளிக்கிறது. பீட்டா வெர்ஷனிலும் இந்த மாற்றம் அனைத்து பயனர்களுக்கும் தோன்றவில்லை.

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் சில மாதங்களுக்கு முன் சோதனை செய்யப்பட்ட அம்சம் தற்சமயம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.



    வாட்ஸ்அப் செயலியில் கான்சிக்யூட்டிவ் வாய்ஸ் மெசேஜஸ் (Consecutive Voice Messages) பிளேபேக் அம்சம் ஆண்ட்ராய்டு அப்டேட் மூலம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. 

    முன்னதாக மார்ச் மாதத்தில் வாட்ஸ்அப் பீட்டா 2.19.86 பதிப்பில் இந்த அம்சம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இருமாதங்கள் சோதனைக்கு பின் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்சமயம் வாட்ஸ்அப் செயலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் இந்த அம்சம் மூலம் வாய்ஸ் மெசேஜ்களை தொடர்ச்சியாக கேட்க முடியும்.

    முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் வாய்ஸ் மெசேஜ்களை ஒவ்வொன்றாகவே கேட்க முடியும். தற்சமயம் புதிய அப்டேட் மூலம் வாய்ஸ் மெசேஜ்களில் ஒரே க்ளிக் செய்து இடைவெளியின்றி கேட்க முடியும். இந்த அம்சம் தவிர புதிய வாட்ஸ்அப் அப்டேட்டில் CVE-2019-3568 பிழையும் சரி செய்யப்பட்டுள்ளது.



    சமீபத்தில் வாட்ஸ்அப் செயலியில் ஸ்பைவேர் தாக்குதல் கண்டறியப்பட்டது. இந்த ஸ்பைவேர் பயனரின் மொபைலில் வாய்ஸ் கால் மூலம் விவரங்களை சேகரித்தது. வாய்ஸ் கால் அழைப்பை பயனர் ஏற்றாலும், ஏற்கவில்லை என்றாலும் பயனர் விவரங்களை இந்த ஸ்பைவேர் சேகரித்தது உறுதி செய்யப்பட்டது.

    இது பயனர் ஸ்மார்ட்போனின் குறுந்தகவல்கள், ஜி.பி.எஸ். லொகேஷன், மின்னஞ்சல், பிரவுசர் ஹிஸ்ட்ரி, மற்றும் பல்வேறு விவரங்களை சேகரித்து வந்தது. கடந்த மாதம் கண்டறியப்பட்ட பிழை ஏற்கனவே முந்தைய அப்டேட் மூலம் சரி செய்யப்பட்டுள்ளது.
    ஃபேஸ்புக் நிறுவனம் அதன் வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.



    ஃபேஸ்புக் நிறுவனம் தனது வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்க இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் வழங்க இருப்பது பற்றி ஏற்கனவே பலமுறை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனினும், ஃபேஸ்புக் தனது குறுந்தகவல் செயலியில் விளம்பரங்கள் வழங்குவது பற்றி முதல் முறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    2020 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் தோன்றும் என ஃபேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் நடைபெற்ற ஃபேஸ்புக் வருடாந்திர விளம்பர கூட்டத்தில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் எங்கு விளம்பரங்கள் தோன்றும் என்ற விவரங்கள் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.



    ட்விட்டரில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஃபேஸ்புக் தனது வாடிக்கையாளர்கள் வியாபாரங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என நினைக்கிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப்பில் க்ளிக் செய்யப்படும் விளம்பரங்கள் என குறிப்பிடப்படுகிறது.



    இரண்டாவது திட்டம் இன்ஸ்டாகிராம் சார்ந்தது ஆகும். இது வாட்ஸ்அப் (ஐ.ஜி.) க்ளிக் செய்யப்படும் விளம்பரங்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மூன்றவாது திட்டத்தில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்களை தோன்ற செய்வது ஆகும். இது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் விளம்பரங்கள் தோன்றுவதை போன்று செயல்படும். 

    இந்த திட்டம் 2020 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் அதிகளவு ரிச்சர் ஃபார்மேட்களை புகுத்த ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்குவது மட்டுமின்றி வியாபார ரீதியில் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் தளமாக வாட்ஸ்அப் இருக்க வேண்டும் என ஃபேஸ்புக் நினைக்கிறது.
    வாட்ஸ்அப் செயலியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களின் படி பயனர்கள் இனி ஸ்டோரியை இங்கும் ஷேர் செய்ய முடியும் என கூறப்படுகிறது.



    இன்ஸ்டாகிராம் செயலியில் ஸ்டோரியை ஃபேஸ்புக் ஸ்டோரியில் ஷேர் செய்யும் வசதி ஏற்கனவே வழங்கப்படுகிறது. தற்சமயம் வாட்ஸ்அப் செயலியிலும் இதே அம்சம் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் புகைப்படங்கள், வீடியோக்கள், ஜிஃப்கள் மற்றும் டெக்ஸ்ட் உள்ளிட்டவற்றை ஃபேஸ்புக் ஸ்டோரியில் ஷேர் செய்ய முடியும். இன்ஸ்டாகிராம் போன்று இல்லாமல், வாட்ஸ்அப்பில் இதனை பயனர்கள் தானாக ஷேர் செய்ய வேண்டும். இன்ஸ்டாகிராமில் இது தானாக நடைபெறும் வகையில் வழங்கப்படுகிறது.



    வாட்ஸ்அப் செயலியில் காண்டாக்ட் விவரங்களை கியூ.ஆர். கோட் மூலம் பகிர்ந்து கொள்ளும் வசதியை ஐ.ஓ.எஸ். தளங்களில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு தளத்தில் சோதனை செய்யப்படுகிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.151 பதிப்பில் இதற்கான வசதி சோதனை நடைபெறுகிறது.

    இதில் புதிய கியூ.ஆர். கோட் பட்டன் காணப்படுகிறது. இது வாட்ஸ்அப் செயலியின் ப்ரோஃபைல் பகுதியில் காணப்படுகிறது. கியூ.ஆர். கோட் ஆப்ஷனை க்ளிக் செய்ததும் கியூ.ஆர். கோட் உருவாக்கப்பட்டு விடும். இதனை மற்றவர்களுடன் மிக எளிமையாக பகிர்ந்து கொள்ள முடியும்.



    இந்த அம்சம் மூலம் பயனர்கள் மிக எளிமையாக காண்டாக்ட்களை நேரடியாக செயலியில் இருந்தபடி சேர்க்க முடியும். இது இன்ஸ்டாகிராமின் நேம்டேக் அம்சம் மற்றும் ஸ்னாப்சாட் செயலியின் ஸ்னேப்கோட் அம்சங்களை போன்று இயங்குகிறது. கியூ.ஆர். கோட் உறுதி செய்யப்பட்டதும், வாட்ஸ்அப் அட்ரஸ் புக் பகுதியில் தேவையான விவரங்களை தானாக பதிவு செய்து கொள்ளும்.

    கியூ.ஆர். கோடை முதல் முறை உருவாக்கும் போது, வாட்ஸ்அப் அதனை ரிவோக் செய்வதற்கான வசதி வழங்கப்படும், இதனை நிறுத்தி கியூ.ஆர். கோடை்களை ரீபிளேஸ் செய்து அவற்றை வேலை செய்ய வைக்கலாம். இந்த அம்சங்கள் தற்சமயம் சோதனை செய்யப்படுவதால், இவை வாட்ஸ்அப் செயலியின் எதிர்கால அப்டேட்களில் வழங்கப்படலாம்.

    புகைப்படம் நன்றி: wabetainfo
    வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் தகவல்களின் நம்பகத்தன்மை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.



    வாட்ஸ்அப் செயலியில் ஏராளமான போலி செய்திகள் பரவி வரும் நிலையில் டெல்லியை சேர்ந்த டிஜிட்டல் எம்பவர்மென்ட் பவுண்டெசன் அமைப்பு வாட்ஸ்அப் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வை நடத்தியது.

    நாட்டின் 11 முக்கிய மாநிலங்களில் உள்ள இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் பொதுமக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. போலி செய்திகளால் ஏற்படும் மோதல்களுக்கு யார் பொறுப்பு? என்ற தலைப்பில் நடந்த இந்த ஆய்வில் 3,138 பேர் கலந்து கொண்டனர்.

    சமூக வலைதளங்களில் வரும் தவறான தகவல்களை சரிபார்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாட்ஸ்அப் பயனாளர்களிடம் ஏராளமான கோள்விகள் கேட்கப்பட்டது. இதில் 79 சதவிகிதம் பேர் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வரை வாட்ஸ்அப்பில் செலவிடுவதாக கூறி உள்ளனர். 



    13 சதவிகிதம் பேர் 3 முதல் 4 மணி நேரம் வரையும், 3 சதவிகிதம் பேர் 7 மணி நேரத்துக்கும் அதிகமாக வாட்ஸ்அப்பில் செலவிடுவதாகவும் தெரிவித்தனர். ஊடகங்களில் வந்த தகவல்கள் என பரவும் செய்திகள் குறித்த கேள்விகளுக்கு 4 சதவிகிதம் பேர் வீடியோக்களுடன் வரும் செய்திகளை மட்டும் நம்புவதாக கூறி உள்ளனர். 15 சதவிகிதம் பேர் புகைப்படங்களை நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

    வாட்ஸ்அப்பில் வரும் தகவல்களை 45 சதவிகிதம் பேர் நம்பவில்லை என்பது ஆய்வில் தெரிவித்துள்ளது. 13 சதவிகிதம் பேர் எந்த வாட்ஸ்அப் குரூப்பிலும் இல்லை எனவும், 53 சதவிகிதம் பேர் 1 முதல் 5 குரூப்பிலும், 18 சதவிகிதம் பேர் 6 முதல் 10 குரூப்பில் இருப்பதாகவும், 4 சதவிகிதம் பேர் 30க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குரூப்புகளில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 சலுகையை இலவசமாக வழங்குவதாக வாட்ஸ்அப் செயலியில் தகவல் பரவி வருகிறது.



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை வைத்து பல்வேறு ஊழல்கள் அரங்கேறி இருக்கின்றன. முன்னதாக ஜியோ மொபைல் டவர் ஊழல் மற்றும் ஜியோ டி.டி.ஹெச். இணைப்பு உள்ளிட்டவை சார்ந்து வெளியான போலி தகவல்களால் இந்தியா முழுக்க பலர் பாதிக்கப்பட்டனர். 

    அந்த வரிசையில் தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 விலை சலுகையை இலவசமாக வழங்குவதாக வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல் வேகமாக பகிரப்படுகிறது.

    இவ்வாறு பகிரப்படும் குறுந்தகவல்களில் ரிலையன்ஸ் ஜியோ பெயர் பயன்படுத்தப்பட்டு, அதில் ரூ.399 சலுகை பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. குறுந்தகவல்களின் படி இலவச சலுகை ஐ.பி.எல். 2019 போட்டி தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மேலும் இச்சலுகை 20,000 ஜியோ பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



    போலி குறுந்தகவலின் படி பயனர் முதலில் தங்களது பெயர் மற்றும் ஜியோ மொபைல் நம்பரை பதிவிட வேண்டும். பின் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேனர் இடம்பெற்றிருக்கும் வலைப்பக்கம் ஒன்று திறக்கிறது. இந்த பக்கத்தி்ல் குறுந்தகவலை வாட்ஸ்அப் செயலியில் பத்து பேருக்கு ஃபார்வேர்டு செய்யக் கோருகிறது. இவ்வாறு செய்யும் பட்சத்தில் பயனர் தங்களது விவரங்களை போலி தளத்திற்கு பறிக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். 

    இதனால் இலவசம் என்ற பெயரில் பரவும் போலி குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்காமல் இருப்பதே நல்லது. பொதுவாக பெரும் நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்படும் சலுகைகள் மற்றும் தள்ளுபடி போன்றவை அந்நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் அறிவிக்கப்படும். 

    இதனால் இதுபோன்ற குறுந்தகவல்களை எதிர்கொள்ளும் போது சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் வலைதளங்களில் சென்று சலுகை மற்றும் இதர விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதவிர நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகளை தொடர்பு கொண்டும் சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.
    வாட்ஸ்அப் செயலியில் புதிதாக நூற்றுக்கணக்கான எமோஜி மற்றும் நைட் மோட் வசதிகளை புதிய அப்டேட் மூலம் பெற இருக்கிறது.



    வாட்ஸ்அப் புதிய ஆண்ட்ராய்டு பீட்டா தளத்தில் பல்வேறு புதிய எமோஜிக்கள் மற்றும் நைட் மோட் வழங்கப்பட இருப்பது பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.139 அப்டேட்டில் புதிய வடிவமைப்பு கொண்ட சுமார் 155 எமோஜிக்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய எமோஜிக்கள் அடுத்த கூகுள் பிளே ஸ்டேபில் அப்டேட்டில் வழங்கப்படலாம் என தெரிகிறது. முந்தைய அப்டேட்டில் டார்க் மோட் அம்சம் காணப்பட்ட நிலையில், தற்சமயம் இவை நைட் மோட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: WABetaInfo

    அந்த வகையில் எதிர்காலத்தில் வரும் ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட்டில் நைட் மோட் அம்சம் வழங்கப்படலாம். வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.139 பதிப்பில் 155 எமோஜிக்கள் புதிய வடிவமைப்பு பெற்றிருக்கின்றன. இவை வாட்ஸ்அப் அடுத்த ஸ்டேபில் அப்டேட்டில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.139 பதிப்பில் நைட் மோட் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை உணர்த்தியிருக்கிறது. தற்சமயம் இந்த அம்சம் எனேபிள் செய்யப்படவில்லை என்ற போதும், அடுத்த பீட்டா அப்டேட்டில் வழங்கப்படலாம் என தெரிகிறது. புதிய அப்டேட் நீண்ட காலமாக சோதனை செய்யப்பட்ட டார்க் மோட் அம்சம் நைட் மோட் என பெயர் மாற்றம் பெறுவதை உறுதி செய்திருக்கிறது.
    சேலம் மாவட்டத்தில் தண்ணீர் அஞ்சலி என விளம்பர போஸ்டர் ஒன்று வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது.
    ஆத்தூர்:

    செல்போன் இன்றி வாழ்பவர்களை பார்ப்பது கடினம். நகரம் முதல் கிராமம் வரை செல்போன் பரவி கிடக்கிறது. இதில் ‘வாட்ஸ்அப்’ பயன்படுத்துபவர்கள் தினமும் மெசேஜ், புகைப்படங்கள் அனுப்பிக் கொள்வது, ‘வாட்ஸ்அப்’ குரூப்பில் உரையாடுவது என மணிக்கணக்கில் நேரங்களை செலவிடுகின்றனர்.

    இந்த நிலையில் தண்ணீர் அஞ்சலி என விளம்பர போஸ்டர் ஒன்று வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. சேலம் மாவட்ட ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கோடை வெயில் காரணமாக நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. பெரும்பாலான குளங்கள், கிணறுகளிலும் தண்ணீர் வற்றிவிட்டது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக பல்வேறு இடங்களுக்கு அலையும் நிலை நீடிக்கிறது.

    இதனால் வெறுப்படைந்த, யாரோ ‘வாட்ஸ்அப்’பில் தண்ணீர் அஞ்சலி என போஸ்டர் தயார் செய்து உலா விட்டுள்ளனர். அதில், 2 கண்களில் இருந்து கண்ணீர் சிந்துவது, அதன் கீழ் தோற்றம் (ஆதி), நடுவில் குடிநீர் குழாய், மறைவு 2050 (ஆரம்பம்) என சித்தரித்துள்ளனர்.

    இதை தவிர கவிதை ஒன்றையும் எழுதியுள்ளனர். நீ(ர்) அழுதாலும், கண் (நீர்) வருவதில்லை. காரணம் மனிதன் தான் என்பது அவனுக்கும் புரியவில்லை. நீ(ர்) இருக்கும் வரை யாருக்கும் கவலை இல்லை. நீ(ர்) மறைந்தால் மனிதகுலமே இல்லை. நீ(ர்) இன்றி தவிக்கப்போகும் உயிருக்கும், உலகிற்கும் எங்களது பணிவான கண்ணீர் அஞ்சலி என குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

    இந்த போஸ்டரின் கடைசியில், மகன்கள் மரம், மலை, அணை, கணவன் காற்று, மகள்கள் குளம், ஏரி நதி என எழுதியுள்ளனர். இது செல்போன்களில் வைரலாக பரவி வருகிறது.
    உலகம் முழுக்க வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் உடனடியாக தங்களது செயலியை அப்டேட் செய்ய அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
     


    வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் சுமார் 150 கோடி பேரும் உடனடியாக செயலியை அப்டேட் செய்ய அந்நிறுவனம் வலியுறுத்தி இருக்கிறது. 

    முன்னதாக ஹேக்கர்கள் கைவரிசை காரணமாக வாட்ஸ்அப் செயலி மூலம் பயனர் ஸ்மார்ட்போன்களில் ஸ்பைவேர் இன்ஸ்டால் ஆகியிருந்தது கண்டறியப்பட்டது. இந்த ஸ்பைவேர் பயனருக்கு தெரியாமல் அவர்களது ஸ்மார்ட்போனின் கேமரா, மைக்ரோபோன் உள்ளிட்டவற்றை ரகசியாக இயக்குவதோடு அவர்களது குறுந்தகவல், லொகேஷன் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

    ஸ்பைவேர் இன்ஸ்டால் ஆனது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் நிறுவனம் பிழையை சரி செய்வதற்கான அப்டேட் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பயனர்கள் தங்களது செயலியை உடனடியாக அப்டேட் செய்ய அந்நிறுவனம் தனது பயனர்களை வலியுறுத்தி வருகிறது.



    “மொபைல் சாதனங்களில் சேமிக்கப்பட்ட விவரங்களை ஸ்பைவேர் சேகரிக்காமல் இருக்கச் செய்யவே இந்த அப்டேட் வழங்கப்படுகிறது. எங்களது பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சந்தையில் முன்னணி நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்,” என வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ஸ்பைவேரை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சைபர் நுண்ணறிவு நிறுவனம் உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்பைவேர் வாட்ஸ்அப் வாய்ஸ் கால் மூலம் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் ஆகி இருக்கிறது. இது வாட்ஸ்அப் அழைப்பை பயனர் ஏற்றாலும், ஏற்கவில்லை என்றாலும் பயனர் மொபைல்களில் இன்ஸ்டால் ஆகி இருக்கிறது.

    முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு இருக்கும் வாட்ஸ்அப் செயலியில் இந்த ஸ்பைவேர் மூலம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் இதுவரை வழங்கப்படவில்லை. உலகளவில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோரில் சுமார் 20 கோடி பேர் இந்தியர்கள் ஆவர்.

    ஸ்பைவேர் தாக்குதல் பற்றி விசாரணை துவங்கப்பட்டு இருப்பதாகவும், விசாரணைக்கு உதவ அமெரிக்க சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு தேவையான விவரங்களை வழங்கி இருப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
    ஃபேஸ்புக் நிறுவனம் இந்த போன்களில் தனது வாட்ஸ்அப் சேவையை 2019 ஆண்டு இறுதியில் நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. #WhatsApp



    பிளாக்பெரி இயங்குதளத்தில் வாட்ஸ்அப் செயலிக்கான வசதி 2017 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. முன்னதாக ஆண்ட்ராய்டு 2.3.3 மற்றும் விண்டோஸ் போன் 7 இயங்குதளங்களில் வாட்ஸ்அப் சேவை 2016 ஆம் ஆண்டே நிறுத்தப்பட்டது. 

    இதன் தொடர்ச்சியாக விண்டோஸ் போன் தளங்களில் வாட்ஸ்அப் சேவை இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பின் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பின் வாட்ஸ்அப் செயலியை விண்டோஸ் 10 தளங்களில் பயன்படுத்த முடியாது. 



    மேலும் இந்த செயலிக்கான அப்டேட்களும் வழங்கப்படாது. முன்னதாக 2017 ஆம் ஆண்டு விண்டோஸ் போன் 8.0 தளத்தில் வாட்ஸ்அப் வசதி நிறுத்தப்பட்டது. தற்சமயம் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் தளங்களின் பட்டியலை அந்நிறுவனம் தனது வலைதளத்தில் மாற்றியிருக்கிறது.

    விண்டோஸ் போன் தளத்தில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட இருக்கும் நிலையில், அந்நிறுவனம் சர்வதேச விண்டோஸ் தளத்துக்கான (Universal Windows Platform - UWP) புதிய செயலியை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயலி சமீபத்திய விண்டோஸ் போன் மற்றும் டெஸ்க்டாப் தளங்களில் இயங்கும் என கூறப்படுகிறது.
    ×