என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 99345
நீங்கள் தேடியது "slug 99345"
- காங்கோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலியாகினர்.
- கனமழை வெள்ளத்தால், வீடுகள், சாலைகள் தண்ணீரால் சூழப்பட்டன.
கின்ஷாசா:
காங்கோ நாட்டின் மசிசி மாகாணத்தின் பொலொவா கிராமத்தில் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் சாலைகள் தண்ணீரால் சூழப்பட்டன.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமானவர்களை தேடி வருகிறோம் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த செப்டம்பர் மாதம் மசிசி மாகாணத்தின் பிஹாம்ப்வே கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
நரினோ மாகாணத்தில் உள்ள மலாமா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.
பொகோடா:
கொலம்பியாவின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அம்மாகாணத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நரினோ மாகாணத்தின் மலாமா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் தொடர் கனமழை காரணமாக நேற்று கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. மலையடிவாரத்தில் உள்ள வீடுகள் நிலச்சரிவில் சிக்கியதால், வீடுகளில் வசித்துவந்த பலர் மண்ணுக்குள் புதைந்தனர்.
இந்த நிலச்சரிவு குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கிய 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். ஆனாலும், இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன 20 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணிகளை மீட்புக்குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மியான்மர் நாட்டில் பச்சை மாணிக்கக் கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 50 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #50fearedkilled #Myanmarlandslide #Myanmarjademine #jademinelandslide
யாங்கூன்:
மியான்மர் நாட்டின் வடபகுதியில் உள்ள கச்சின் மாநிலத்தில் பச்சை மாணிக்கக் கற்களை வெட்டி எடுக்கும் சில சுரங்கங்கள் இயங்கி வருகின்றன.
அவற்றில் ஒரு சுரங்கத்தில் இன்று திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. சுமார் 55 தொழிலாளர்கள் சுரங்கத்தின் ஆழமான பகுதியில் இருந்தபோது ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. எனவே, இச்சம்பவத்தில் சுமார் 50 பேர் இறந்திருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #50fearedkilled #Myanmarlandslide #Myanmarjademine #jademinelandslide
இந்தோனேசியாவின் கலிமந்தன் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர் என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். #IndonesiaLandslide
ஜெகார்த்தா:
இந்தோனேசியாவில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில், இந்தோனேசியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கலிமந்தன் மாகாணத்தில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டது.
அந்த மாகாணத்தில் அமைந்துள்ள சுரங்கத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர்கள் சிக்கினர்.
இந்த நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர் என்றும், மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என பேரிடர் மேலாண்மை குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர். #IndonesiaLandslide
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியாகினர் என்றும், மேலும் 10 பேர் மாயமாகினர் என்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். #Chinalandslide
பெய்ஜிங்:
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் லின்பென் சிட்டி பகுதியில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்று காலை கட்டிட இடிபாடுகளில் இருந்து 7 பேரின் உடல்கள் மீட்கபட்டன. மேலும், 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இதையடுத்து, நிலச்சரிவில் மொத்தம் 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 30க்கும் மேற்பட்ட கடைகள் புதைந்தன. #JKLandslide
பாதர்வா:
ஜம்மு காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில் உள்ள பாத்ரி சந்தைப்பகுதியில் இன்று அதிகாலை 4.15 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் பெரும் சத்தம் கேட்டு விழித்தனர். நிலநடுக்கம் என எண்ணி வீட்டின் வெளியே வந்து பார்த்தபோது நிலச்சரிவு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த மீட்புப் பணியில் பல போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் இதுவரை உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என பாதர்வா எஸ்பி ராஜ் சிங் கவுரியா தெரிவித்துள்ளார். மேலும் 14 கட்டிடங்கள் உட்பட 30 கடைகள் நிலச்சரிவில் புதைந்துள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து தற்போது மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #JKLandslide

இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தங்க சுரங்கத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலியானார்கள். #Indonesia #MineCollapse
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் சுலாவேசி மாகாணம் போலாங் மோங்கோண்டவ் நகரில் தங்க சுரங்கம் செயல்பட்டு வந்தது. முறையான உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இந்த சுரங்கத்தில், நேற்று முன்தினம் மாலை தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுரங்கத்தில் இருந்த தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இது குறித்த தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
எனினும் 3 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. 13 பேரை பத்திரமாக மீட்டனர். சுமார் 60 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக தெரிகிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. எனினும் அவர்களை மீட்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 2 என்ஜினீயர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு:
காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் நகரம் அருகே உள்ள இக்காலா-பந்தர்கோட் பகுதியில் நீர்மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் தனியார் கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்தநிலையில், நேற்று அப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 2 என்ஜினீயர்கள் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்ததிலும் 26 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PakistanHeavyRain
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பல்வேறு நகரங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. கொட்டித் தீர்த்த பெருமழையால் இங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது.
வெள்ள நீரில் மூழ்கியும், வீட்டின் மேற்கூரைகள் சரிந்தும், நிலச்சரிவில் சிக்கியும் இங்குள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலியாகினர். திர் பகுதியில் நிலச்சரிவு மற்றும் மழையால் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒரு பெண் மற்றும் குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
இதேபோல், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லாஸ்பெல்லா மற்றும் பரூகாபாத், கதுவா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வெள்ளத்தில் சிக்கி 10க்கு மேற்பட்டோர் பலியாகினர்.
பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படிருந்த உணவு தானியங்களும், பழத்தோட்டங்களும் நாசமடைந்தன. நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதமடைந்தன.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #PakistanHeavyRain
இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #IndonesiaFloods
ஜகார்த்தா:
இந்தோனேசியா மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதியாகும். இதன் தெற்கு சுலவேசி மாகாணத்தில் நேற்று காலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் தென் சுலவேசியில் வீடுகள், பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த துயரச் சம்பவத்தில் சிக்கி 6 பேர் பலியானதாகவும், 10 பேர் காணாமல் போனதாகவும் முதல் கட்ட தகவல் வெளியானது. இதற்கிடையே, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக நேற்று அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ஒரே நாளில் 34 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 24 பேரை தேடி வருகின்றனர். சுமார் 3 ஆயிரத்து 400 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர். #IndonesiaFloods
இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #IndonesiaFloods
ஜகார்த்தா:
இந்தோனேசியா மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதியாகும். இதன் தெற்கு சுலவேசி மாகாணத்தில் நேற்று காலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் தென் சுலவேசியில் வீடுகள், பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த துயரச் சம்பவத்தில் சிக்கி 6 பேர் பலியானதாகவும், 10 பேர் காணாமல் போனதாகவும் முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2 குழந்தைகளும் அடங்குவார்கள்.
மேலும், காணாமல் போன 24 பேரை தேடி வருகின்றனர். சுமார் 3 ஆயிரத்து 321 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 46 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. #IndonesiaFloods
இந்தோனேசியாவின் சுலவேசிய மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் காணாமல் போயுள்ளனர். #IndonesiaLandslide
ஜகார்த்தா:
இந்தோனேசியா மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதியாகும். இதன் தெற்கு சுலவேசி மாகாணத்தில் இன்று காலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் தென் சுலவேசியில் வீடுகள், பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த துயரச் சம்பவத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவினால் கோவாஸ் மாவட்டம் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் அனைவரும் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள். சிலர் நிலச்சரிவால் புதைந்தும், சிலர் மின்சாரம் தாக்கியும் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றி முகாம்களுக்கு அழைத்து செல்லும் பணி நடைபெறுகிறது. நிலச்சரிவினால் இப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. #IndonesiaLandslide

×

X