search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோதிகா"

    எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு `ராட்சசி' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Raatsasi #Jyothika #SRaj
    `காற்றின் மொழி' படத்துக்குப் பிறகு ஜோதிகாவைத் தேடி நிறைய கதைகள் வருகிறது. முக்கியமாக பெண்ணியம் சார்ந்த கதைகள் தான் அதிகமாக வருவதாக கூறப்படுகிறது. மக்கள் எளிதில் தங்களை இணைத்துக்கொள்ளும் கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்.

    அந்த வகையில், அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். ஜோதிகா ஆசிரியை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு `ராட்சசி' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ஜோதிகாவுக்கு ஆக்‌‌ஷன் காட்சிகள் கூட இருக்கிறது.



    இதில் முக்கிய வேடத்தில் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி ஆகியோர் நடிக்கிறார்கள். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இந்த படத்தை தயாரிக்கிறார். 

    தற்போது கல்யாண் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் ஜோதிகா, அடுத்ததாக ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. #Raatsasi #Jyothika #SRaj

    கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற `காக்க காக்க' படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்குவதாற்கான பணிகள் துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது. #KaakhaKaakha2 #Suriya #Jyotika
    வெற்றிப் படங்களின் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பதே தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்டாக உள்ளது. அந்த வகையில், வேலையில்லா பட்டதாரி 2, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, விஸ்வரூபம் 2, மாரி 2, சார்லி சாப்ளின் 2 என சமீபத்தில் வெளியான பெரும்பாலான படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லை.

    இந்த நிலையில், கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா - ஜோதிகா நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `காக்க காக்க' படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காக்க காக்க படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு, இரண்டாவது பாகம் குறித்து கவுதம் மேனனனிடம் பேசியிருப்பதாகவும், அதற்கான பணிகள் விரைவில் துவங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.



    இதிலும் சூர்யா - ஜோதிகாவை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாகவும், ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பதாகவும், அடுத்த வருடம் படப்பிடிப்பு துவங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    கவுதம் மேனன் தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம், ஜெயலலிதா வாழ்க்கை பற்றிய இணையதொடரில் பிசியாக இருக்கிறார். இவற்றை முடித்த பிறகே `காக்க காக்க 2' தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #KaakhaKaakha2 #Suriya #Jyotika #GauthamMenon

    சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. #JyothikasNext #Jyothika #Suriya
    ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘காற்றின் மொழி’. ராதா மோகன் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், அடுத்த படத்தின் பூஜையை இன்று போட்டிருக்கிறார் ஜோதிகா.

    பிரபுதேவாவை வைத்து குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண், தற்போது ஜோதிகா படத்தை இயக்க இருக்கிறார். சூர்யா தயாரிக்கும் இப்படத்தில் ஜோதிகாவுடன் ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.



    இப்படத்தின் பூஜையுடன் இன்று படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. #JyothikasNext #Jyothika #Suriya

    சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்தி வரும் ஜோதிகா அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தில் குரு சிஷ்யன்களான பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன் நடிக்கிறார்கள். #Jyothika #Bharathiraja #Bhagyaraj #Parthiban
    காற்றின் மொழி படத்துக்கு பிறகு ஜோதிகா தற்போது ராஜ் என்ற புதுமுக இயக்குனர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பள்ளி ஆசிரியையாக நடித்து வரும் அவருக்கு சண்டைக் காட்சிகளும் இருக்கின்றன. 

    இந்நிலையில் ஜோதிகா அடுத்து நடிக்கும் படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையாக உருவாக உள்ள இந்த படத்தில் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன் மூவரும் நடிக்கிறார்கள். பாரதிராஜாவிடம் பாக்யராஜும், பாக்யராஜிடம் பார்த்திபனும் உதவி இயக்குனராக இருந்தவர்கள். முதன்முறையாக மூவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை சூர்யாவே தயாரிக்க இருக்கிறார். #Jyothika #Bharathiraja #Bhagyaraj #Parthiban

    சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் சூர்யாவின் மகன் நடிக்கவிருப்பதாக வெளியான தகவலுக்கு சூர்யா தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. #Suriya #Dev
    சூர்யா ஜோதிகா தம்பதிக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். இருவருமே பொது நிகழ்ச்சிகளில் சூர்யா ஜோதிகா உடன் கலந்து கொள்வார்கள். ஆனால், படத்தில் நடித்ததில்லை.

    சமீபத்தில், சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் சூர்யாவின் மகன் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

    இந்த செய்தி வெளியான சமயத்தில் 2டி நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்திலும், “தங்களுடைய படத்தில் நடிக்க 6-8 வயது நிரம்பிய சிறு குழந்தைகள் தேவை” என்று விளம்பரப்படுத்தி இருந்தார்கள். இப்பதிவை வைத்து, இதில் தான் சூர்யாவின் மகன் தேவ் நடிக்கவுள்ளார் என்று செய்திகளை வெளியிட்டனர்.


    சூர்யாவின் ரசிகர்களும் இதைக் கொண்டாட தொடங்கியதைத் தொடர்ந்து, 2டி நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரும், சூர்யாவின் நெருங்கிய நண்பருமான ராஜசேகர் பாண்டியன் “தவறான செய்தி. வதந்திகளைப் பரப்பாதீர்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #Suriya #Dev

    எஸ்.ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் ஜோதிகாவுக்கு ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதாக கூறுகிறார்கள். #Jyothika #SRaj
    காற்றின் மொழி படத்துக்குப் பிறகு ஜோதிகாவைத் தேடி நிறைய கதைகள் வருகிறது. முக்கியமாக பெண்ணியம் சார்ந்த கதைகள் தான் அதிகமாக வருகிறது என்கிறார்.

    மக்கள் எளிதில் தங்களை இணைத்துக்கொள்ளும் கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார். அப்படி அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் சொல்லிய ராட்சசி கதை பிடித்துப் போகவே உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டு படத்தை தொடங்கிவிட்டார்.



    இந்தப் படத்தை டிரீம் வாரியர்ஸ் தயாரிக்கிறது. இதில் முக்கிய வேடத்தில் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் ஜோதிகாவுக்கு ஆக்‌‌ஷன் காட்சிகள் கூட இருக்கிறது என்கிறார்கள். #Jyothika #SRaj

    கஜா புயல் பாதிப்பால் டெல்டா மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் சிவகுமார், சூர்யா உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone
    தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை சூறையாடிய கஜா புயலின் தாக்கம் இன்னமும் நீங்கவில்லை. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் கஜா புயலின் கோர தாண்டவத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. வீடு, தொழில்களை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி, பேராவூரணி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் உள்பட பல ஊர்கள் கடுமையான சேதத்தை சந்தித்திருப்பதால், மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

    கஜா புயலால் வீடுகள், பயிர்கள், மரங்கள், கால்நடைகள், மின்சார கம்பங்கள் என அனைத்து தரப்பிலும் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 150 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல்வேறு கிராமங்களில் மக்கள் உணவு, குடிநீரின்றி தவித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    இவ்வாறாக கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பலரும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக உதவி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் தொண்டு நிறுவனத்தின் மூலம் ரூ.50 லட்சம் நிதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCycloneRelief #GajaCyclone  #LetsAllJoinHands #prayfordelta #Suriya #Sivakumar

    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் `காற்றின் மொழி' படத்தின் விமர்சனம். #KaatrinMozhiReview #Jyothika #Vidharth
    நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த விதார்த் - ஜோதிகா வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். விதார்த் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். குறைவான சம்பளம் என்றாலும் மனநிம்மதியுடன் குடும்பத்தை நடத்தி வருகிறார்கள்.

    ஜோதிகாவுக்கு இரு அக்காள்கள், 12-ஆம் வகுப்பில் தோல்வியடைந்ததால், ஜோதிகாவை இருவரும் மட்டம் தட்டி வருகிறார்கள். இதற்கிடையே தனது திறமையை நிரூபிக்க ஏதாவது மேடை கிடைக்காதா என்று எதிர்பார்த்து வருகிறார் ஜோதிகா. இந்த நிலையில் ஹலோ எப்.எம். நடத்தும் நிகழ்ச்சியில் பரிசு வெல்லும் ஜோதிகா, எப்.எம்.-ல் ஆர்.ஜே.,வாகும் முயற்சியில் இறங்குகிறார். குரல் தேர்வு முடிந்து எப்.எம்.-ல் வேலைக்கும் சேர்கிறார். ஜோதிகாவுக்கு இரவு நேர நிகழ்ச்சிகள் ஒதுக்கப்படுகிறது. இதனால் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியவில்லை.



    மனைவியுடன் நேரத்தை செலவிட முடியவில்லை என்று விதார்த் வருத்தப்படுகிறார். இதனால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்படுகிறது. இது இவர்களது குடும்பத்தில் என்னென்ன பிரச்சனைகளை உருவாக்குகிறது? எப்.எம்-க்கும் போன் செய்யும் பலரது பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் ஜோதிகா, தனது குடும்ப பிரச்சனையை எப்படி சமாளித்தார்? ஆர்.ஜே. வேலையில் தொடர்ந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை ஜோதிகா தனது அழகான நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டிப் போடுகிறார். தனது தனித்துவமான முகபாவனை, பேச்சின் மூலம் படத்தின் காட்சிகளை நகர்த்துகிறார்.



    ஜோதிகாவுடன் வரும் காட்சிகளில் விதார்த் போட்டிபோட்டு நடித்திருக்கிறார். காட்சிக்கு ஏற்ப மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு சில காட்சிகளில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார். 

    லக்‌ஷ்மி மஞ்சு, மனோபாலா, இளங்கோ குமரவேல் என அனைத்து கதாபாத்திரங்களும் படத்தோடு ஒன்றி நடித்திருக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் அதை சிறப்பாக நடித்திருக்கிறார். சிம்பு, யோகி பாபு சிறப்பு தோற்றத்தில் வருகின்றனர்.



    சாதாரண திரைக்கதையில் சென்டிமெண்ட் காட்சிகளை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ராதா மோகன். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் வேலைக்கு செல்வதும், அதனால் அவரது குடும்பத்தில் ஏற்படும் மனஸ்தாபங்களையும் அன்பு, காதல், காமெடி என அனைத்து கலந்த கலவையான தனது பாணியில் கொடுத்திருக்கிறார். சின்ன சின்ன கதாபாத்திரங்களையும் சிறப்பாக செதுக்கி ரசிக்க வைத்திருக்கிறார். படத்தில் கதையின் போக்குக்கு ஏற்ப விதார்த்தை காட்டிய இயக்குநர், தொடக்கம் முதல் இறுதிவரை ஜோதிகாவை ஒரே மாதிரியாக காட்டியிருக்கிறார். ஜோதிகாவின் உடை, அலங்காரத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படம் முழுக்க வசதியான வீட்டுப் பெண்ணாகவே வலம் வருகிறார்.

    ஏ.எச்.காஷிப் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமையாக வந்திருக்கின்றன.

    மொத்தத்தில் `காற்றின் மொழி' இனிமை. #KaatrinMozhiReview #Jyothika #Vidharth

    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் காற்றின் மொழி படத்தில் நடித்துள்ள ஜோதிகா மற்றும் படக்குழுவுக்கு நடிகை வித்யா பாலன் வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். #KaatrinMozhi #Jyothika #VidyaBalan
    ஜோதிகா நடிப்பில் நாளை ரிலீசாகி இருக்கும் படம் ‘காற்றின் மொழி’. ராதாமோகன் இயக்கி உள்ள இந்தப் படத்தில், விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சிம்பு, யோகி பாபு நடித்துள்ளனர்.

    இந்தியில் வெளியான ‘தும்ஹரி சூளு’ படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் வெளியாகி இருக்கிறது. வித்யா பாலன் நடித்த வேடத்தில் ஜோதிகா நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் உறவினரான ஏ.எச்.ஹாசிஃப் இந்தப் படத்துக்கு இசையமைக்க, தனஞ்ஜெயன் தயாரித்துள்ளார். இந்த நிலையில், படத்தையும், படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வித்யா பாலன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


    அந்த வீடியோவில் வித்யா பாலன் கூறியதாவது, “எனக்கு ரொம்பவே சந்தோ‌ஷமாக இருக்கிறது, பெருமையாகவும் இருக்கிறது. இந்தியில் ‘தும்ஹரி சூளு’ படத்தில் நான் பண்ண ரோல், தமிழில் ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பண்ணியிருக்காங்க. ஜோதிகா, ராதாமோகன், தனஞ்ஜெயன் மற்றும் படத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆல் த பெஸ்ட். நான் இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நீங்களும் அதேபோல் காத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். #KaatrinMozhi #Jyothika #VidyaBalan

    காற்றின் மொழி படத்தை அடுத்து ஜோதிகா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. #Jyotika
    ஜோதிகா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காற்றின் மொழி’. ராதா மோகன் இயக்கியுள்ள இப்படம் வரும் வாரம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், அடுத்த படத்தின் பூஜையை இன்று போட்டிருக்கிறார் ஜோதிகா.

    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் 21-வது படத்தில் ஜோதிகா நடிக்க இருக்கிறார். இதற்கான பூஜை இன்று நடத்தப்பட்டது. இந்த வார இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்குகிறார்.

    இதில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளனர். ஸீன் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்திற்கு கோகுல் பென்னி ஒளிப்பதிவு செய்கிறார். 

    இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இவர்கள், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'நந்த கோபால குமாரன்' என்னும் ‘NGK ’ படத்தை தயாரித்து வருகிறார்கள்.
    ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் `காற்றின் மொழி' படத்தின் முன்னோட்டம். #KaatrinMozhi #Jyothika
    பாப்டா மீடியா இந்தியா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், எஸ்.விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள படம் காற்றின் மொழி.

    ஜோதிகா ஆர்.ஜே.வாக நடித்திருக்கும் இந்த படத்தில் விதார்த், லக்ஷ்மி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமரவேல், மோகன்ராமன், உமா, பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நடிகர் சிம்பு, யோகி பாபு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

    இசை - ஏ.எச்.காஷிப், படத்தொகுப்பு - பிரவின்.கே.எல்., ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி, கலை இயக்குனர் - கதிர், சண்டைப்பயிற்சி - நடனம் - விஜி சதிஷ், உடை வடிவமைப்பாளர் - பூர்ணிமா ராமசாமி, பாடலாசிரியர் - மதன் கார்க்கி, தயாரிப்பு - தனஞ்ஜெயன், தயாரிப்பு நிறுவனம் - பாப்டா மீடியா, கதை - சுரேஷ் திரிவேனி, வசனம் - பொன் பார்த்திபன், இயக்கம் - ராதாமோகன்.



    படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஜோதிகா பேசியதாவது,

    ரீமேக் படத்தில் நடிப்பது எப்போதும் சவாலாகத் தான் இருக்கும். ஆனால் அந்த படத்தை பார்த்ததே கிடையாது. கதையோடு சேர்ந்து பயணித்து நடித்தேன். ஆனால் இப்படம் ஒரிஜினல் படத்தை போல இருக்காது. ‘காற்றின் மொழி’ படம் கதாநாயகியை சுற்றிவரும் கதை. வேலைக்கு போகும் பெண்ணை பற்றிய கதை. பெண்மையை உயர்த்தி பிடிக்கிற இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன்.

    இந்த கதையில் பிடித்த அம்சமே ஒரு கணவன்-மனைவி இடையேயான உறவு தான். இப்படத்தில் கணவன், மனைவி உறவு அருமையாக அமைந்திருக்கிறது. இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஒருசில நடிகர்களுடன் தான் எந்த இடையூறும் இன்றி சவுகரியமாக நடிக்க முடியும். சூர்யா, அஜித் மற்றும் மாதவன் இவர்களுடன் நான் அதை உணர்ந்திருக்கிறேன். இவர்களுக்கு பிறகு விதார்த்துடன் நடித்தது சுலபமாக இருந்தது. என்றார். 

    படம் வருகிற நவம்பர் 16-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #KaatrinMozhi #Jyothika

    `காற்றின் மொழி' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சூர்யா, அஜித், மாதவனுடன் நடிக்கும் போது சவுகரியமாக இருக்க முடியும் என்று நடிகை ஜோதிகா கூறினார். #KaatrinMozhi #Jyothika
    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த்த நடிப்பில் உருவாகி இருக்கும் `காற்றின் மொழி' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஜோதிகா பேசியதாவது,

    ரீமேக் படத்தில் நடிப்பது எப்போதும் சவாலாகத் தான் இருக்கும். ஆனால் அந்த படத்தை பார்த்ததே கிடையாது. கதையோடு சேர்ந்து பயணித்து நடித்தேன். ஆனால் இப்படம் ஒரிஜினல் படத்தை போல இருக்காது. ‘காற்றின் மொழி’ படம் கதாநாயகியை சுற்றிவரும் கதை. வேலைக்கு போகும் பெண்ணை பற்றிய கதை. பெண்மையை உயர்த்தி பிடிக்கிற இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன்.

    இந்த கதையில் பிடித்த அம்சமே ஒரு கணவன்-மனைவி இடையேயான உறவு தான். என்னை பார்க்கிறவர்களெல்லாம் ‘குஷி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். நிச்சயமாக நடிப்பேன்.

    ‘மொழி’ படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிறது. 10 வருட இடைவெளிக்குப் பிறகு ராதாமோகனுடன் சேர்ந்து பணியாற்றுவதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அதே நேர்மறையான உணர்வு. அந்தப் படத்தில் நடித்த முதல் காட்சி போலவே இந்த படத்திலும் முதல் காட்சி நீளமாக அமைந்தது. முக்கியமான காட்சிகள் அனைத்தும் ஒரு மணி நேரத்திலேயே முடிந்தது.



    இப்படத்தில் கணவன், மனைவி உறவு அருமையாக அமைந்திருக்கிறது. இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

    ஒருசில நடிகர்களுடன் தான் எந்த இடையூறும் இன்றி சவுகரியமாக நடிக்க முடியும். சூர்யா, அஜித் மற்றும் மாதவன் இவர்களுடன் நான் அதை உணர்ந்திருக்கிறேன். இவர்களுக்கு பிறகு விதார்த்துடன் நடித்தது சுலபமாக இருந்தது.

    ‘காற்றின் மொழி’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது எனக்கு கிடைக்கும் என்று இங்கே பேசியவர்கள் கூறினார்கள். அத்தனை பேருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திருமணத்துக்கு பின் நான் நடித்து வெளிவந்த படங்களில் முக்கியமான படமாக ‘36 வயதினிலே’ இருந்தது. ‘காற்றின் மொழி’ அதையும் தாண்டும். இவ்வாறு ஜோதிகா கூறினார். #KaatrinMozhi #Jyothika

    ×