search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SLvsAFG"

    • குர்பாஸ் 70 ரன்களிலும் அஸ்மதுல்லா ஒமர்சாய் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.
    • இலங்கை அணி தரப்பில் மதீஷா பதிரனா, அகிலா தனஞ்செயா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹஸ்ரதுல்லா ஸஸாய் - ரஹ்மனுல்லா குர்பாஸ் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஸஸாய் 45 ரன்கள் எடுத்திருந்த போது அவுட் ஆனார்.

    அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் இப்ராஹிம் சத்ரன் 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் - அஸ்ரதுல்லா ஒமர்ஸாய் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் அரைசதம் அடித்து அசத்தினார். குர்பாஸ் 70 ரன்களிலும் அஸ்மதுல்லா ஒமர்சாய் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் மதீஷா பதிரனா, அகிலா தனஞ்செயா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

    • இரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    • இலங்கை- ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

    கொழும்பு:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. அதன்படி இந்த இரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. 3 ஒருநாள் போட்டிகளுமே பல்லேகலே மைதானத்தில் மட்டுமே நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    குசல் மென்டிஸ் (கேப்டன்), சரித் அசலன்கா (துணை கேப்டன்), பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்னண்டோ, சதீரா சமரவிக்ரம, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, தில்ஷான் மதுஷங்க, பிரமோத் மதுஷன், சஹான் ஆராச்சிகே, அகில தனஞ்சய, துனித் வெல்லலகே, சாமிக்க கருணாரத்னே மற்றும் ஷெவோன் டேனியல்.

    ×