என் மலர்
நீங்கள் தேடியது "smuggling alcohol"
- புதுவையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குடிசைத் தொழில் போல் போலி மதுபான தயாரிப்பு நடப்பதாக புகார் தெரிவித்துள்ளேன்.
- கலால் துறையில் அதிக போலீசாரை நியமிக்க வேண்டும்
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க செயலர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து புதுவைக்கு எரிசாராயம் கடத்தப்பட்டு, சிலரின் துணையோடு போலி மதுபானம் தயாரிக்க பட்டு தமிழகத்தில் டாஸ்மாக் பாட்டிலில் சரக்கு ஏற்றப்படுகிறது. இதனால் புதுவை, தமிழக அரசுக ளுக்கும் வருமானம் இல்லை.
இதில் தமிழக மற்றும் புதுவை அரசுகளின் கலால், போலீஸ் துறையினர் என்ன செய்கிறார்கள் என்று கேள்வி எழுகிறது.
தமிழக அரசு மட்டுமின்றி புதுவை அரசும் ஓர் காரணம். மது கடத்தல் தொடர்பாக புதுவை அரசிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. புதுவையில் இருந்து போலி மதுபானம் கடத்தலை தமிழக போலீஸ் பிடித்தாலும் புதுவை போலீஸ் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. புதுவையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குடிசைத் தொழில் போல் போலி மதுபான தயாரிப்பு நடப்பதாக புகார் தெரிவித்துள்ளேன்.
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் புதுவைக்கு எரிசாராயத்தை கொண்டு வரமுடியாது. 2 மாநில அதிகாரிகளும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. குற்ற வாளிகளை கலால்துறை பாதுகாக்கிறதா.? என்ற கேள்வி எழுகிறது.
இதில் சம்பந்தப் பட்டோரின் சொத்து பறிமுதல் செய்து நிவாரண நிதியில் செலுத்த வேண்டும். கலால் துறையில் அதிக போலீசாரை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.