search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SMV Independence day"

    • ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் நாடகம், தமிழர் களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் நடைபெற்றது.
    • போராட்டத்தில் கையாண்ட முறைகளை தமிழ, ஆங்கிலம், மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளிப்படுத்தினர்.

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் எஸ்.எம்.வி., பள்ளியில் 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைஞர் தனசேகரன் துணைத் தலைவர் சுகுமாறன் செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், பொறியியல் கல்லுாரியின் இயக்குனர் வெங்கடாஜலபதி முன்னிலை வகித்தனர் பள்ளி முதல்வர் அனிதா சாந்தகுமார் தேசியக்கொடி ஏற்றி வைத்து பேசினார்.

    தொடர்ந்து மாணவர்கள் பல்வேறு மாநில மக்களின் கலாசார நடனம், மனதை ஒருநிலைப்படுத் தும் யோகாசனம், ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் நாடகம், தமிழர் களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் நடைபெற்றது.

    விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்கள் பற்றியும், அவர்கள் போராட்டத்தில் கையாண்ட முறைகளை தமிழ், ஆங்கிலம், மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளிப்படுத்தினர்.

    நிகழ்ச்சியில், பள்ளியின் துணை முதல்வர் இமானு வேல் மரிஜோசப் செல்வம் மற்றும் பள்ளியின் நிர்வாக அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×