என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Snacks"

    • சூடான டீயுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    சமோசா - 3

    அப்பளம் - 4

    தயிர் - 3 மேஜைக்கரண்டி

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    புதினா சட்னி - 2 தேக்கரண்டி

    புளி சட்னி - 2 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

    சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி

    ஓமப் பொடி - 1 கப்

    உப்பு - சுவைக்கு ஏற்ப

    செய்முறை

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சூடான சமோசாவை சிறு சிறு துண்டுகளாக உடைத்து போட்டு கொள்ளவும்.

    அப்பளத்தையும் நொறுக்கி போட்டு கொள்ளவும்.

    தயிரை கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.

    துண்டுகளாக உடைத்த சமோசாவை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் நன்றாக கலந்த தயிரை ஊற்றவும்.

    அதன் மேல் அரைத்து வைத்த சட்னிகளை சேர்க்கவும்.

    மசாலாவை விட இனிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதில் புளி சட்னியை அதிகம் சேர்க்கவும்.

    அடுத்து அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து அலங்கரிக்கவும்.

    கடைசியாக அதன் மேல் ஓமப் பொடியை தூவி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சமோசா சாட் ரெடி.

    • இந்த ரெசிபி வெளியே மொறு மொறு என்றும், உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.
    • சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்:

    பன்னீர் - 200 கிராம்

    மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

    காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    மிளகு தூள் - ½ தேக்கரண்டி

    சோள மாவு - 5 தேக்கரண்டி

    ரொட்டித் தூள் அல்லது நுணுக்கிய பொறை - 100 கிராம்

    பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    தண்ணீர் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    பன்னீரை சிறிய சதுர வடிவ துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பன்னீர் துண்டுகள், மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி தழை, சிறிது மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறி 20 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் மீதமிருக்கும் மிளகு தூள், சோள மாவு, உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டியில்லாமல் தோசை மாவு பதத்தில் கலக்கிக்கொள்ளவும்.

    பின்னர் மசாலா கலந்திருக்கும் பன்னீர் துண்டுகளை, சோளமாவு கலவையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது நுணுக்கிய பொறையில் புரட்டி எடுத்து, மீண்டும் சோளமாவு கலவையில் தோய்த்து, எண்ணெய்யில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

    இப்போது சுவையான மொறு மொறு பன்னீர் பாப்கார்ன் தயார்.

    இதை தக்காளி சாசுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

    • சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
    • அரிசியை விட 8 மடங்கு அதிக இரும்புச்சத்து கம்பில் உள்ளது.

    தேவையான பொருட்கள்

    கம்பு - 1 கப்

    உளுந்தம் பருப்பு - 1 குழிக்கரண்டி

    வெந்தயம் - 2 ஸ்பூன்

    கருப்பட்டி - 300 கிராம்

    ஏலக்காய் - 2

    எண்ணெய் - சிறிதளவு

     செய்முறை

    கம்பு, உளுந்து, வெந்தயத்தை நான்கு மணிநேரம் ஊற வைக்கவும்.

    கருப்பட்டியை சிறு சிறு துண்டுகளாக நொறுக்கிக் கொள்ளவும்.

    ஏலக்காயை ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும்.

    ஊறிய கம்பை மிக்சியில் போட்டு அதனுடன் கருப்பட்டியை சேர்த்து அரைக்கவும்.

    அடுத்து நசுக்கிய ஏலக்காயைச் சேர்த்து இட்லிப் பதத்தில் அரைத்து கொள்ளவும்.

    இந்த மாவை ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து கல் சூடு ஏறியதும் குழிகளில் சிறிது எண்ணெய் தடவவும்.

    • இந்த ஸ்வீட் செய்ய வீட்டில் இருக்கும் பொருட்களே போதுமானது.
    • இந்த ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    முட்டை - 3,

    பால் - 1 கப் ,

    சர்க்கரை - 5 ஸ்பூன் ,

    ஏலக்காய்பொடி - சிறிதளவு,

    பாதாம், பிஸ்தா - 10 கிராம்

    செய்முறை

    பிஸ்தா, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சர்க்கரையை பொடி செய்து கொள்ளவும்.

    பாலை நன்றாக காய்ச்சி ஆற வைத்து கொள்ளவும்.

    முட்டையை நன்கு கலங்கி கொள்ளவும்.

    ஆறவைத்த பாலை முட்டையில் ஊற்றி நன்றாக கலக்கிக்கொள்ளவும்.

    அதன்பின் அதில் பொடி செய்ய சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

    அடுத்து அதில் சிறிது ஏலக்காய் பொடியை சேர்த்து அதனை வேறு ஒரு கிண்ணத்தில் மாற்றி இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி அதன்மேல் ஸ்டாண்ட் போல வைத்து அதன்மேல் கிண்ணத்தை வைக்கவும்.

    அதனை மூடி 15 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஆவியில் வேக வைக்கவும்.

    அடுத்து சூடு ஆறியதும் இறக்கி அதில் பிஸ்தா, பாதாமை தூவி 1 மணிநேரம் பிரிட்ஜில் வைத்து பிறகு சாப்பிடவும்.

    இப்போது சூப்பரான மில்க் புட்டிங் ரெடி.

    குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    • தேங்காய்ப்பால் போஹா கோவாவின் ஸ்பெஷல் ஐட்டம்.
    • பத்தே நிமிடங்களில் இந்த போஹாவை செய்து விடலாம்.

    தேவையான பொருட்கள்

    அவல் - 200 கிராம்

    தேங்காய்ப்பால் - 1 கப்

    சர்க்கரை - தேவையான அளவு

    ஏலக்காய் - 3

    செய்முறை

    ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.

    அவலை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

    மிருதுவாக வந்தவுடன் அரை கப் சூடு தண்ணீர் சேர்க்க வேண்டும்.

    அத்துடன் அவல் சேர்த்து கொதிக்க விடவும்.

    பின்னர் தேங்காய்ப்பால் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    அத்துடன் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

    பொடித்த ஏலக்காய்த்தூளை சேர்த்து கிளறிவிடவும்.

    சுவையான தேங்காய்ப்பால் போஹா ரெடி. சுடச்சுட பரிமாறவும்.

    • மாலையில் டீ, காபியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
    • இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    உளுத்தம் பருப்பு - 1 கப்

    கறிவேப்பிலை - சிறிது

    பச்சை மிளகாய் - 3

    மிளகு - 1 டீஸ்பூன்

    தேங்காய் - விருப்பத்திற்கேற்ப

    அரிசி மாவு - 2 டீஸ்பூன்

    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    செய்முறை

    ப.மிளகாய், கறிவேப்பிலை, தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உளுத்தம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்து நன்றாக கழுவி, மிக்ஸியில் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாகவும், ஓரளவு கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு அதில் அரிசி மாவு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, மிளகு, தேங்காய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் நெருப்பை மிதமாக வைத்து, பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக எடுத்து போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    இதேப்போன்று அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், சுவையான மைசூர் போண்டா ரெடி!!!

    • பாகற்காய் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    • பாகற்காயில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    பாகற்காய் - 200 கிராம்,

    கடலை மாவு - 100 கிராம்,

    அரிசி மாவு - 20 கிராம்,

    ஓமம் - கால் டீஸ்பூன்,

    ஆரஞ்சு ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை,

    மோர் - சிறிதளவு,

    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு,

    மிளகாய்த்தூள், உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    பாகற்காயை விதை நீக்கி வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

    நீரை சூடாக்கி பாகற்காயை போட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டவும்.

    பிறகு பாகற்காயை மோரில் போட்டு 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். அப்போது தான் கசப்பு இருக்காது.

    அடுத்து பாகற்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கடலை மாவு, அரிசிமாவு, உப்பு, மிளகாய்த்தூள், ஓமம் மற்றும் ஃபுட் கலர் சேர்த்து, நீர் தெளித்து நன்கு பிசிறவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இந்தக் கலவையை சூடான எண்ணெயில் கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான பாகற்காய் பக்கோடா ரெடி.

    • சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
    • காபி, டீயுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    பெரிய வெங்காயம் - கால் கிலோ,

    கடலை மாவு - 150 கிராம்,

    அரிசி மாவு - 25 கிராம்,

    கறிவேப்பிலை - 2 ஆர்க்கு,

    இஞ்சி - ஒரு துண்டு,

    பச்சை மிளகாய் - 5

    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு,

    எண்ணெய் - 300 கிராம்.

    செய்முறை:

    பெரிய வெங்காயம், இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவை போட்டு நன்றாக கலந்த பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதில் சூடான எண்ணெய் 2 டீஸ்பூன், சிறிது தண்ணீர் தெளித்து பக்கோடா மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சூடான எண்ணெயில் உதிர்த்து போட்டு சிவக்க பொரிக்கவும். விருப்பப்பட்டால்... 4, 5 பூண்டுப் பற்களை நசுக்கி சேர்க்கலாம்.

    இப்போது சூப்பரான தூள் பக்கோடா ரெடி.

    • இந்த சமோசா செய்வது மிகவும் சுலபம்.
    • குழந்தைகள் இந்த சமோசாவை விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்

    மைதா - 1 கப்

    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    வெங்காயம் - 3 கப்

    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

    சீரகம் - 1 தேக்கரண்டி

    பச்சை மிளகாய் - 2

    கொத்தமல்லி தழை- 1/2 கப்

    எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் உப்பு, 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து தண்ணீர் விட்டு சாப்பாத்தி மாவு போல் பிசைந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    சிறிதளவு மைதாவை தண்ணீர் சேர்த்து பசை போல் கரைத்து வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வெங்காயம், மிளகாய் தூள், சீரக பொடி, பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து பிசரி கொள்ளவும்.

    பிசைந்து வைத்த மாவை சாப்பாதி போல் மெல்லியதாக திரட்டி அதை முக்கோணமாக மடித்து கொண்டு செய்து வைத்திருந்த வெங்காய கலவையை நிரப்பி ஓரங்களில் மைதா பசையை தடவி மூடிவிடவும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சுவையான வெங்காய சமோசா ரெடி.

    • குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் இது.
    • இதை செய்வது மிகவும் சுலபம்.

    தேவையான பொருட்கள்:

    பச்சை பட்டாணி - 3/4 கப்

    அரிசி மாவு - 1/2 கப்

    கடலை மாவு - 1/2 கப்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 2

    பன்னீர் - 1/4 கப்

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பௌலில் மசித்த பச்சை பட்டாணியை போட்டு, அத்துடன் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பன்னீர், உப்பு, மற்றும் தண்ணீர் ஊற்றி, சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

    பின் அந்த கலவையை கட்லெட் போல், தட்டையாகவும் சற்று தடிமனாகவும் தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் ஓரளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள கட்லெட்டை, முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.

    இதேப் போல் அனைத்து மாவையும் வேக வைத்து எடுத்தால், பச்சை பட்டாணி பன்னீர் கட்லெட் ரெடி!!!

    இதனை தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    • இந்த ரெசிபியை 10 நிமிடத்தில் செய்யலாம்.
    • திடீரென விருந்தினர் வந்தால் இந்த ரெசிபி செய்து அசத்தலாம்.

    தேவையான பொருட்கள் :

    உளுந்து அப்பளம் அல்லது மிளகு அப்பளம் - 4,

    கடலை மாவு - 100 கிராம்,

    அரிசி மாவு - 20 கிராம்,

    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,

    சமையல் சோடா- ஒரு சிட்டிகை,

    பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு,

    எண்ணெய் - 300 கிராம்.

    செய்முறை:

    ஒவ்வொரு அப்பளத்தையும் நான்காக கட் செய்துகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், சமையல் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.

    இதில் ஒரு டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய் விட்டுக் கலந்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அப்பளத் துண்டுகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான அப்பள பஜ்ஜி ரெடி.

    குறிப்பு: அப்பளத்தில் உப்பு இருக்கும் என்பதால், கவனமாக சற்று குறைவான உப்பை மாவில் சேர்க்கவும்.

    • இன்று அனுமனுக்கு படைக்க நைவேத்தியத்தை செய்யலாம்.
    • இந்த வடை செய்வது மிகவும் சுலபம்.

    தேவையான பொருட்கள்

    முழு கருப்பு உளுந்து - 1 கப்

    மிளகு - 2 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)

    செய்முறை

    முழு உளுந்தை நன்றாக கழுவி ஐந்து மணி நேரம் ஊற வைத்து , தோலுடன் சிறிது கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    மிளகு, சீரகத்தை வெறும் கடாயில் வறுத்து, மிக்சியில் கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும்.

    அரைத்த மாவுடன் மிளகு, சீரகப்பொடி, உப்பு சேர்த்துப் பிசைந்துகொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், அடுப்பை மிதமான தீயில் வைத்து மாவை மெல்லிய வடைகளாக, வாழை இலையில் தட்டிப் போட்டு போடவும்.

    நன்றாக வெந்து பொன்னிறமாக முறுவலாக வந்ததும் எடுக்கவும்.

    இப்போது சுவையான ஆஞ்சநேயர் கோவில் மிளகு வடை ரெடி.

    ×