என் மலர்
நீங்கள் தேடியது "sneha"
- மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது.
- ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட டிரெய்லர் வீடியோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் வெளியிட்டார்.
பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் சேரன். இவர் கடந்த 2004-ம் ஆண்டு சொந்தமாகத் தயாரித்து, இயக்கி, நடித்தத் திரைப்படம் 'ஆட்டோகிராப்'.
இதில் சினேகா, கோபிகா, கனிகா, மல்லிகா ஆகியோர் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது. பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலுக்காக பாடகி சித்ரா, பாடலாசிரியர் பா.விஜய் தேசிய விருது பெற்றனர்.
பள்ளிப் பருவம், கல்லூரி பருவம், வேலை தேடும் பருவம் என ஒரு சராசரி தமிழ் இளைஞனின் வாழ்க்கையை தத்ரூபமாக சித்தரித்த இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
இந்த நிலையில், படம் வெளியாகி 21 ஆண்டுகளுக்குப் பிறகு 'ஆட்டோகிராப்' படம் மே 16ம் தேதி ரீ-ரிலீஸாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
படம் ரீ-ரிலீஸாவதை ஒட்டி புதிய ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட டிரெய்லர் வீடியோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
- எளிமையாக பக்தர்களுடன் கிரிவலம் மேற்கொண்டு தேங்காய் உடைத்து வழிபாடு செய்தார்.
- கிரிவலப்பாதையில் நடிகை சினேகாவைக் கண்ட ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
தமிழ் சினிமாவில் பல நட்சத்திர தம்பதிகள் ரசிகர்களால் கொண்டாடப்படுவார்கள். அந்த வகையில் புன்னகை அரசி என்று அழைக்கப்படும் சினேகா சுசி கணேசன் இயக்கிய விரும்புகிறேன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் வெற்றி பெறாவிட்டாலும் சினேகாவின் நடிப்பும், அழகும் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது.
தொடர்ந்து விஜய், சூர்யா, விக்ரம், கமல்ஹாசன், சிம்பு, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயாகியாக வலம் வந்தார். இதனை தொடர்ந்து இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சினேகா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தை ஒட்டி, நேற்றிரவு தனது கணவருடன் கிரிவலம் மேற்கொண்டார். எளிமையாக பக்தர்களுடன் கிரிவலம் மேற்கொண்டு தேங்காய் உடைத்து வழிபாடு செய்தார்.
கிரிவலப்பாதையில் நடிகை சினேகாவைக் கண்ட ரசிகர்கள் இவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஜய்க்கு ஜோடியாக நடிக்க முதலில் ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது.
- விஜய் ஜோடியாக 2003-ம் ஆண்டு வசீகரா என்ற படத்தில் சினேகா நடித்துள்ளார்.
'லியோ' படத்திற்கு அடுத்ததாக விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
இதில் விஜய் தந்தை, மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் ேதாற்றம் ஹாலிவுட் தரத்தில் 3டி வி.எப்.எக்ஸ். தொழில்நுட்பத்தில் மாற்றும் பணி லாஸ் ஏஞ்சல்சில் நடந்தது. இதற்காக விஜய், வெங்கட் பிரபு, கல்பாத்தி அகோரம் அங்கு சென்றுள்ளனர்.
தந்தை விஜய்க்கு ஜோடியாக நடிக்க முதலில் ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அவர் இன்னொரு விஜய்க்கு அம்மாவாக நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவருக்கு பதிலாக தந்தை விஜய்க்கு ஜோடியாக சினேகாவிடம் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விஜய் ஜோடியாக 2003-ம் ஆண்டு வசீகரா என்ற படத்தில் சினேகா நடித்துள்ளார். 20 வருடங்களுக்கு பின்னர் தற்போது அவருக்கு ஜோடியாக சினேகா நடிக்க இருப்பது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகன் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
- சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடப்பதாக புதிய அப்டேட்.
- விஜய், சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் மகிழ்ச்சியில் திளைத்துப்போய் உள்ளனர்.
லியோவை தொடர்ந்து `தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (`THE GOAT') படத்தில் நடித்து வருகிறார் விஜய். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, மீனாட்சி செளத்ரி, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இரண்டு வேடங்களில் விஜய் நடிப்பதாக கூறப்பட்டாலும், கோட் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி பற்றிய அப்டேட் இதுவரை வெளியாகவில்லை.
சென்னை, கேரளா, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள கோட் படத்தின் படப்பிடிப்பு தற்போது மாஸ்கோவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடப்பதாக புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. கிளைமேக்சில் 15 நிமிடங்கள் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் நடிப்பதாகவும், இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதில் விஜயும், சிவகார்த்திகேயனும் இணைந்து நடிப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஏற்கனவே கேப்டன் விஜயகாந்த் ஏஐ டெக்னாலஜி மூலம் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியானது.
இந்நிலையில், கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக வெளியான தகவலால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் அதிர்ச்சியிலும், மகிழ்ச்சியிலும் திளைத்துப்போய் உள்ளனர்.
இதனிடையே, அமரன் படப்பிடிப்பை முடித்துவிட்ட சிவகார்த்திகேயன், தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'எஸ்கே 23'படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த படத்தின் முதல் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
- இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா 2 படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் அல்லு அர்ஜூன் பிறந்த நாளை ஒட்டி இந்த படத்தின் முதல் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், அல்லு அர்ஜூன் தனது மனைவியுடன் அமர்ந்து சாப்பிடும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்துடன், "அல்லு அர்ஜூன் அண்ணாவும், ஸ்னேகா காருவும் எளிமையான சாலையோர தாபா ஒன்றில் சாப்பிடுகிறார்கள். எளிமையான மனிதர்," என்ற தலைப்பிடப்பட்டு உள்ளது.

2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாகவே இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
- அடுத்ததாக படத்தின் இரண்டாம் பாடலை ஜூன் மாதத்தில் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.
நடிகர் விஜய் லியோ படத்திற்கு பிறகு தற்போது தி கோட் (THE GREATEST OF ALL TIME) திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
இந்த படம் சைஃபை டைம் டிராவல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வருகிறது. மேலும் இந்த படமானது 2024 செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், விசில் போடு எனும் பாடல் போன்றவை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
அடுத்ததாக படத்தின் இரண்டாம் பாடலை ஜூன் மாதத்தில் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ரஷ்யா, திருவனந்தபுரம், சென்னை போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
அதேசமயம் இந்த படத்தின் 50 சதவீத டப்பிங் பணிகளையும் நடிகர் விஜய் நிறைவு செய்துள்ளார். படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகளும் நிறைவடைந்ததாக சமீபத்தில் வெங்கட் பிரபு அறிவித்திருந்தார். மேலும் நடிகர் விஜய் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் அப்பா, மகன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்று ஆரம்பத்திலேயே தகவல் வெளியானது. அதன்படி அப்பாவாக நடிக்கும் விஜய்க்கு நடிகை சினேகா ஜோடியாகவும் மகனாக நடிக்கும் விஜய்க்கு நடிகை மீனாட்சி சௌத்ரி ஜோடியாகவும் நடிக்கின்றனர்.
ஏற்கனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில் இதன் கூடுதல் தகவல் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது இந்த படத்தில் விஜய், இரட்டை வேடங்களில் அல்லாமல் மூன்று வேடங்களில் நடிப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
மூன்றாவதாக நடிக்கும் விஜய்யின் கதாபாத்திரத்தை படக்குழு சர்ப்ரைஸாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அப்டேட் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
- இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்). யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் முதல் பாடல் "விசில் போடு" ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்த நிலையில், கோட் படத்தின் இரண்டாவது பாடல், "சின்ன சின்ன கண்கள்" நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நடிகர் விஜயின் 50-வது பிறந்த நாளை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Oru chinna treat ♥️#TheGoatSecondSingle #ChinnaChinnaKangal is releasing tomorrow at 6 PM ??
— Archana Kalpathi (@archanakalpathi) June 21, 2024
Yes!! Indha paadalai paadiyavar…@actorvijay Sir
A @vp_offl Hero#TheGreatestOfAllTime#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh
@agsentertainment#GOAT @thisisysr… pic.twitter.com/pxOjLxoY46
கோட் படம் செப்டம்பர் 5 ஆம் வெளியாக இருக்கிறது. ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். டைம் டிராவல் தொடர்பான கதையம்சம் கொண்ட கோட் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- "சின்ன சின்ன கண்கள்" நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும்.
- விஜய் குரலில் இரண்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்).
யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் முதல் பாடல் "விசில் போடு" ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதைதொடர்ந்து, கோட் படத்தின் இரண்டாவது பாடல், "சின்ன சின்ன கண்கள்" நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
நாளை நடிகர் விஜயின் 50-வது பிறந்த நாளை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்நிலையில், சின்ன சின்ன கண்கள் பாடலின் குட்டி ப்ரோமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், " எங்கள் மனதுக்கு மிக நெருக்கமான பாடல் நாளை முதல் உங்கள் மனதில். பெரிய மனதுடன் இந்த பாடலின் சின்ன ப்ரோமோ இதோ.." என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பாடலை நடிகர் விஜய் மற்றும் பவதாரிணி ஆகியோர் பாடியுள்ளனர். இதன்மூலம், கோட் படத்தில், விஜய் குரலில் இரண்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கோட் படம் செப்டம்பர் 5 ஆம் வெளியாக இருக்கிறது. ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.
டைம் டிராவல் தொடர்பான கதையம்சம் கொண்ட கோட் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- தளபதி விஜய் அண்ணா பிறந்தநாளுக்கு ஒரு சர்ப்ரைஸ் வேணாமா...
- இளம்வயது விஜயும் வயதான விஜயும் ஒரே பைக்கில் செல்லும் ஆக்சன் காட்சி வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்).
யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் முதல் பாடல் "விசில் போடு" ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதைத்தொடர்ந்து, கோட் படத்தின் இரண்டாவது பாடலான "சின்ன சின்ன கண்கள்" பாடலின் குட்டி ப்ரோமோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. நடிகர் விஜயின் 50-வது பிறந்த நாளை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், அடுத்த சர்ப்ரைசாக இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், " தளபதி விஜய் அண்ணா பிறந்தநாளுக்கு ஒரு சர்ப்ரைஸ் வேணாமா..! நள்ளிரவு 12.01 மணிக்கு சந்திப்போம்..ஏனென்றால் இது கோட் பிறந்தநாள் ஷாட்ஸ்" என குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி நள்ளிரவு 12 மணிக்கு கோட் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை பட நிறுவனம் வெளியிட்டது. பைக் சேஸிங்கில் இளம்வயது விஜயும் வயதான விஜயும் ஒரே பைக்கில் செல்லும் ஆக்சன் காட்சி வெளியாகியுள்ளது. இந்த கிளிம்ஸ் வீடியோ 10 லட்சம் பார்வைகளை வேகமாக நெருங்கியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மீனா கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார்.
- நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு இவர் காலமானார்.
தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு இவர் காலமானார். அவருக்கு வயது 48. மீனா, கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் குழந்தை நட்சத்திரங்களாக 'தெறி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

சினேகா
அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடிகர்கள் ரஜினி, சரத்குமார், பிரபுதேவா, சுந்தர்.சி மற்றும் நாசர் உள்ளிட்ட பலர் நேரில் சென்று வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நடிகை சினேகா நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார். பின்னர் நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் சினேகா ஆறுதல் கூறியுள்ளார்.

