என் மலர்
நீங்கள் தேடியது "Social organizations"
- சமூக அமைப்புகள் சார்பில் காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மாநில பா.ஜனதா அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
புதுச்சேரி
மணிப்பூர் கலவர சம்பவத்தை கண்டித்து பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவரும், சுயேட்சை எம்.எல்.ஏ.வுமான நேரு தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், தமிழர் களம் அழகர், திராவிடர் விடுதலை கழகம் லோகு அய்யப்பன், தந்தைபெரியார் திராவிடர் கழகம் வீரமோகன், நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் முருகானந்தம், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா, சிந்தனையாளர் பேரவை தலைவர் கோ.செல்வம் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் சடகோபன், பஷீர்அகமது, பிராங்களின் பிரான்சுவா உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய மற்றும் மணிப்பூர் மாநில பா.ஜனதா அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
- மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் தலைமை வகித்தார்.
புதுச்சேரி:
மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலை கழகம் லோகுஅய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர்செல்வன், தமிழர் களம் அழகர், தமிழர் தேசிய முன்னணி தமிழ்மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர், எஸ்.டி.பி.ஐ. கட்சி பரகத்துல்லா, தன்னுரிமை கழகம் சடகோபன், அம்பேத்கர் தொண்டர் படை பாவாடைராயன், மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பாரதியார் பல்கலைக் கூடத்தில் விதிகளை மீறி, சமூக இடஒதுக்கீடை பின்பற்றாமல் தமிழகத்தை சேர்ந்த உதவி பேராசியர்கள் பணி நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பல்கலைக்கூட பொறுப்பு முதல்வர் மீது உயர்மட்ட விசாரணை நடத்தி பணிநீக்கம் செய்ய வேண்டும்.
கலை பண்பாட்டுத்துறை செயலரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.