search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SoniaGandhi"

    • வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்குகிறது.
    • வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19ந் தேதி நடைபெறும்.

    காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைப்பான காரிய கமிட்டிக் கூட்டம் இன்று பிற்பகல் மூன்றரை மணிக்கு டெல்லியில் நடைபெற்றது. மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ள அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி காணொலி வாயிலாக இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அவருடன் சென்றுள்ள ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் காணொலி மூலம் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்

    கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி, மல்லிகார்ஜூன் கார்க்கே, கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக், பி.சிதம்பரம், அசோக் கெலாட் உள்ளிட்டோரும் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


    செப்டம்பர் 7ந் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி பாத யாத்திரை தொடங்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தல் சில வாரங்கள் தாமதமாகலாம் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால், அக்டோபர் 17ந்தேதி கட்சித் தலைவர் தேர்தலை நடத்த காங்கிரஸ் காரிய கமிட்டி ஒப்புதல் அளித்தாக தெரிவித்தார். 


    கட்சித் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு செப்டம்பர் 22ந் தேதி வெளியிடப்படும் என்றும், வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ந் தேதி வரை நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    தேவைப்பட்டால் அக்டோபர் 17ந் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19ந் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் ஸ்மிரிதி இரானி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். #LokSabhaElections2019 #SmritiIrani
    அமேதி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி  துவங்கி 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் , வேட்பாளருமான ராகுல் காந்தியை எதிர்த்து  பாஜக சார்பில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி போட்டியிடுகிறார். இதையடுத்து இன்று காலை ஸ்மிரிதி இரானி தேர்தலில் வெற்றி பெற வேண்டி, தனது கணவர் சுபீன் இரானியுடன் இணைந்து பூஜை நடத்தினார்.



    அதன் பின்னர் வேட்பு மனு தாக்கல் செய்ய அமேதி தொகுதியை  அடைந்த ஸ்மிரிதி இரானி, பாஜக தொண்டர்கள், ஆதரவாளர்களுடன் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக புறப்பட்டார். வாகனத்தில் சென்ற அவருக்கு வழிநெடுக தொண்டர்கள் மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.  அப்போது ஸ்மிர்தி இரானியுடன் உத்தரபிரதேச மாநிலம் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உடன் இருந்தார்.

    இந்த ஊர்வலம் தேர்தல் அலுவலகத்தில் நிறைவடைந்ததும் ஸ்மிரிதி இரானி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். #LokSabhaElections2019 #SmritiIrani
    பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சோனியா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். #LokSabhaElections2019 #SoniaGandhi
    ரேபரேலி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி  துவங்கி 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி, உத்தரபிரதேசம் மாநிலத்தின் ரேபரேலி தொகுதியில் 5வது முறையாக போட்டியிட உள்ளார். இந்த தொகுதியில் வரும் மே 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.



    இதற்காக இன்று ரேபரேலி தொகுதியை  அடைந்த சோனியா காந்தி, காங்கிரஸ் தொண்டர்கள், ஆதரவாளர்களுடன் காரில் ஊர்வலமாக புறப்பட்டார்.  காரில் சென்ற சோனியாவிற்கு வழிநெடுக தொண்டர்கள் மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர். முன்னதாக ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற வேண்டி, இன்று காலை பூஜை நடத்தினார். அப்போது சோனியா காந்தியுடன் அவரது மகள் மற்றும் உத்தரபிரதேசம் மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான பிரியங்கா, மற்றும் மகன் ராகுல் காந்தியும் உடன் இருந்தனர்.

    இந்நிலையில் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் சோனியா காந்தி, இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது ராகுல் காந்தி , பிரியங்கா ஆகியோர் உடன் இருந்தனர். சோனியா காந்தி போட்டியிடுவதை முன்னிட்டு சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் அந்த தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #SoniaGandhi   
    காங்கிரஸ் ஆதரவுடன் கர்நாடக முதல்வராக பதவி ஏற்க உள்ள குமாரசாமி, சோனியா மற்றும் ராகுல்காந்தியை சந்தித்து பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்க உள்ளார். #KarnatakaElection2018 #SoniaGandhi #RahulGandhi #Kumaraswamy

    பெங்களூர்:

    கர்நாடகத்தில் எடியூரப்பா ராஜினாமாவை தொடர்ந்து ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி வருகிற 23-ந்தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார்.

    38 இடங்களில் வெற்றி பெற்ற ஜே.டி.எஸ். கட்சிக்கு 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. மெஜாரிட்டிக்கு 112 எம்.எல்.ஏ.க்கள் தேவை. அதையும் தாண்டி 116 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மந்திரி சபைக்கு உள்ளது.

    தனக்கு ஆதரவு அளிக்கும் முடிவு எடுத்த சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு குமாரசாமி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் நேரில் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக நாளை குமாரசாமி டெல்லி செல்கிறார். அங்கு சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை தனித்தனியே சந்தித்து நன்றி தெரிவித்துக் கொள்கிறார். மேலும் கூட்டணி மந்திரி சபையில் காங்கிரசுக்கு எத்தனை மந்திரி பதவி அளிப்பது, யார்-யாரை நியமிப்பது பற்றியும், சோனியா, ராகுலுடன் குமாரசாமி ஆலோசனை நடத்துகிறார்.

    இந்த சந்திப்பின் போது பதவி ஏற்பு விழாவுக்கு வருகை தருமாறு சோனியா, ராகுலுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கிறார்.

    பின்னர் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைவதை முறியடித்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அசோக் கெலாட், சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய காங்கிரஸ் தலைவர்கள் கபில்சிபல், அபிஷேக் சிங்வி உள்ளிட்ட மூத்த தலைவர்களையும், சந்தித்து நன்றி தெரிவிக்கிறார். அவர்களையும் பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கிறார்.

    குமாரசாமி மந்திரிசபை பதவி ஏற்பு விழா பெங்களூர் கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. எடியூரப்பாவும் பதவி ஏற்க இந்த ஸ்டேடியத்தைத்தான் தேர்வு செய்து வைத்திருந்தார். பின்னர் கவர்னர் மாளிகையிலேயே தனி ஆளாக பதவி ஏற்றார்.

    அவர் தேர்வு செய்த ஸ்டேடியத்தில் குமாரசாமி பதவி ஏற்பது குறிப்பிடத்தக்கது. பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.  #KarnatakaElection2018 #SoniaGandhi #RahulGandhi #Kumaraswamy

    ×