என் மலர்
நீங்கள் தேடியது "Sooriyan"
- இந்த ஒளவை வழிபாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் உள்ளது.
- இந்நாட்களில் பெண்கள் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் கிழமைகள் சிறப்பு வாய்ந்தவையாகும்.
இந்நாட்களில் பெண்கள் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
ஆடிச் செவ்வாய் அவ்வையாருக்கு செய்யும் விரத பூஜையாகும்.
ஒளவை நோன்பு கடைப்பிடிப்பதால் கன்னிப் பெண்களுக்குத் திருமணமும் சுமங்கலிகளின் கணவர்களுக்கு நீண்ட ஆயுளும்,
குழந்தை வரமும் கிடைக்கும்.
பச்சரிசி மாவுடன் வெல்லம் கலந்து உப்பில்லாமல் செய்யும் கொழுக்கட்டைதான் நோன்பின் சிறப்பு பிரசாதமாகும்.
இதைப் பெண்கள் மட்டும் தான் செய்வார்கள்.
அன்று இரவு 10.00 மணியளவில் வீட்டில் உள்ள மூத்த வயதான பெண் தலைமையில் அத்தெருவில் உள்ள பெண்கள் அவர் வீட்டில் கூடுவார்கள்.
அதற்குமுன் ஆண்கள்- சிறு ஆண் பிள்ளைகள் உட்பட வெளியேற்றப்படுவார்கள்.
அவர்கள் பார்க்கவோ, கேட்கவோ, பிரசாதம் சாப்பிடவோ கூடாது.
பின் பூஜை நடைபெறும்.
ஒளவையார் கதையையும் அம்மன் கதையையும் வயதான பெண்மணி கூறுவார்.
சிறு பெண் குழந்தை முதல் பெரியவர்கள் வரையிலும் அனைவரும் கலந்து கொண்டு பூஜை முடிப்பார்கள்.
பின் கொழுக்கட்டைகளை மீதமின்றி சாப்பிட்டு முடித்து, வீட்டைத் தூய்மைப் படுத்திய பின்தான் காலையில் ஆண்கள் அங்கு வர வேண்டும்.
இதுதான் ஒளவை நோன்பு.
இந்த ஒளவை வழிபாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் உள்ளது.
முப்பந்தல், தாழக்குடியருகே ஆதிச்ச நல்லூர், குறத்திமலை இங்கெல்லாம் ஒளவை ஆலயங்கள் உள்ளன.
அதியமானிடம் நெல்லிக்கனி பெற்ற ஒளவைதான் இவள்.
பாரியின் மகள்களான அங்கவை, சங்கவைக்குத் திருமணம் செய்வித்தவள்.
தகடூரில் உள்ள கோட்டை கல்யாண காமாட்சி ஆலயத்தில் உள்ள சூலினி துர்க்கை அம்மனின் முழு உருவத்தை,
ஆடி மாதம் மூன்றாம் செவ்வாயில் மட்டுமே மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 வரை தரிசிக்கலாம்.
மற்ற நாட்களில் முகதரிசனம் மட்டுமே.
- இதை அரசாங்க விழாவாகக் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள்.
- இங்கு அம்மன் மாணவியாக இருக்க, ஈசன் குருவாக இருந்து உபதேசம் செய்தார்.
அன்றைய தினம் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்து விளக்கேற்றி, நிவேதனமாக பால்பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து,
லலிதா சகஸ்ரநாமம், அம்மன் பாடல்களைப் பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிட்டும்.
அன்று வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, சிமிழ், கண்ணாடி வளையல் தந்து சிறப்பிக்க வேண்டும்.
அவர்களை அம்மனாகப் பாவித்து அமுதளிக்க வேண்டும்.
ஆடி வெள்ளியில்தான் வரலட்சுமி விரதம் வரும்.
சில வருடங்களில் இது ஆவணியிலும் அமைந்துவிடும்.
பொதுவாக ஆடி வெள்ளிகளில் மாலை ஆலயங்களில் குத்து விளக்குப் பூஜை நடைபெறும்.
108, 1008 விளக்குகள் வைத்துப் பூஜை செய்வார்கள்.
தருமபுர ஆதின தேவஸ்தான அம்மன் ஆலயங்களில் ஆடி வெள்ளியில் நவசக்தி அர்ச்சனை செய்வார்கள்.
ஒன்பது சிவாச்சாரியார்கள் ஒன்பது வகை மலர்களால் ஒன்பது சக்திகளை ஒரே சமயத்தில் அர்ச்சிப்பதே நவசக்தி அர்ச்சனை எனப்படும்.
நவசக்திகள் பராசக்தியின் ஒன்பது சக்தி அம்சங்களாகும்.
அவை சர்வபூதகமணி, மனோன்மணி, பலப்ரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரவுத்திரி, கேட்டை, வாமை என்பவைகளாகும்.
இதனை தீப்தை, சூட்சுமை, வாமை, பத்ரை, விபூத்யை, விமலை, அமோகை, வியுக்தை, சர்வதோ முக்தை என்றும் அழைப்பார்கள்.
புதுச்சேரி அருகே வங்கக் கடலோரம் அமைந்துள்ள வீராம்பட்டினத்தில் உள்ள செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில்
முதல் வெள்ளியிலிருந்து கடைசி வெள்ளி வரை எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் விசேஷ பூஜைகளும்,
விதம் விதமான பல்லக்கில் வீதியுலாவும் நடைபெறும்.
ஐந்தாம் வெள்ளியன்று தேர்த்திருவிழா நடைபெறும்.
இதை அரசாங்க விழாவாகக் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள்.
புதுச்சேரி கவர்னர் தேர்வடத்தை இழுத்து விழாவைத் தொடங்கி வைக்கும் வழக்கம் இன்றும் உள்ளது.
ஆடி மாதம் முழுதும் இவ்வூரில் விழாக்கோலம்தான்.
சக்தி பீடங்களில் ஒன்றான திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு ஆடி வெள்ளியில்
ஸ்ரீ வித்யா பூஜை வைதீக முறைப்படி நடத்துகின்றனர்.
இவ்வம்மன் காதுகளில் உள்ள தாடங்கங்களில் ஸ்ரீ சக்கரம் உள்ளது.
ஆடி வெள்ளியன்று, இவ்வம்மன் மாணவியாக இருக்க, ஈசன் குருவாக இருந்து உபதேசம் செய்தார்.
எனவே பள்ளிப் பிள்ளைகள் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர்.
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுதல் அதிக சிறப்பாகும்.
வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் குழுக்களாக 108, 1008 குத்துவிளக்குப் பூஜைகளைச் செய்யலாம்.
அம்மன் பூஜை செய்யும் இல்லத்தில் செல்வம் சேரும்.
திருவானைக்காவலில் ஆடி வெள்ளி யன்று அம்பாள் காலையில் லட்சுமிதேவி யாகவும், உச்சிக்கால வேளையில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருவாள்.
ஆடி வளர்பிறை துவாதசியில் துளசி பூஜை செய்வதால் பல நற்பலன்களைப் பெறலாம்.
துளசி மாடம்முன் கோலமிட்டு, மாடத்திற்குப் பொட்டிட்டு, துளசிக்கு மாலையிட்டுப் பூஜிக்க வேண்டும்.
குளித்தபின்தான் துளசிக்கு நீரூற்ற வேண்டும்.
- ஒருவர் இந்த விரதத்தை முறையாக கடைப்பிடித்தால் அனைத்து துன்பங்களில் இருந்து விடுபடலாம்.
- சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல்நாள் ஆகும்.
சத்யநாராயணா பூஜையை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று மாலை சந்திரன் உதயமாகும் நேரத்தில் செய்ய வேண்டும்.
ஒருவர் இந்த விரதத்தை முறையாக கடைப்பிடித்தால் அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுபடலாம்.
சித்திரை மாதத்தின் முதல் நாளில்தான் பிரம்மதேவன், பூமியைப் படைத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் சூரியனின் ஒளியும், அதன் சக்தியுமே உயிர்ப்பை தருகின்றன.
இதனால்தான் பழங்காலத்தில் சூரியனையே கடவுளாக நினைத்து மக்கள் அனைவரும் வழிபட்டு வந்திருக்கின்றனர்.
சூரியன் நிற்கும் நிலையைக் கொண்டு இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என ஆறு பருவகாலங்கள் ஒரு வருடத்தில் ஏற்படுகின்றன.
சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல்நாள் ஆகும்.
இது வசந்த ருது எனவும், இளவேனிற்காலம் எனவும் அழைக்கப்படுகிறது.
சித்திரை முதல் தினத்தை தமிழக மக்கள் முக்கியமான பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.
அன்று வீட்டை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். வாசலில் கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும்.
படிகளுக்கு மஞ்சள் குங்குமமிட்டு, வாசல் நிலைகளில் மாவிலைத் தோரணங்களை கட்ட வேண்டும்.
இவ்வாறு செய்தால் திருமகள் விரும்பி வருவாள்.
கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து குரு, பெற்றோர், பெரியோரை வணங்கி அவர்களின் ஆசி பெற வேண்டும்.
முடிந்தவரை தான, தருமங்களை செய்ய வேண்டும்.
புத்தாண்டு பஞ்சாங்கம் வாங்கி அதை பூஜையில் வைத்து பூஜிக்க வேண்டும்.
பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி நல்ல நேரம் பார்த்து குத்துவிளக்கேற்றி நிறைகுடம் வைத்து வணங்க வேண்டும்.
பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் விசிறிகளை தானம் செய்ய வேண்டும்.
அன்று சமையலில் வேப்பம்பூ பச்சடியும், மாங்காய் பச்சடியும் செய்வார்கள்.
சித்திரா பவுர்ணமி தினத்தன்று நெய்தீபம் ஏற்றி, குபேரன் மனைவி சித்ராதேவியை வழிபட்டால் செல்வம் பெருகும்.
சித்திரை மாதத்தில் தாகத்தில் இருப்பவர்களுக்கு குடிப்பதற்கு மோர் கொடுத்தால் பாவம் விலகும்.
சர்க்கரை கலந்த பானகம் குடிக்கக் கொடுத்தால், மோட்சம் கிடைக்கும்.
- மகாவிஷ்ணுவிற்கு ‘சத்யநாராயணர்’ என்ற திருப்பெயரும் உண்டு.
- ஒருவர் இதை முறையாக கடைப்பிடித்தால் அனைத்து துன்பங்களில் இருந்து விடுபடலாம்
மகாவிஷ்ணுவிற்கு 'சத்யநாராயணர்' என்ற திருப்பெயரும் உண்டு.
சத்யநாராயணா பூஜையை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று மாலை சந்திரன் உதயமாகும் நேரத்தில் செய்ய வேண்டும்.
மாலை 7 மணிக்கு இந்த பூஜையை செய்யலாம்.
ஸ்ரீ சத்யநாராயண பூஜையை செய்பவர்கள் பகவானின் அருளை பூரணமாக பெறுவார்கள்.
ஏழ்மை விலகி செல்வம் சேரும்.
பொய் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்படுவார்கள். பயம் நீங்கும்.
பக்தர்கள் விரும்பிய கோரிக்கைகள் நிறைவேறும். பாவம் நீங்கும்.
பவுர்ணமியன்று இந்த பூஜையை செய்ய முடியாதவர்கள் அமாவாசை, அஷ்டமி, துவாதசி,
ஞாயிறு, திங்கள், வெள்ளிக்கிழமைகளிலும் தீபாவளி, புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலும்
ஜாதகத்தில் சந்திரன் அனுகூலமாக இருக்கும் போது செய்யலாம்.
ஒரு சமயம் நாரதர் பூமிக்கு வந்தார். அப்போது வாழ்வில் பல வழிகளிலும் துன்பப்பட்ட மக்களை சந்தித்தார்.
இவர்களின் துன்பத்தை போக்கும் வழி என்ன என்று மகாவிஷ்ணுவிடம் கேட்டார்.
அதற்கு அவர் கலியுகத்தில் சத்யநாராயண விரதம் பலன் அளிக்க கூடியது.
ஒருவர் இதை முறையாக கடைப்பிடித்தால் அனைத்து துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்று கூறினார்.
- பூஜை முடிந்ததும் தான, தர்மங்கள் செய்வது அதிக பலனை கொடுக்கும்.
- இரண்டு வஸ்திரத்தை கலசத்திற்கு அணிவித்து மாலை சாத்த வேண்டும்.
சத்யநாராயண பூஜை செய்வதற்கு முன்னதாக பவுர்ணமியன்று வீட்டில் கோலமிட்டு மாவிலை தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும்.
கணவன்-மனைவி இருவரும் சந்திரன் உதயமாகும் முன் குளித்துவிட்டு பூஜை செய்ய வேண்டும்.
கோலமிட்டு அதன்மீது மூன்று வாழை இலைகளை வைக்க வேண்டும்.
வாழை இலையின் மீது அரிசியை பரப்ப வேண்டும்.
வெள்ளி, பித்தளை, செம்பினால் ஆன கலசத்தை நூலினால் சுற்றி அரிசியின் மேல் வைக்க வேண்டும்.
ஏலக்காய் பொடி, பச்சை கற்பூரம், குங்குமப்பூ ஆகியவை கலந்த நீரை கலசத்தில் நிரப்ப வேண்டும்.
கலசத்தின் உள்ளே மாவிலைகளை வைத்து கலசத்திற்கு சந்தனம், குங்குமம் பொட்டு இட வேண்டும்.
மஞ்சள் பொடியை தண்ணீரில் குழைத்து தேங்காயின் மீது தூவி கலசத்தின் மீது வைக்க வேண்டும்.
இரண்டு வஸ்திரத்தை கலசத்திற்கு அணிவித்து மாலை சாற்ற வேண்டும்.
பிறகு சத்யநாராயணர் படத்தை அலங்கரித்து பூஜை செய்யும் இடத்தில் வைக்க வேண்டும்.
தொன்னையிலான 9 கிண்ணங்களில் தானியங்கள் நிரப்பி அவற்றை நவக்கிரகங்களுக்காக
பூஜை செய்யும் இடத்தில் வைக்க வேண்டும்.
சூரியனுக்கு சிவப்பு, சந்திரனுக்கு வெள்ளை, செவ்வாய்க்கு சிவப்பு, புதனுக்கு பச்சை, குருவுக்கு மஞ்சள்,
சுக்ரனுக்கு வெள்ளை, சனிக்கு கருப்பு, ராகுவுக்கு நீலம் கேதுவுக்கு பலவண்ண நிறங்களில் வஸ்திரம் அணிவிக்க வேண்டும்.
சூரியனுக்கு கோதுமை, சந்திரனுக்கு அரிசி, செவ்வாய்க்கு துவரை, புதனுக்கு பச்சைப்பயறு,
குருவுக்கு கடலை, சுக்ரனுக்கு மொச்சை, சனிக்கு எள், ராகுவுக்கு உளுந்து, கேதுவுக்கு கொள்ளு ஆகியவற்றை படைக்க வேண்டும்.
விநாயகர் பூஜை, நவக்கிரக பூஜை முதலியவற்றை செய்து அதன் பிறகு சத்யநாராயணர் பூஜை செய்ய வேண்டும்.
பின்பு ஸ்ரீ சத்யநாராயணர் அஷ்டோத்திர சத்நாமாவளியை உச்சரிக்க வேண்டும்.
பின்னர் தூபம், தீபம், நிவேதனம், கற்பூர தீபம் முதலியவற்றை காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
பூஜை முடிந்ததும் தான, தர்மங்கள் செய்வது அதிக பலனை கொடுக்கும்.
இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் புத்திர பாக்கியம், செல்வம், பதவி, திருமண யோகம்,
மோட்சம் ஆகிய நற்பலன்கள் கிடைக்கும் என்கிறது புராணங்கள்.
- சூரியனுக்கு சஞ்சிகை, சாயாதேவி, சரூசினி போன்ற மனைவியர் பலர் உண்டு எனப் புராணங்கள் கூறுகின்றன.
சூரியனுக்கு சஞ்சிகை, சாயாதேவி, சரூசினி போன்ற மனைவியர் பலர் உண்டு எனப் புராணங்கள் கூறுகின்றன.
யமன், யமுனை, அசுவினிதேவர்கள், சனி, பத்திரை, பிருகு, வால்மீகர், கர்ணன், சுக்ரீவன் போன்ற புதல்வர்கள் உண்டு.
சூரியன் வழிபட்ட சிவாலயங்கள்:
பரிதி நியமம்,
வைதீஸ்வரன் கோவில்,
தலை ஞாயிறு மயேந்திரப்பள்ளி,
மாந்துறை,
மங்கலக்குடி,
குடவாசல்,
நெல்லிக்கா,
ஆடானை,
கண்டியூர்,
சோற்றுத்துறை,
மீயச்சூர்,
மேலைத் திருக்காட்டுப்பள்ளி,
திருச்சுழியல்,
வலிவலம்,
தேவூர்,
வாய்மூர்,
திருப்புனவாயில்,
நன்னிலம்,
பூந்துருத்தி,
காஞ்சீபுரம்,
கேதாரம்
உள்பட இன்னும் பல சிவாலயங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் சிவபெருமானை வழிபட்டு கிரகபதமும், ஆயிரம் கிரணங்களோடு விளங்கும் பேற்றினையும் பெற்றான்.
சூரியன் சிவபெருமானது வலது கண்ணாகவும் திகழ்பவன்.
- சிவபெருமானோ தீ, சூரியன், சந்திரன் ஆகிய மூன்று கண்களை உடைய ஜோதி வடிவம்.
- எனவே அவருக்கு இரவுமில்லை. பகலும் இல்லை.
சூரியன் மறைந்து சந்திரன் தோன்றும்போது இரவு வருகின்றது.
திங்கள் மறைந்து ஆதவன் விழிக்கும்போது பகல் பிறக்கின்றது. இது பிரபஞ்சத்தைப் பொருத்த விஷயம்.
சிவபெருமானோ தீ, சூரியன், சந்திரன் ஆகிய மூன்று கண்களை உடைய ஜோதி வடிவம்.
எனவே அவருக்கு இரவுமில்லை. பகலும் இல்லை.
எனினும் பக்தர்களின் பாவங்களை நீக்க லிங்கத் திருமேனியாக சிவராத்திரி அன்று தோன்றினார்.
அன்றிரவு அவரை தரிசிப்பவர்க்கு தமோ குணம் என்னும் இருள் விலகி சிவ பக்தி என்னும் ஒளி, வாழ்க்கை உண்¢டாகும்.
வம்சம் தழைக்கும்!
சிவபெருமானுடைய அட்ட வீரட்டத் தலங்களில் அசுர யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட கஜ சம்ஹார கோலம் மிகவும் முக்கியமானது.
சைவத் திருமுறைகள் பலவற்றில் அண்ணலின் இந்தக் கோலம் பாடப்படுகின்றது.
மயிலாடுதுறைக்கு அருகே உள்ள திருவழுவூரில் சிவபெருமானின் கஜ சம்ஹார கோலத்தைக் காணலாம்.
தங்களது வசம்சம் தழைக்கவில்லையே என்று ஏங்குபவர்கள், வழுவூரில் உள்ள பாலாங்குராம்பிகையையும் கஜ சம்ஹார மூர்த்தியையும் தரிசித்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்.
இதை உணர்த்தும் விதத்தில் இளங்கிளை நாயகி (பாலாங்குராம்பிகை) என்ற இனிய பெயரை தாங்கி, இங்கு தாயார் தரிசனம் அளிக்கின்றாள்.
- முருகன் என்ற சொல்லுக்கு பொருள் அழகு என்பதாகும்.
- முருகனையும் சிவந்தவன் என்னும் பொருளில் சேயோன், செவ்வேல் என்றெல்லாம் குறிப்பிடுவர்.
முருகன் என்ற சொல்லுக்கு பொருள் அழகு என்பதாகும்.
நீலக்கடல் பரப்பில் இளஞ்சூரியன் தோன்றுவதை பார்க்க செக்கச்செவேல் என்றிருக்கும். கடல் நீரோ நீலவண்ணம் கொண்டிருக்கும்.
இந்த அழகுக்காட்சியைக் கண்டமக்கள், முருகு என்று சொல்லி மகிழ்ந்தனர்.
முருகப்பெருமானின் வாகனம் மயில். மயில் நீலநிறத்துடன் இருக்கும்.
முருகனையும் சிவந்தவன் என்னும் பொருளில் சேயோன், செவ்வேல் என்றெல்லாம் குறிப்பிடுவர்.
காலப்போக்கில் சூரியன் மட்டுமில்லாமல் மலை, காடு, அருவி என்று இயற்கை அழகுக் காட்சிகளையெல்லாம் முருகனாகவே போற்றி வழிபட்டனர்.
அதைத்தான் அழகெல்லாம் முருகனே என்று குறிப்பிடுகிறோம்.
- பொழுது புலர்ந்த வேளையில் செங்கதிரோன் வானில் உதயமாகி ஜொலித்தது.
- ஒளியைக் கண்ட மனிதன் மகிழ்ச்சிப்பெருக்கில் வணங்கி நின்றான்.
காலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு கீழ்வானில் உதயமாகும் இளஞ் சூரியனை வழிபாடு செய்வது நம் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் ஒன்று.
இதனை சூரிய நமஸ்காரம் என்று சிறப்பாக குறிப்பிடுவர்.
இயற்கை வழிபாட்டில் சூரியவழிபாடே முதல் வழிபாடாகும். காட்டில் அலைந்து திரிந்த மனிதன் இருளைக் கண்டு பயந்தான்.
இரவில் ஒவ்வொரு கணப்பொழுதும் யுகமாய் கழிந்தது.
பொழுது புலர்ந்த வேளையில் செங்கதிரோன் வானில் உதயமாகி ஜொலித்தது.
ஒளியைக் கண்ட மனிதன் மகிழ்ச்சிப்பெருக்கில் வணங்கி நின்றான்.
இதுவே சூரியவழிபாட்டின் தொடக்கமாகும்.
- உலகத்தின் இயக்கமே சூரியனின் இயக்கத்தைக் கொண்டு தான் நடக்கிறது.
- ஓரறிவு முதல் ஆறறிவு வரை எல்லா உயிர்களுக்கும் ஜீவாதாரமாக சூரியன் திகழ்கிறது.
உலகத்தின் இயக்கமே சூரியனின் இயக்கத்தைக் கொண்டு தான் நடக்கிறது.
சூரியோதயத்திற்கு முன் காலையில் விழித்து அன்றாடக் கடமைகளைச் செய்யவேண்டும்.
மனிதர் மட்டுமில்லாமல் எல்லா உயிர்களும் சூரியோதயத்தின் போது கண்விழிக்கின்றன.
தாவரங்கள் சூரியஒளியின் துணையோடு ஒளிச்சேர்க்கையை நிகழ்த்துகிறது. பறவைகள் இரை தேடச் செல்கின்றன.
மனிதர்கள் தங்கள் கடமையைச் செய்கின்றனர்.
ஓரறிவு முதல் ஆறறிவு வரை எல்லா உயிர்களுக்கும் ஜீவாதாரமாக சூரியன் திகழ்கிறது.
அதனால், வாரத்தின் முதல்நாளில் சூரியனுக்குரிய நாளாக ஏற்படுத்தினர்.
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் முதல் நூலான சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தின் தொடக்கமே ஞாயிறு போற்றுதும் என்றே தொடங்குகிறது.
மற்ற இயற்கை வழிபாடுகளான நிலா, மழை போன்ற தெய்வங்கள் சூரியனுக்கு பின்னரே குறிக்கப்படுகின்றன.
- பூலோகத்தைப் போல, தேவலோகத்திலும் பகல், இரவு உண்டு.
- ஆறுமாதமாக தென்திசையில் பயணித்த சூரியன் வடதிசைக்கு திரும்பும் நாளே தைமுதல் நாள்.
12 மாதங்களில் தை முதல் ஆனி வரையிலும் வடதிசையிலும், ஆடி முதல் மார்கழி வரையிலும் தென்திசையிலும் சூரியன் பயணிக்கிறார்.
இதை உத்தராயணம், தட்சிணாயனம் என்று கூறுவர்.
பூலோகத்தைப் போல, தேவலோகத்திலும் பகல், இரவு உண்டு.
இதில் உத்தராயணகாலம் தேவர்களுக்கு பகல்பொழுதாகவும், தட்சிணாயணம் இரவாகவும் இருக்கும்.
ஆறுமாதமாக தென்திசையில் பயணித்த சூரியன் வடதிசைக்கு திரும்பும் நாளே தைமுதல் நாள்.
இந்த நாளையே மகரசங்கராந்தி என்பர். இந்நாளில் சூரியனை வழிபாடு செய்வதால் வாழ்வு செழிக்கும் என்று கூறுவர்.
- அயோத்தியை ஆண்ட வம்சம் சூரியவம்சம்.
- கொடை வள்ளல் கர்ணனும் சூரியனின் பிள்ளையே.
அயோத்தியை ஆண்ட வம்சம் சூரியவம்சம்.
நீதி நேர்மை தவறாமல் ஆட்சிபுரியும் நல்லமன்னர்கள் பிறந்த குலம் இது.
எவ்வளவு துன்பம் நேர்ந்தபோதும், உண்மையிலிருந்து விலகாமல் சத்தியம் பேசிய அரிச்சந்திரன்,
சனிதோஷம் போக்கும் நளச்சக்கரவர்த்தி, பசுக்களுக்கு வாழ்வு தந்த திலீபச்சக்கரவர்த்தி,
தசாவதாரங்களில் ஒருவராக வணங்கப்படும் ராமபிரான் ஆகியோர் சூரியகுலத்தில் தோன்றியவர்கள்.
கொடை வள்ளல் கர்ணனும் சூரியனின் பிள்ளையே.
சூரியனை வழிபட்டவர்கள் சூரியகுலத் தோன்றல்களான இந்த மன்னர்களின் நல்லாசியையும் பெறுவர் என்பது உறுதி.