என் மலர்
நீங்கள் தேடியது "Soru dhan mukkiyam Full Video"
2018 ஆம் ஆண்டு கடைசியில் வெளியான சிறுவனின் க்யூட் வீடியோ வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. #ViralVideos
சென்னை:
சமூக வலைதளங்களில் குழந்தைகள் பேசும் வீடியோக்கள் பல வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், குறிப்பிட்ட சில வீடியோக்கள் மட்டுமே வைரலாக பரவுகிறது.
அந்த வீடியோவில் ஒரு சிறுமி, அம்மாவிடம் தன்னை அடிக்க கூடாது. குணமாக சொன்னால் தவறை திருத்திக்கொள்வேன் என்று தாய்க்கு அறிவுரை கூறும் காட்சி வைரலாகி பெற்றோர்களை சிந்திக்க வைத்தது.
அதே போல் மற்றொரு சிறுமி அப்பாவிடம் சொல்வேன் என கூறியதும் இணையத்தில் வேகமாக வைரலானது.
அந்த வகையில் 2018-ம் ஆண்டின் இறுதியில் வெளிவந்த ஒரு சிறுவனின் வீடியோ பலரின் மனதை கவர்ந்துள்ளது. அந்த வீடியோவில் பேசும் ஒரு நபர், ‘நீ இளைஞர் சங்கத்தில் சேர்ந்து விட்டதால் சந்தா பணமாக உன் அப்பாவிடம் சென்று 2 ஆயிரம் ரூபாயை வாங்கிட்டு வருவீயா?’ என்று சிறுவனிடம் கேட்கிறார்.
அதற்கு அந்த சிறுவன், சாப்பிட்டுட்டு வாங்கிட்டு வர்றேன் என்கிறான். சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா? என்று அந்த நபர் கேட்டதும் ‘அப்போ எனக்கு பசிக்கும்லா? சாப்ட கூடாதா..?’ என்று கூறி அவன் அழுவது அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது.
இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் ‘டிரெண்ட்’ ஆன இந்தச் சிறுவன் தனக்கு சாப்பாடு தான் முக்கியம் என்று சொன்னவிதம் இணையவாசிகளை ‘செம க்யூட்’ என சொல்ல வைத்துள்ளது.
சமூக வலைதளங்களில் குழந்தைகள் பேசும் வீடியோக்கள் பல வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், குறிப்பிட்ட சில வீடியோக்கள் மட்டுமே வைரலாக பரவுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் திருப்பூரைச் சேர்ந்த சிறுமியின் வீடியோ வைரலாக பரவியது.
அதே போல் மற்றொரு சிறுமி அப்பாவிடம் சொல்வேன் என கூறியதும் இணையத்தில் வேகமாக வைரலானது.
அந்த வகையில் 2018-ம் ஆண்டின் இறுதியில் வெளிவந்த ஒரு சிறுவனின் வீடியோ பலரின் மனதை கவர்ந்துள்ளது. அந்த வீடியோவில் பேசும் ஒரு நபர், ‘நீ இளைஞர் சங்கத்தில் சேர்ந்து விட்டதால் சந்தா பணமாக உன் அப்பாவிடம் சென்று 2 ஆயிரம் ரூபாயை வாங்கிட்டு வருவீயா?’ என்று சிறுவனிடம் கேட்கிறார்.
அதற்கு அந்த சிறுவன், சாப்பிட்டுட்டு வாங்கிட்டு வர்றேன் என்கிறான். சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா? என்று அந்த நபர் கேட்டதும் ‘அப்போ எனக்கு பசிக்கும்லா? சாப்ட கூடாதா..?’ என்று கூறி அவன் அழுவது அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது.
இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் ‘டிரெண்ட்’ ஆன இந்தச் சிறுவன் தனக்கு சாப்பாடு தான் முக்கியம் என்று சொன்னவிதம் இணையவாசிகளை ‘செம க்யூட்’ என சொல்ல வைத்துள்ளது.
சிறுவன் பேசிய அந்த க்யூட் வீடியோவினை இங்கே காணலாம்..,