என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "South Chennai"
- மழையால் 210 கேமராக்களில் 2 கேமராக்கள் பழுதானதாக தகவல்.
- வாக்கு எண்ணும் மையத்தில் 210 கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தென் சென்னை மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதாகியுள்ளது.
சென்னையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் 210 கேமராக்களில் 2 கேமராக்கள் பழுதானதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்பார்வையில் பழுதான கேமராக்கள் அகற்றப்பட்டு புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டன.
அண்ணா பல்கலைக்கழகத்தில் வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 210 கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
- தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் 31 தொகுதிகளில் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது.
- காஞ்சிபுரத்தில் 49.94, திருவள்ளூரில் 49.82, திருநெல்வேலி 48.58, மதுரை 47.38, ஸ்ரீபெரும்புதூர் 45.96 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் வாக்குப்பதிவு 51.41 சதவீதமாக உள்ளது. அதிகபட்சமாக தருமபுரியில் 57.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. விளவங்கோடு இடைத்தேர்தலில் 45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 41.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாக காணப்படுகிறது. தமிழகத்தின் மற்ற தொகுதிகளை ஒப்பிடுகையில் சென்னை மக்களிடம் வாக்களிக்கும் ஆர்வமில்லை.
குறைந்த வாக்குப்பதிவு கொண்ட தொகுதிகளாக வட, மத்திய, தென் சென்னை தொகுதிகள் உள்ளன. தென்சென்னையில் 42.10 சதவீதமும், வடசென்னையில் 44.84 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.
பொது விடுமுறை அளித்தும் சென்னை மக்கள் வாக்களிக்க வராமல் உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் 31 தொகுதிகளில் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் 49.94, திருவள்ளூரில் 49.82, திருநெல்வேலி 48.58, மதுரை 47.38, ஸ்ரீபெரும்புதூர் 45.96 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
- தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது
- பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், தென்சென்னை தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருடன் ஜூம் மீட்டிங் மூலம் வாக்கு சேகரித்தார்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தென்சென்னை தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன், பா.ஜ.க சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் தான் இன்று பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், தென்சென்னை தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருடன் ஜூம் மீட்டிங் மூலம் வாக்கு சேகரித்தார். இந்த மீட்டிங்கின் போது ஆபாசமான படங்களை சிலர் பகிர்ந்துள்ளனர். இதையடுத்து அந்த மீட்டிங் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் வருத்தமடைந்த தமிழிசை சவுந்தரராஜன் இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "இன்று ஜூம் மீட்டிங்கில் மக்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது சில விஷமிகள் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டனர். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆபாசமான படங்களை ஜூம் மீட்டிங்கில் பரவ விட்டு உடனே நான் அவர்களோடு பேசுவதை தடுத்துவிட்டார்கள்," என்று பதிவிட்டுள்ளார்.
- பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.
- பா.ஜ.க. சார்பில் தென் சென்னை தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்க உள்ளார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.
தென் சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் போட்டியிடுகிறார்.
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல இன்று மாலை வெளியானது.
இதில் தென் சென்னை தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்க உள்ளார்.
இதனால் தென் சென்னை தொகுதி பிரபலங்கள் மோதும் ஸ்டார் தொகுதியாக உருவெடுத்துள்ளது. தென் சென்னையில் வெற்றி பெறுவது தமிழிசையா அல்லது தமிழச்சி தங்க பாண்டியனா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் தமிழச்சியும், ஜெயவர்த்தனனும் களம் கண்டனர். அதில் 5,64,000-க்கும் அதிகமான வாக்குகளை பெற்று தமிழ்ச்சி தங்க பாண்டியன் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த அத்திபட்டு புதுநகர் வட சென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டு நிலைகள் உள்ளன. இதில் ஐந்து அலகுகளில் 1830 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் என 630 மெகாவாட் மின்சாரமும் இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதல் நிலை மூன்றாம் அலகில் 210 மெகாவாட் இரண்டாவது நிலை முதல் அலகில் 600 மெகாவாட் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 810 மெகா வாட் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளன.
முதல்நிலை முதல் மற்றும் இரண்டு அலகில் 420 மெகாவாட் இரண்டாம் நிலை இரண்டாவது அலகில் 600 மெகாவாட் மொத்தம் 1020 மெகாவாட் மின் உற்பத்தி மட்டும் நடைபெறுகிறது.
பழுதினை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் பழுது சரி செய்யப்பட்டு அந்த அலகில் உற்பத்தி தொடங்கப்படும் என அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்சென்னை பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத் தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால் ஆழ்குழாய் கிணறுகள் வறண்டன.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பருவ மழை சரிவர பெய்யாததால் குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு வருகின்றன.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் தண்ணீர் மட்டம் குறைந்து வருகின்றன.
இந்த நிலையில் தென்சென்னை பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வீதி வீதியாக குடிதண்ணீருக்காக அலைகிறார்கள். பள்ளிக்கரணை, மேடவாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மூவரசம் பேட்டை பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக குறைந்துள்ளது.
150 அடி ஆழத்துக்கும் கீழ் நீர்மட்டம் சென்று விட்டது. ஆழ்குழாய் கிணறுகள் வறண்டு வருகின்றன. இதனால் புதிதாக கூடுதல் ஆழத்தில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. முன்பு 20 அடி ஆழத்தில் நிலத்தடி நீர் இருந்தது. தற்போது 150 அடி ஆழத்திற்கு மேல் ஆழ் குழாய்கள் அமைத்தால்தான் தண்ணீர் வருகிறது.
தென்சென்னை பகுதியில் தெரு குழாய்களில் குடிநீர் வரவில்லை. 4 நாட்களுக்கு ஒரு முறை தான் தெரு ஓரம் உள்ள குடிநீர் தொட்டிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக கூடுதல் செலவு செய்து குடிநீர் ‘கேன்’ வாட்டர்களை வாங்கி வருகிறார்கள்.
பெரும்பாக்கம் பகுதியில் கடந்த சில வாரங்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. கோடை காலத்தில் தெரு குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராது 4 நாட்களுக்கு ஒரு முறை தெரு ஓரத்தில் வைக்கப்பட்டு இருக்கும் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதுபோதுமானதாக இல்லை. கோடை காலத்தில் மக்களுக்கு தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால் கூடுதல் செலவு செய்து குடிநீர் கேன்களை வாங்கி வருகிறோம்.
நிலத்தடி நீர் மட்டம் 150 அடி ஆழத்துக்கு சென்று விட்டதால் ஆழ்குழாய்களில் தண்ணீர் வரவில்லை. கூடுதல் ஆழத்தில் மீண்டும் ‘போர்வெல்’ போட்டு தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பல்லாவரம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், அனகாபுத்தூர், பம்மல், தாம்பரம், செம்பாக்கம் பகுதிகளிலும் இதுபோன்ற நிலை காணப்படுகிறது.
பல்லாவரம் சுகம் நகரை சேர்ந்த விஸ்வநாதன் கூறியதாவது:-
குடிநீர் தட்டுப்பாட்டால் மாதத்துக்கு ரூ.3,500 கூடுதல் செலவு செய்து தண்ணீர் தேவையை சமாளித்து வருகிறோம். பாலாற்று தண்ணீர் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் விநியோகிக்கப்படுகிறது. நிலத்தடி தண்ணீரும் ஆழ் குழாய் கிணறுகளில் வரவில்லை.
தெருக்குழாய்களில் ஒழுங்கற்ற நிலையில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. பழைய ஆழ்குழாய்களை மாற்றி புதிய ஆழ்குழாய்கள் கூடுதல் ஆழத்தில் அமைத்து பொது மக்கள் தண்ணீர் எடுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்