என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Spain PM"
- ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வந்தார்.
- பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அவர் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார்.
புதுடெல்லி:
ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 2 நாள் பயணமாக இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அவர் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். தூதரக அதிகாரிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்தப் பயணத்தின்போது பிரதமர் பெட்ரோ சான்செஸ், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து குஜராத்தின் வதோதரா நகரில் அமைக்கப்பட்டுள்ள சி295 விமான ஆலையை மோடியும், பெட்ரோ சான்செசும் இணைந்து திறந்து வைக்கிறார்கள்.
பிரதமர் மோடி-பெட்ரோ சான்செஸ் சந்திப்பின்போது இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஸ்பெயினின் தெற்கு பகுதியில் உள்ள டோனானா தேசிய பூங்காவுக்கு சுற்றுலா செல்ல பிரதமர் பெட்ரோ சான்செஸ் திட்டமிட்டார்.
- விமானம் மீண்டும் மாட்ரிட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மாட்ரிட்:
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் செலவழிக்க பிரதமர் பெட்ரோ சான்செஸ் (வயது 52) விரும்பினார்.
அதன்படி ஸ்பெயினின் தெற்கு பகுதியில் உள்ள டோனானா தேசிய பூங்காவுக்கு சுற்றுலா செல்ல அவர் திட்டமிட்டார். இதற்காக தலைநகர் மாட்ரிட்டில் இருந்து சிறிய ரக விமானம் மூலம் அவர் தனது குடும்பத்தினருடன் புறப்பட்டார்.
ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு பேசினார்.
இதனையடுத்து அந்த விமானம் மீண்டும் மாட்ரிட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு தயாராக நின்று கொண்டிருந்த மீட்பு படையினர் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினரை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் அவர்கள் டோனானா தேசிய பூங்காவுக்கு சென்றனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. எனினும் அதிர்ஷ்டவசமாக பிரதமர் தனது குடும்பத்தினருடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறால் விமானத்தின் என்ஜின் செயலிழந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்