search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special Features"

    • பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா பெருந்திருவிழாவாகும்.
    • அக்னி குண்டத்தில் கால்நடைகள் இறங்குவது தனிச்சிறப்பாகும்.

    * பண்ணாரி அம்மனுக்கு தங்கத்தேர் ஒன்று உள்ளது. தங்கத்தேர் புறப்பாடு சாயரட்சை பூஜை நிறைவடைந்தவுடன் மாலை 6 மணிக்கு கோவில் வெளிப்பிரகாரத்தில் தங்கத்தேர் புறப்பாடு நடைபெறும். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிட தங்கத்தேர் புறப்பாட்டில் கலந்துகொள்வார்கள்.

    * இக்கோவிலில் நடைபெறும் பங்குனி குண்டம் பெருவிழா அறிவிக்கப்பட்ட திருவிழாவாகும்.

    * குண்டத்தில் பக்தர்கள் இறங்கிய பிறகு கால்நடைகள் இறங்குவது இங்கு காணப்படும் தனிச்சிறப்பாகும். 

    * இக்கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு நாள்தோறும் அதிகாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ராகிலட்டு, வெண்பொங்கல், எலுமிச்சை சாதம், ரவா கேசரி மற்றும் சர்க்கரைப்பொங்கல் ஆகிய ஐந்து வகையான பிரசாதங்கள் அடுத்தடுத்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கோவில் வளாகத்தில் குண்டத்திற்கு கிழக்குப்புறம் உள்ள மண்டபத்தில் பிரசாதம் வழங்கப்படுகிறது.

    * தெப்பக் கிணற்றுக்கு வடக்குப் பக்கத்தில் ஆண்கள் குளிக்கும் வரிசைக் குழாய்களுக்கு அருகில் ஒரு தொட்டி கட்டப்பட்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும். பகல் காலங்களில் மேய்ச்சலுக்கு வனத்திற்கு வரும் மாடுகள் தண்ணீர் குடிக்க அத்தொட்டிக்கு வருவது வழக்கம். இங்கே இரவுக் காலங்களில் குறிப்பாக கோடை காலங்களில் யானைகள் தண்ணீர் குடிக்கத் தொட்டிகளுக்கு வரும். இரவுக் காலங்களில் தனித்தோ, வெளிச்சமின்றியோ தெப்பக் கிணற்றுப் பக்கமாகச் செல்வது விரும்பத்தக்கதல்ல.

    * மாடு தானாக பால் சொரிந்த இடத்தில் புற்றும் அதன் அருகில் சுயம்புலிங்க உருவமாக வேங்கை மரத்தின் அடியில் பண்ணாரி அம்மனும் தோன்றியதால் பண்ணாரி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.

    * இக்கோவிலுக்கு கிழக்குபுறம் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது, நாளிதழ்கள் மற்றும் ஆன்மீகம் தொடர்பான புத்தகங்கள் பக்தர்கள் படிப்பதற்கு வைக்கப்பட்டுள்ளது.

    * முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சாமி சன்னதி சென்றடைய ஆறு இருக்கைகள் கொண்ட மின் ஊர்தி ஒன்று பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது. இந்த சேவை பக்தர்களுக்கு கட்டணமின்றி வழங்கப்படுகிறது.

    * இக்கோவிலுக்கு கைகுழந்தைகளோடு வருகைதரும் தாய்மார்கள் தம் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கு வசதியாக பாலூட்டும் அறை இருக்கை வசதிகளுடன் மேற்கு நுழைவுவாயில் அருகே அமைக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது.

    * முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக 3 சக்கர நாற்காலிகள் உள்ளன. நுழைவு வாயிலில் இருந்து சன்னதியை எளிதில் சென்றடையும் வகையில் சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவை பக்தர்களுக்கு கட்டணமின்றி வழங்கப்படுகிறது.

    * இக்கோவிலுக்கு முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பாக 12 முடிநீக்கும் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக முடி எடுக்கப்பட்டு வருகிறது.

    * இக்கோவிலின் மேற்குபகுதியில் பவானிசாகர்-பண்ணாரி சாலையில் மருத்துவ மையம் துவங்கப்பட்டு அதிகாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வருகிறது. இரண்டு மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள் மற்றும் இரண்டு பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் சுழற்சிமுறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

    * முடிகாணிக்கை மண்டபத்திற்கு அருகில் பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக குளியலறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முடிகாணிக்கை செலுத்தும் குழந்தைகளுக்கு முடி காணிக்கை மண்டபத்தில் சுடுநீர் எந்திரம் ஒன்று பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

    * நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தேங்காயைப் போல உருண்டு திரண்டு உள்ளன. தேங்காய் சிதறுவது போல நமது பாவங்களும் சிதறுண்டு போகவே நாம் பண்ணாரி அம்மன் கோவிலில் சிதறுகாய் உடைத்து வழிபடுகிறோம்.

    * இறைவன் கல்பகாலம் முடிந்து மீண்டும் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும்போது முதன் முதலில் தண்ணீரையே தோற்றுவிக்கிறான். அதனை நினைவு படுத்தும் வகையில் கொண்டாடப்படுவதே தெப்ப உற்சவம்.

    • பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
    • வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 3 கோடி மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், "நாட்டின் முன்னேற்றத்தை நோக்கி செல்லும் பாதையை வகுக்கும் வகையில் எங்கள் ஆட்சி உள்ளது. இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட் இது. ஐந்து முக்கிய அம்சங்களை கொள்கையாக கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது."

    "பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 3 கோடி மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 2-இல் இருந்து 3 கோடி பெண்களை லட்சாதிபதியாக்கும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மேலும் 2 கோடி வீடுகள் கட்டப்பட உள்ளது."

    "ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், மேற்கூரை சோலார் மின் தகடுகள் திட்டம், நடுத்தர வயதினருக்கு வீடு கட்டும் திட்டம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாட்டின் வளர்ச்சியில் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா போன்ற கிழக்கு மாநிலங்களும் பங்களிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது."

    "ரயில்வேக்கு மூன்று பிரதான பொருளாதார வழித்தட திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 40 ஆயிரம் ரயில்வே பெட்டிகள் வந்தே பாரத் தரத்திற்கு இணையாக தரம் உயர்த்தப்பட உள்ளது. கடந்த பத்து ஆண்டுகால பொருளாதார செயல்பாடு குறித்து வெள்ளை அறிக்கை சமர்பிக்கப்படுகிறது. பட்ஜெட்டில் 12 விதமான முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது," என்று தெரிவித்தார். 

    • நிதியமைச்சராக பொறுப்பேற்று நிர்மலா சீதாராமனின் 6-வது பட்ஜெட் இது
    • பா.ஜ.க.வின் 10-ஆண்டு கால பொருளாதார நடவடிக்கைகள் குறித்து பேசினார்

    2024 ஜூன் 16 அன்று பாராளுமன்றத்தின் 17-வது மக்களவையின் பதவிக்காலம் நிறைவடைகிறது. ஏப்ரல்-மே மாதங்களுக்கு இடையில் 543 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முழு பட்ஜெட் வெளியிடப்படும்.

    நிதியமைச்சராக பொறுப்பேற்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக தனது உரையில், 10 ஆண்டு கால பா.ஜ.க. அரசின் பொருளாதார சாதனைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

    தற்போது அரசின் செலவு - ரூ.44.90 லட்சம் கோடி, வரி வருவாய் மதிப்பீடு - ரூ.27.56 லட்சம் கோடி, நிதி பற்றாக்குறை - 5.8 சதவீதம் என உள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.

    தொடர்ந்து பேசிய நிதியமைச்சரின் உரையின் சிறப்பம்சங்கள்:

    * வரும் 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டி தரப்படும்.

    * வீடுகளின் மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்திக்கு வழிவகை செய்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்

    * நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

    * பெண்களை தாக்கும் கர்ப்பப்பை புற்று நோயை தடுக்க தடுப்பூசி வழங்கும் திட்டம் அறிமுகமாகிறது

    * ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி வழங்கப்படும்

    * அங்கன்வாடி பணியாளர்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்

    * தொழில் தொடங்க, வட்டியில்லா கடன் வழங்க ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் நிதியம் அமைக்கப்படும்

    * பால் உற்பத்தியை அதிகரிக்க புது திட்டம் கொண்டு வரப்பட உள்ளது

    • 2024-25க்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்தார்
    • புதிய அரசு பொறுப்பேற்றதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்

    இவ்வருடம் ஏப்ரல்-மே மாதத்தில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 2024க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்ததாவது:

    மத்திய பட்ஜெட்டில் தனிநபர்களுக்கான வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.

    வருமான வரி உச்ச வரம்பிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    கடந்த வருடம் கொண்டு வரப்பட்ட வழிமுறைகளே தற்போது தொடரும்.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

    பொருளாதார ரீதியாக மத்திய தரம் என வகைப்படுத்தப்பட்ட குடும்பங்களில் பெரும்பாலானவர்களுக்கு எதிர்பார்ப்பு தனி நபர் வருமானவரியில் சலுகைகள்தான்.

    ஆனால், கடந்த முறை கொண்டு வரப்பட்ட "ஓல்டு ரெஜிம், நியூ ரெஜிம்" எனும் இரண்டு திட்டங்கள் தொடர்ந்து நடைபெறப்படும் என்பது தற்போது தெளிவாகி உள்ளது.

    • 2024க்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்தார்
    • புதிய அரசு பொறுப்பேற்றதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்

    இவ்வருடம் ஏப்ரல்-மே மாதத்தில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 2024க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    நிதியமைச்சரின் பட்ஜெட் உரையின் சிறப்பம்சங்கள்:

    விக்சித் பாரத் திட்டத்தை செயல்படுத்த பல புதுமைகளும் மாற்றங்களும் அவசியப்படுகிறது.

    விக்சித் பாரத் என்பது இந்தியா, அடுத்து வரும் தசாப்தங்களில் பொருளாதார ரீதியாக, சமூக மற்றும் தொழில்நுட்ப ரீதியாக உலகிலேயே முன்னிலையில் இருப்பதற்கு 75-வது குடியரசு தினத்திற்கான கருப்பொருள். இதில் மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புகள் அடங்கும்.

    ஒவ்வொரு கால எல்லையில் விக்சித் பாரத் திட்டத்திற்கு மாநிலங்கள் தங்கள் இலக்குகளை எட்டுவதற்கு, ரூ.75 ஆயிரம் கோடிக்கான 50-வருட வட்டியில்லா கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிதியமைச்சர் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்
    • முழு பட்ஜெட் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதும் தாக்கல் செய்யப்படும்

    வரும் ஏப்ரல்-மே மாதத்தில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 2024க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மருத்துவ துறை குறித்து நிதியமைச்சரின் உரையின் சிறப்பம்சங்கள்:

    எங்கள் அரசு பல மருத்துவ கல்லூரிகளை திறக்க உள்ளது. தற்போது உள்ள கல்லூரிகளும் மேம்படுத்தப்படும். இதற்கென ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அதன் ஆலோசனைகள் பெறப்படும். இதன் மூலம் எதிர்கால இந்தியாவிற்கு தேவைப்படும் மருத்துவர்களின் எண்ணிக்கை உயரும்.

    • திருவண்ணாமலையில் பத்து நாட்கள் கார்த்திகை தீபத்திருவிழா
    • முதலில் அண்ணாமலையாரின் கருவறையில் கற்பூரம் ஏற்றப்படும்.

    பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் விழாக்களில் திருக்கார்த்திகை திருவிழா பிரசித்திப் பெற்றதாகும். இந்த ஆண்டு வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருகார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அது குறித்து பார்ப்போம்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணிகளை செய்தவர்களில் வல்லாள மகாராஜனும் ஒருவர். அவருடைய வேண்டுகோளின்படி அவருக்கு மகனாக இருந்து, தந்தைக்கு பிள்ளை செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் அருணாசலேஸ்வரர் செய்ததாக தல வரலாறு சொல்கிறது.

    வல்லாள மகாராஜா மரணம் அடைந்தபோது, இறைவனே அவருக்கு இறுதிச்சடங்கை நடத்தியதாக தல புராணம் கூறுகிறது. இதனால் குழந்தை வரம் அருளும் இறைவனாகவும் அருணாசலேஸ்வரர் பார்க்கப்படுகிறார். அவரிடம் வேண்டி குழந்தை வரம் பெற்றவர்கள், தங்களது குழந்தையை கரும்பு தொட்டிலில் கட்டி, கோவிலை சுற்றி வலம் வந்து வழிபடுவார்கள்.

    மலையின் மையப்பகுதியில் கந்தாஸ்ரமம், விருபாட்சி குகை, குகை நமச்சிவாயர் ஆலயம், மாமரத்துக்குகை, சடைச்சாமி குகை, அருட்பால் குகை, ஆலமரத்துக் குகை, ரமண மகரிஷி குகை என பல்வேறு குகைகள் இருக்கின்றன.

    அண்ணாமலையார் லிங்க வடிவில் இருப்பதாலும், சித்தர்கள் சூட்சும வடிவில் இங்கே உலா வருவதாலும், மலையை கிரிவலம் வரும் பக்தர்களின் பிரச்சினைகளும், நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். மலையை சுற்றி அமைந்திருக்கும் 14 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கிரிவலப்பாதையை ஒவ்வொரு பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவது சிறப்பு வாய்ந்தது.

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் மலைப்பகுதியில் சக்கர தீர்த்தம், அக்னி தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், பாலிதீர்த்தம், சிம்மத் தீர்த்தம், எம தீர்த்தம், சோண நதி, உண்ணாமுலை தீர்த்தம், வருண தீர்த்தம், கட்க தீர்த்தம், பாத தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்கள் காணப்படுகின்றன. அதனால் தீர்த்தங்கள் நிறைந்த ஆலயமாக இது திகழ்கிறது.

    இவற்றுள் சிவகங்கை தீர்த்தமும், பிரம்ம தீர்த்தமுமே பிரதான தீர்த்தங்களாக இருக்கின்றன. துர்க்கையம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள கட்க தீர்த்தம், அன்னை பார்வதி உருவாக்கி வணங்கிய தீர்த்தமாக போற்றப்படுகிறது. அனைத்து தீர்த்தங்களுமே நோய் தீர்க்கும் தீர்த்தங்களாகவே இருப்பது சிறப்பு.

    கிரிவலம் செல்வதற்கு சரியான பொழுது இரவு நேரம்தான். பவுர்ணமி வெளிச்சத்தில் வலம் வருவதே சரியான முறையாகும். இரவு நெருங்கியதும் நிலவொளி பிரகாசிக்க தொடங்கும் வேளையில் கிரிவலத்தை தொடங்கலாம். அந்த நிலவொளியில் சந்திரன் 16 கலைகளுடன் பூரணமாக பிரகாசிக்கிறார்.

    அந்த நிலவு ஒளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். நிலவு ஒளியால் மனத்தெளிவு உண்டாகும். கிரிவலம் வருபவர்கள் இறை நாமத்தை உச்சரித்தபடி அமைதியாக வலம் வந்தால் பலன் இரட்டிப்பாகும்.

    `அருணன்' என்றால் `சூரியன்' என்று பொருள். `அசலம்' என்றால் `கிரி' அல்லது `மலை' என்று பொருள். சூரியனை போன்ற ஒளி வடிவாக இறைவன் மலை உருவில் காட்சி அளிப்பதால் இந்த மலை `அருணா சலம்' என்று அழைக்கப்படுகிறது.

    கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும் இருந்த இந்த மலை, கலியுகத்தில் கல் மலையாகவும் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்கம் என எட்டு சிவலிங்கங்கள் திருவண்ணா மலையை சுற்றி எட்டு திசைகளிலும் அமைந்துள்ளன. இந்த லிங்கங்களின் சன்னிதியில் வழிபாடு செய்தால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    திருவண்ணாமலையில் பத்து நாட்கள் கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக 10-வது நாள் மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. 2688 அடி மலை உச்சியில் ஏழரை அடி உயர கொப்பரையில் இந்த மகாதீபம் ஏற்றப்படும். அதற்கு ஆயிரம் கிலோ காடா துணி, 3 ஆயிரம் கிலோ நெய், 2 கிலோ கற்பூரம் போன்றவை பயன்படுத்தப்படும்.

    முதலில் அண்ணாமலையாரின் கருவறையில் கற்பூரம் ஏற்றப்படும். அதில் இருந்து நெய் விளக்கு ஒன்றை ஏற்றுவார்கள். அந்த விளக்கை கொண்டு ஐந்து விளக்குகள் ஏற்றப்படும். இவை பஞ்ச மூர்த்திகள் என்றும் கூறப்படும். மாலையில் எல்லா தீபங்களும் கொடிமரம் அருகில் ஒன்று சேர்க்கப்படும். அதன் பிறகு மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீபம் தொடர்ச்சியாக 11 நாட்கள் வரை எரிந்து கொண்டே இருக்கும்.

    ஆலய அம்சங்கள்

    இந்த ஆலயம் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன. 25 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் 9 கோபுரங்கள், 6 பிரகாரங்கள், 142 தனி சன்னிதி கள், 22 விநாயகர் சிலைகள், 42 செப்பு சிலைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. திருவண்ணாமலைக்கு நவ துவார பதி என்ற பெயரும் உண்டு. அதற்கு 9 நுழைவுவாசல்களை கொண்ட நகரம்' என்று பொருள்.

    ×