என் மலர்
நீங்கள் தேடியது "Special Fever Ward"
- 15 வார்டுகளில் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.
- தேவைக்கு ஏற்ப, படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும்.
சென்னை:
பருவகால காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், 50 படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமி தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவ மனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
'புளூ' வைரஸ்களால் பரவும் இன்புளூயன்சா காய்ச்சல், டெங்கு, நுரையீரல் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. பெரும்பாலானோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றாலும், டிசம்பர் வரை காய்ச்சல் பாதிப்பு இருக்கும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதனால், காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்ப, சிறப்பு வார்டுகள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டு, நேற்று திறந்து வைக்கப்பட்டன.
இதுகுறித்து, மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறியதாவது:-
டெங்கு, இன்புளூயன்சா, வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 50 படுக்கையுடன் கூடிய சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதில், 24 மணிநேரமும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
தற்போது வரை, 15 வார்டுகளில் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். தேவைக்கு ஏற்ப, படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.