search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "spying charges"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாங்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்பியதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம்.
    • இந்திய அரசின் தொடர் முயற்சியால் தான் நாங்கள் விடுதலை ஆகி இருக்கிறோம்.

    கத்தார் நாட்டில் உள்ள ஒரு தனியார் கப்பல் நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த முன்னாள் கடற்படை வீரர்களான கேப்டன்கள் நவ் தேஜ் சிங் பால், சவுரப் வலிந்த், கமாண்டர்கள் பூர்ணேந்து திவாரி, பிரேந்திர குமார் வர்மா, சுகுணகர் பகவுலா,சஞ்சீவ் குப்தா, அமித்நாக் பால் மற்றும் மாலுமி ராகேஷ் ஆகிய 8 பேர் பணியாற்றி வந்தனர்.

    இவர்கள் 8 பேர் மீதும் கத்தார் நாட்டை உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

    அவர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் கத்தார் கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. பின்னர் இந்தியா சார்பில் சட்ட பூர்வமாக எடுத்த நடவடிக்கையினால் இந்த மரண தண்டனை குறைக்கப்பட்டது.


    ஆனாலும் தொடர்ந்து அவர்களை விடுவிப்பதற்காக இந்திய வெளியுறவு துறை சார்பில் கத்தார் நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

    இதன் பலனாக கைது செய்யப்பட்ட 8 பேரையும் 18 மாதங்களுக்கு பிறகு கத்தார் அரசு விடுதலை செய்தது. இதையடுத்து இவர்களில் 7 பேர் விமானம் மூலம் இன்று அதிகாலை டெல்லி வந்து சேர்ந்தனர். விமான நிலையத்தில் அவர்களை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வரவேற்றனர். விமானத்தை விட்டு இறங்கும் போது அவர்கள் பாரத் மாதாகி ஜே என்று முழக்கமிட்டனர்.

    நாங்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்பியதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். நிச்சயமாக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

    ஏனென்றால் அவரது தனிப்பட்ட தலையீட்டால் மட்டுமே இது சாத்தியமாகி உள்ளது. அவர் தலையீடு இல்லாமல் நாங்கள் இங்கு நின்றிருக்க முடியாது. இந்திய அரசின் தொடர் முயற்சியால் தான் நாங்கள் விடுதலை ஆகி இருக்கிறோம். அதற்காக பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். பிரதமருக்கு நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருப்போம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


    • உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டி கத்தார் அரசு கைது செய்தது.
    • தூக்குத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்தியாவைச் சேர்ந்த முன்னாள கடற்படை வீரர்கள் 8 பேர் உளவு பார்த்ததாக கத்தார் அரசு குற்றஞ்சாட்டி கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் அவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கியது.

    இதனைத் தொடர்ந்து அவர்களின் தண்டனையை குறைக்க இந்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதனால் அவர்களின் தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்டு ஜெயில் தண்டனையாக மாற்றப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது அந்த 8 முன்னாள் அதிகாரிகளையும் கத்தார் அரசு விடுதலை செய்துள்ளது. அவர்களில் ஏழு பேர் இந்தியா வந்தடைந்துள்ளனர் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    • 8 அதிகாரிகளும் இந்திய கடற்படையில் உயர் பதவி வகித்தவர்கள்
    • விரைவில் கத்தார் நீதிமன்றம் அடுத்த கட்ட விசாரணைக்கு தேதி நிர்ணயிக்கும்

    கடந்த 2022 ஆகஸ்ட் மாதம், மேற்காசிய அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் இந்திய கடற்படையை சேர்ந்த 8 அதிகாரிகள், அந்நாட்டிற்கு எதிராக உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த முழு விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அந்த 8 அதிகாரிகளும் பல முறை ஜாமின் மனு அளித்தும் அவை அந்நாட்டு நீதிமன்றத்தால் ஏற்கப்படவில்லை.

    கைது செய்யப்பட்ட 8 அதிகாரிகளும், இந்திய கடற்படையில் 20 வருடத்திற்கும் மேல் உயர் பதவிகளில் சிறப்பாக பணியாற்றியவர்கள் என்பதும், அவர்களில் சிலர் கடற்படையில் பயிற்சியாளர் பதவியும் வகித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் கடந்த மாதம், கத்தார் நாட்டின் முதல் நிலை நீதிமன்றம், அந்த 8 அதிகாரிகளுக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    அந்த அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமின்றி, இந்த தீர்ப்பு ஒட்டு மொத்த இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்களை விடுவிக்க சட்டபூர்வ வழிமுறைகளில் தூதரக முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இப்பின்னணியில், இந்திய அரசாங்கத்தின் மேல்முறையீட்டு மனுவை கத்தார் ஏற்று கொண்டுள்ளது. இது குறித்த அடுத்த கட்ட விசாரணைக்கு கத்தார் நீதிமன்றம் விரைவில் தேதி நிர்ணயிக்கும் என தெரிய வந்துள்ளது.

    மேல்முறையீட்டு மனு ஏற்கப்பட்ட செய்தி வெளியானதில் இருந்து 8 அதிகாரிகளின் குடும்பத்தினர் மட்டுமின்றி இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×