என் மலர்
நீங்கள் தேடியது "SRHvsMI IPL"
- மும்பை மோதிய முதல் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- இன்றைய போட்டி தொடங்குவதற்கு முன்பு இருந்தே ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.
ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இரு அணிகளும் தோல்வியடைந்த நிலையில் முதல் வெற்றியை எதிர் நோக்கி இரு அணிகளும் களமிறங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டி இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில் ரசிகர்கள் மும்பை கா ராஜா ரோகித் சர்மா என முழக்கமிட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் இன்றைய போட்டி தொடங்குவதற்கு முன்பு இருந்தே எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் குஜராத் அணியிடம் மோதியது. இந்த போட்டி அகமதாபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மாவுக்கு ஆதரவு ரசிகர்கள் மும்பை கா ராஜா ரோகித் சர்மா என முழக்கமிட்டனர். அதேபோல இந்த போட்டியிலும் முழக்கமிட்டு வருகின்றனர்.
- இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.
- ஐதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை.
ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதல் போட்டியில் இரு அணிகளும் தோல்வியடைந்த நிலையில் முதல் வெற்றியை எதிர் நோக்கி இரு அணிகளும் களமிறங்குகிறது.
ஐதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரும் இந்த போட்டியில் களமிறங்கவில்லை.
- பவர்பிளேயில் சன்ரைசர்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் குவித்தது.
- ஐபிஎல் தொடரில் அதிகவேக அரைசதம் அடித்த வீரர்களில் ஜெய்ஸ்வால் முதல் இடத்தில் உள்ளார்.
ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் - திராவிஷ் ஹேட் ஆகியோர் களமிறங்கினார். மயங்க் அகர்வால் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அபிஷேக் திராவிஷ் ஹேட் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் பவர்பிளேயில் சன்ரைசர்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய திராவிஷ் ஹெட் 18 பந்தில் அரை சதம் விளாசினார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக வேக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அடுத்த சிறிது நேரத்திலேயே இவரது சாதனை இளம் வீரர் அபிஷேக் முறியடித்தார்.
அபிஷேக் 16 பந்தில் அரை சதம் விளாசி அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகவேக அரை சதம் விளாசிய 3-வது வீரரானார். முதல் இடத்தில் ஜெய்ஸ்வாலும் (13 பந்தில்) 2-வது இடத்தில் கேஎல் ராகுல் மற்றும் பேட் கம்மின்ஸ் (14) உள்ளனர்.
- திராவிஷ் ஹெட் 18 பந்தில் அரை சதம் விளாசினார்.
- அபிஷேக் 16 பந்தில் அரை சதம் விளாசினார்.
ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் - திராவிஷ் ஹேட் ஆகியோர் களமிறங்கினார். மயங்க் அகர்வால் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அபிஷேக் திராவிஷ் ஹேட் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் பவர்பிளேயில் சன்ரைசர்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய திராவிஷ் ஹெட் 18 பந்தில் அரை சதம் விளாசினார். அவர் 24 பந்தில் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் ருத்ர தாண்டவம் ஆடிய அபிஷேக் 16 பந்தில் அரை சதம் விளாசினார். அவர் 23 பந்தில் 63 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.
இதனை தொடர்ந்து வந்த கிளாசனும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 23 பந்தில் அரை சதம் விளாசினார்.
இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அணியாக அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் அணி படைத்துள்ளது. இதற்கு முன்பு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி 263 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை சன்ரைசர்ஸ் முறியடித்துள்ளது.