search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sri jai"

    • ஸ்ரீ ஜெய் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ’பைரதேவி’.
    • இந்த படத்தில் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இயக்குனர் ஸ்ரீ ஜெய், கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி இயக்கும் திரைப்படம் 'பைரதேவி'. இந்த படத்தில் பிரபல கன்னட நடிகையும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவியுமான ராதிகா குமாரசாமி என்கிற குட்டி ராதிகா, அகோரா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இந்த படத்தில் ரங்காயன ராஜூ, ரவிசங்கர் (பொம்மலி), ஸ்கந்தா அசோக், அனு முகர்ஜி, மாளவிகா அவினாஷ் மற்றும் சுசித்ரா பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கே.கே.செந்தில் பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜே.எஸ். வாலி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.



    இப்படத்தின் படப்பிடிப்பு வாரணாசி, காசி, ஹரித்துவார், ஐதராபாத், சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ராதிகா குமாரசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு டீசரை வெளியிட்டுள்ளனர்.

    பல அகோராக்களுடன் சேர்ந்து ஒரு இறந்த உடலின் தலைப்பக்கம் அமர்ந்து ராதிகா குமாரசாமி தாந்த்ரீக பூஜை செய்வது போல இந்த டீசரின் வீடியோ துவங்குகிறது. அதன்பிறகு ஒரு ரவுடி கும்பலால் தாக்கப்பட்ட ஒரு பெண்ணை காப்பாற்ற முயற்சிக்கிறார்.

    ×