என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Lanka Team"

    • ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இலங்கை அணி செப்டம்பர் 9-ம் தேதி வங்காளதேசம் அணியை எதிர்கொள்கிறது.

    ஆசிய தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 291 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 37.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.

    இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது. அதாவது ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வெற்றி பெற்று பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி இதனை இருமுறை செய்துள்ளது. பாகிஸ்தான் ஒருமுறை மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளது.

    இலங்கை அணி முதன் முறையாக இந்த சாதனையை பதிவு செய்துள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக 21 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.

    இலங்கை அணி செப்டம்பர் 9-ம் தேதி வங்காளதேசம் அணியை எதிர்கொள்கிறது.

    • இலங்கையிலும் இதே பிரச்சனை உள்ளது.
    • தற்போதுள்ள இளைஞர்கள் அதிக வருமானம் ஈட்டுகிறார்கள் என்பதில் பெருமை அடைகிறேன்.

    டி20 லீக் போட்டிகளால் சர்வதேச கிரிக்கெட் தரம் குறைந்து வருகிறது. தலைசிறந்த முன்னாள் வீரர்களை போன்ற வீரர்களை உருவாக்க முடியவில்லை என்று இலங்கை அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்த கேப்டனான அர்ஜுன ரனதுங்கா தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரனதுங்கா கூறியதாவது:-

     நான் 1990களின் தொடகத்தில் கேப்டனாக இருந்தபோது, இந்திய அணி கவாஸ்கர், வெங்சர்கார், அமர்நாத் போன்ற பேட்டிங் ஆர்டர்களை பெற்றிருந்தது. அவர்களை எங்களால் இரண்டு முறை (டெஸ்ட் போட்டி) ஆட்மிழக்க செய்ய முடியவில்லை. அவர்களை தொடர்ந்து அசாருதீன், தெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, டிராவிட் பின்தொடர்ந்து வந்தார்கள்.

    அவர்களிடம் அற்புதனமாக தரமான வீரர்கள் இருந்தனர். நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். என்னை தவறாக நினைக்காதீர்கள். தற்போது அதை போன்ற கிளாஸ் பிளேயர்கள் இந்தியாவில் உள்ளனரா? நான் அப்படி நினைக்கவில்லை. இதை வெளிப்படையாக தெரிவிக்கிறேன். நான் என்னுடைய 1990 இலங்கை அணியுடன், இந்த இந்திய அணிக்கு எதிரான விளையாடினால், என்னால் இரண்டு முறை ஆட்டமிழக்க செய்ய முடியும். இந்திய மண்ணில் இந்தியாவை தோற்கடிப்பேன்.


    நாம் இளைஞர்களுக்கு முறையாக கிரிக்கெட் சொல்லிக்கொடுக்கிறோமா?. இந்தியாவில் கவாஸ்கர், வெங்சர்கார், அமர்நாத் போன்றோரை உருவாக்க முடியுமா?. ஒருவேளை தெண்டுல்கர், டிராவிட் போன்று? வெளிப்படைய நீங்கள் சொல்லுங்கள். எனக்கு இதில் சந்தேகம் உள்ளது. இலங்கையிலும் இதே பிரச்சனை உள்ளது.

    தற்போதுள்ள இளைஞர்கள் அதிக வருமானம் ஈட்டுகிறார்கள் என்பதில் பெருமை அடைகிறேன். அவர்கள் பிரான்சிஸ் கிரிக்கெட்டுகளை விரும்புகின்றனர். நாட்டிற்காக விளையாடவில்லை என்றாலும், பிரான்சிஸ் கிரிக்கெட்டில் விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள். இன்னும் ஐந்து வருடத்தில் வீரர்கள் நாட்டிற்காக விளையாடும் மதிப்பு போய்விடும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் பிரான்சிஸ் கிரிக்கெட் மட்டும்தான் இருக்கும்.

    இவ்வாறு ரனதுங்கா தெரிவித்துள்ளார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தொடக்க சுற்றிலேயே வெளியேறியதை அடுத்து கேப்டன் பதவியில் இருந்து மேத்யூசை நீக்கி தேர்வு குழுவினர் நடவடிக்கை எடுத்து உள்ளது. #AsiaCup2018 #Matthews
    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தொடக்க சுற்றிலேயே வெளியேறியது. இதை தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து மேத்யூசை நீக்கி தேர்வு குழுவினர் இன்று அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

    அவருக்கு பதிலாக சன்டிமால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். #AsiaCup2018 #Matthews
    ×