என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sri ramanujar"
- வேதார்த்த-ஸ்ங்கரம்-வேதங்களைக் கொண்டே விசிஷ்டாத்வைதக் கருத்தை நிலை நிறுத்தும் நூல்.
- ஸ்ரீபாஷ்யம்-போதாயனர் பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரை.
ராமானுஜர் நவத்னம் போல ஒன்பது நூல்களை இயற்றி அருளிச் செய்துள்ளார்.
அவை:
1. வேதார்த்த-ஸ்ங்கரம்-வேதங்களைக் கொண்டே விசிஷ்டாத்வைதக் கருத்தை நிலை நிறுத்தும் நூல்.
2. ஸ்ரீபாஷ்யம்-போதாயனர் பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரை.
3. கீதாபாஷ்யம்-பகவத் கீதைக்கு விளக்க உரை.
4. வேதாநந்த தீபம் - பிரம்ம சூத்திரங்களுக்கு சுருக்கமான உரை.
5. வேதாந்த ஸாரம்-வேதத்தின் ஸாரமான நூலான பிரம்மசூத்திரத்திற்கு ஆரம்பகால சாதகர்களுக்கு உரிய உரை.
6. சரணாகதி சத்யம்-இறைவனிடம் சரணாகதி அடைவது பற்றி விளக்கும் நூல்.
7. ஸ்ரீரங்க கத்யம்-ஸ்ரீரங்கனின் பெருமையை விளக்கி அவனிடம் சரணாகதி அடைய சொல்லும் நூல்.
8. ஸ்ரீவைகுண்ட கத்யம்-ஸ்ரீவைகுண்டம் பற்றியும், முக்தியைப்பற்றியும் கூறும் நூல்.
9. நித்யக்ரந்தம்-ஸ்ரீவைஷ்ணவர்கள் தினந்தோறும் இறைவனை வழிபடும் முறை, ஆசாரபததி ஆகியவற்றை கூறும் நூல்.
10. ஸ்ரீவைஷ்ணவ கோவில்களில் வேதங்களுக்கு ஈடாக நாலாயிரத் திவ்ய பிரபந்தங்களை சேவிக்கும்படி செய்தவர் ராமானுஜர்.
- ஆதிசங்கர ஸ்தாபித்தது அத்வைதம். அதாவது எல்லாம் பிரம்ம மயம் என்பது.
- ராமானுஜர் ஸ்தாபித்தது விசிஷ்டாத்வைதம். அதாவது விசேஷத்தோடு கூடிய அத்வைதம்.
ஆதிசங்கர ஸ்தாபித்தது அத்வைதம். அதாவது எல்லாம் பிரம்ம மயம் என்பது.
எல்லாம் பிரம்ம மயம் என்பது உண்மையானாலும் சாதாரண மக்களும் உணர்ந்து உய்வடைய முடியாததால் ராமானுஜர் புதியதோர் சிந்தாந்தத்தை உருவாக்கினார்.
ராமானுஜர் ஸ்தாபித்தது விசிஷ்டாத்வைதம். அதாவது விசேஷத்தோடு கூடிய அத்வைதம்.
"ஜகத்துக்கு அந்தர்யாமியாய் இருப்பவன் நாராயணன்"
ஜீவனுக்கும் அந்தர்யாமியாய் இருக்கிறான்
ஜீவன் என்கிற புருஷனன், ஜகத் என்கிற பிரகிருதி இந்த இரண்டுக்கும் விசேஷத்தோடு கூடியதாகவே பிரம்மம் இருக்கும் என்பதாலேயே "விசிஷ்டாத்வைதம்" என்று அதற்கு பெயர்.
ஜீவாத்மா சரணாகதி மூலமாகவும், பக்தியின் மூலமாகவும் பரமாத்வாவை அடையும் என்பதை வலியுறுத்தினார் ராமானுஜர்.
- பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருவரங்கத்திற்கு வந்தனர்.
- அவர்களில் பலர் ராமானுஜர் சீடர்களாகி தொண்டு வாழ்க்கை மேற்கொண்டனர்.
ராமானுஜர் திருவரங்கம் திருக்கோவில் நிர்வாகத்தை ஏற்றார். பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்தார்.
அவருடைய முயற்சியால் வைணவம் தழைத்தது. அதனால் உடையவரின் புகழ் எங்கும் பரவியது.
பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருவரங்கத்திற்கு வந்தனர்.
அவர்களில் பலர் ராமானுஜர் சீடர்களாகி தொண்டு வாழ்க்கை மேற்கொண்டனர்.
அவ்வகையில் சுமதி என்ற பெண்ணும் உடையவரின் கைங்கர்யத்தில் ஈடுபட்டாள்.
அவன் கொங்கு நாட்டில் இருந்து வந்தவள் என்பதால், அவளை ராமானுஜர், "கொங்குப்பிராட்டி" என்று அழைத்தார்.
அனைத்தையும் மறந்து. ஆச்சார்ய சேவையில் ஈடுபட்டிருந்த கொங்குப் பிராட்டிக்கு, சொந்த ஊரில் இருந்து அழைப்பு வந்தது.
தவிர்க்க முடியாத குடும்பச் சூழலால் அவள் ஊருக்குத் திரும்ப வேண்டி இருந்தது.
கொங்குப்பிராட்டிக்கு, திருவரங்கத்தையும், ராமானுஜரையும் விட்டுப் பிரிந்து செல்ல மனம் இல்லை. எனினும் செல்ல வேண்டிய சூழ்நிலை.
கொங்குப்பிராட்டி தன் குருநாதரின் பாதுகைகளைக் கேட்டுப் பெற்றாள்.
பரதன் ராமபாதுகையை வைத்து வழிபட்டது போல், கொங்குப்பிராட்டி உடையவரின் பாதுகைகளை தன்னுடைய ஊரில் வைத்து வழிபட்டு வந்தாள்.
ஆசானின் திருவடிகளைப் பெற்று வழிபட்டாள்.
- அண்ணனைப் போன்று இக்கைங்கர்யம் செய்த ராமானுஜரை, "கோதைக்கு அண்ணன்" என்று போற்றினார்கள்.
- பிறகு திருமாலிருஞ்சோலையில் இருந்து ஆண்டாளின் அவதாரத்தலமாகிய திருவில்லிபுத்தூரை அடைந்தார்.
திருநாராயணபுரத்து மக்களிடம் பிரியாவிடை பெற்று உடையவர் திருவரங்கத்திற்கு பயணமானார்.
மதுரைக்கு அருகில் உள்ள திருமாலிருஞ்சோலைக்கு எழுந்தருளிய ராமானுஜருக்கு ஆண்டாள் பாசுரம் ஒன்று நினைவுக்கு வந்தது.
அப்பாசுரத்தில் ஆண்டாள் திருமாலிருஞ்சோலைப் பொருமாளுக்கு நூறு தடா அக்கார அடிசிலும், நூறுதடா வெண்ணையும் பிறவும் படைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டாள் தன் பாசுரத்தில் குறிப்பிட்டவாறு, உடையவர் திருமாலிருஞ்சோலைப் பெருமாளுக்கு நூறுதடா அக்காரஅடிசில் செய்து நிவேதித்தார்.
அத்துடன் நூறுதடா வெண்ணையும் பிறவும் படைத்தார்.
அண்ணனைப் போன்று இக்கைங்கர்யம் செய்த ராமானுஜரை, "கோதைக்கு அண்ணன்" என்று போற்றினார்கள்.
பிறகு திருமாலிருஞ்சோலையில் இருந்து ஆண்டாளின் அவதாரத்தலமாகிய திருவில்லிபுத்தூரை அடைந்தார்.
அங்கு ஆண்டாளைச் சேவிக்கச் சென்ற ராமானுஜரை ஆண்டாள் பிராட்டி, "வருக என் அண்ணனே" என்று வாயார அழைத்தாள்.
அதனால், வாழித் திருநாமம், "பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே" என்று போற்றுகிறது.
- காஷ்மீரத்தில் போதாயன விருத்தி உரை கண்டறிந்த பின்புதான் ஸ்ரீபாஷ்யம் பூரண தவம் அடைந்தது எனலாம்.
- ஸ்ரீபாஷ்யத்தின் சாரமாக தியானம், உபாசன, பக்தி இவற்றின் மூலமாக முக்தி அடைவது கூறப்படுகிறது.
சங்கரரின் பாஷ்யம் 'சங்கர பாஷ்யம்' என்று வழங்கப்பட்டது. ராமானுஜரின் பாஷ்யம் ராமானுஜபாஷ்யம் என்ற வழங்கப்பட்டது.
ராமானுஜருக்கு முன்பே விசிஷ்டாத்வைத வேதாந்தம் இருந்து வந்திருக்கிறது.
போதாயனரைத் தவிர டங்கர், குகதேவர், முதலானோர், விசிஷ்டாத்வைதக் கொள்கைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.
ராமானுஜர் இயற்றிய ஸ்ரீபாஷ்ய நூலே ஸ்ரீவைஷ்ணவ விசிஷ்டாத்வைத கொள்கைக்கு ஆதார நூல் என்பது பெரும்பாலோரது கருத்தாக இருந்து வருகிறது.
காஷ்மீரத்தில் போதாயன விருத்தி உரை கண்டறிந்த பின்புதான் ஸ்ரீபாஷ்யம் பூரண தவம் அடைந்தது எனலாம்.
பக்தி சரணாகதியை ஆதாரமாகக் கொண்டே சேவையை மையமாகக் கொண்டதுதான் விசித்டாத்வைத கொள்கையாக இருந்து வந்தது.
விசேஷத்தன்மை பொருந்திய அத்வைதம்தான் விசிஷ்டாத் வைதம் ஒன்றுடன் ஒன்றினைந்த ஒன்றுடன் அடங்குவது ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவது தான் விசிஷ்டாத்வைதம்.
ஸ்ரீபாஷ்யத்தின் சாரமாக தியானம், உபாசன, பக்தி இவற்றின் மூலமாக முக்தி அடைவது கூறப்படுகிறது.
ஸ்ரீராமானுஜர் கூற கூரத்தாழ்வார் ஸ்ரீபாஷ்யத்தை எழுதி முடித்ததும் தமது மருமகன் நடாதூராழ்வார் வசம் ஸ்ரீபாஷ்யத்தை கொடுத்து காஷ்மீரத்திலிருக்கும் ஸ்ரீசாரதா பீடத்துக்கு அனுப்பி ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
ஸ்ரீராமானுஜர் அருளிய ஸ்ரீபாஷ்யம் நூல் தெய்வீக வேதமறை விஞ்ஞான பொக்கிஷமாக அள்ள அள்ள குறையாத ஞான சமுத்திரமாய் இறைவனின் அருகாமையை உணர்த்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
- ஆனால் ராமானுஜர் சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் சிந்தித்தார்.
- கூரத்தாழ்வார் எழுத மறுத்த அந்த வாக்கியத்தைப் பற்றி யோசித்த போது தன்னுடைய தவறு புரிந்தது.
ஆனால் அந்த நாட்டு பண்டிதர்களோ இதனால் மிகவும் பகைமை கொண்டனர்.
ராமானுஜரை பின்தொடர்ந்து கண்காணித்து அந்த நூலை அவரிடம் இருந்து திருடிக் கொண்டு போய்விட்டதும் ராமானுஜர் கலங்கிப் போனார்.
இதனைக்கண்ட கூரத்தாழ்வார், "தேவரீர் தயவு செய்து கலங்க வேண்டாம்.
நான் ஒருமுறை அந்த நூல் முழுவதையும் படித்துவிட்டேன்.
தாங்கள் களைத்துப்போய் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நான் அதைப்படித்தேன்.
அதில் உள்ள பொருட்களை இப்போதே சொல்ல வேண்டுமா அல்லது இரண்டாற்றுக்கிடையே வந்து சொன்னால் போதுமா" என்று கேட்டார்.
ராமானுஜர் கூரத்தாழ்வாரின் கல்வி நினைவாற்றல் கண்டு மெய்சிலிர்த்தார்.
"கூரத்தாழ்வாரே ! நான் சொல்லச்சொல்ல நீர் பாஷ்ய வாக்கியங்களை எழுதிக்கொண்டே வாரும்.
நான் சொல்லும் வாக்கியங்களுக்கும் உமது நினைவில் இருக்கும் வாக்கியங்களுக்கும் ஏதேனும் முரண் இருப்பதாக புலப்பட்டால் நீர் எழுதுவதை நிறுத்திவிடும்" என்ற ராமானுஜர் கூறவும் அவரும் சம்மதமாய் எழுதத்தொடங்கினார்.
ராமானுஜர் சொல்லச்சொல்ல எழுதிக்கொண்டே வந்த கூரத்தாழ்வார் ஒரு சமயம் எழுதுவதை நிறுத்திவிட்டார்.
ராமானுஜர் கூறியது பக்தி மார்க்க மதமாகிய விசிஷ்டாத் வைத கொள்கைக்கு முரணாக இருந்ததால் தான் கூரத்தாழ்வார் அப்படி எழுதுவதை நிறுத்தியபடி இருந்தார்.
இராமானுஜர் அதனைக்கண்டு கடும் கோபம் கொண்டார்.
"நான் சொன்னதை எழுத உமக்க இஷ்டம் இல்லையென்றால் நீரே பாஷ்யம் எழுதிக்கொள்ளும்" என்று ராமானுஜர் எழுந்து போய்விட்டார்.
ஆனால் ராமானுஜர் சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் சிந்தித்தார்.
கூரத்தாழ்வார் எழுத மறுத்த அந்த வாக்கியத்தைப் பற்றி யோசித்த போது தன்னுடைய தவறு புரிந்தது.
அதன்பின் அந்த வாக்கியத்தை திருத்திச்சொல்ல கூரத்தாழ்வார் எழுதத்துவங்கினார்.
- பண்டிதர்கள் இதனைக் கேட்டதும் முகம் சுளித்தனர். ராமானுஜருக்கு அதனைக் காண்பிக்கக்கூடாது என்று தீர்மானம் செய்துவிட்டனர்.
- அதனை அறிந்து அவர் மிகவும் மனவேதனை அடைந்தார்.
மகரிஷி போதாயனர் லட்சம் கிரந்தங்களில் பிரம்ம சூத்திர பாஷ்யம் செய்திருக்கிறாரே அதைச் சங்கரர் கூட குறிப்பிட்டு இருக்கிறாரே அதனை நான் படித்து பார்க்க விரும்புகிறேன் என்று ராமானுஜர் தெரிவித்தார்.
பண்டிதர்கள் இதனைக் கேட்டதும் முகம் சுளித்தனர்.
ராமானுஜருக்கு அதனைக் காண்பிக்கக்கூடாது என்று தீர்மானம் செய்துவிட்டனர்.
அதனை அறிந்து அவர் மிகவும் மனவேதனை அடைந்தார்.
ஒருவழியும் தோன்றாது கடைசியாய் காஷ்மீரத்து மன்னரிடம் சென்றார்.
எனது குருநாதர் ஸ்ரீரங்கத்து ஸ்ரீஆளவந்தார் ஆணைப்படி ஸ்ரீபாஷ்யம் நூல் எழுதும் பொருட்டு காஷ்மீருக்கு நெடும் பயணம் மேற்கொண்டு வந்துள்ளேன்.
எனக்கு இங்குள்ள போதாயன விருத்தி நூலை ஒருமுறை வாசித்து பார்ப்பதற்கு அனுமதி தந்தால் மிகவும் உவகை அடைவேன் என்றார் ராமானுஜர்.
ராமானுஜரது முக வசீகரமும் காந்த சக்தியும் அரசனை கவர்ந்து அவரது ஆழ்ந்த புலமையையும் கண்ணுற்று அந்த போதாயன விருத்தி ஏட்டை நீங்கள் உங்கள் நாட்டுக்கே எடுத்துச் செல்லலாம் என்று அனுமதி அளித்தார்.
அனுமதி அளித்ததோடு ராமானுஜரிடம் அந்த நூலையும் அளித்துவிட்டார் அரசர்.
- கோவில் காவல் பணிகளுக்கு பிள்ளையுறங்கா வில்லிதாசர் நியமிக்கப்பட்டார்.
- கோவில் நிர்வாகப் பொறுப்புகளுக்கு முதலியாண்டான் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஸ்ரீ ஆளவந்தார் திருவுள்ளப்படி ஸ்ரீபாஷ்யம் என்கிற வேதாந்த நூல் எழுதி முடிக்கும் திருப்பணியில் கவனம் செலுத்த திருக்கோவிலில் முறையிட்டதும், ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீபாஷ்யம் நூலுக்காக காஷ்மீர் தேசம் செல்ல உத்தேசிக்கப்பட்டது.
காஷ்மீர் தேசத்தில் தான் ஸ்ரீபாஷ்யம் நூலுக்கான போதாயன சூத்திர விருத்தியுரை நூல் இருந்து வந்தது.
ஸ்ரீராமானுஜர் காஷ்மீர் தேசத்துக்கு செல்வதற்கு ஏதுவாக ஸ்ரீரங்கம் திருக்கோவில் கட்டளைகளை நிறைவேற்றி சில திட்டங்கள் வகுக்கப்பட்டன.
கோவில் காவல் பணிகளுக்கு பிள்ளையுறங்கா வில்லிதாசர் நியமிக்கப்பட்டார்.
கோவில் நிர்வாகப் பொறுப்புகளுக்கு முதலியாண்டான் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சகல பரிவார பரிபாலன மேற்பார்வை விசாரணைகளுக்கு அகளங்க சோழனும் மற்றும் நம்பிக்கைக்கு உரியவர்கள் நியமிக்கப்பட்டனர்.
ராமானுஜர் அதன்பின் தன் பயணத்திற்கு எப்பொழுதும் நிழலாக இருக்கும் கூரத்தாழ்வாரை துணையாக அழைத்துக் கொண்டு காஷ்மீர் பயணம் சென்றார்.
காஷ்மீரில் ராமானுஜர் பாண்டிதர்களைச் சந்தித்து வேதவேதாந்த விஷயங்கள் சம்பந்தமாக கலந்து உரையாடினார்.
ராமானுஜரது புலமையும் அறிவுக் கூர்மையும் வாக்கு வன்மையும் ஞான வேட்கையும் எல்லோரையும் பிரமிக்கச் செய்தன.
- எந்த சாதியைச் சேர்ந்தவர்களும், எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் வைணவத்தின் கதவுகள் திறந்தே உள்ளன.
- வைணவத்தில் சேர்ந்தவர்கள் தமது பண்டைக் குலத்தை துறந்து தொண்டர் குலத்தினர் ஆகி விடுவார்கள்.
மேல்கோட்டைக்கு அழைத்து வந்த ஏழை எளியவர்களில், கடையருக்கும் கடையராக் கருதப்படும் பஞ்சமர்களின் பகவத்தைங்கரியத்தை நினைவு கூர்ந்து ராமானுஜர் பெருமிதம் கொண்டார்.
அந்த மக்கள் அனைவரையும் அழைத்து, நன்னெறிக் கோட்பாடுகளை உபதேசித்து வைணவர்கள் ஆக்கினார்.
திருநாராயண சுவாமி கோவில், ஸ்ரீரங்கப் பட்டணத்திலும் பேலூரிலுமுள்ள பெருமாள் கோவில்கள் போன்ற எல்லா வைணவக் கோவில்களுக்குள்ளும் எல்லோரையும் போன்றே இவர்களும் சென்று இறைவழிபாடு செய்யலாம் என்றும், கோவிலுக்கு அருகில் வெட்டப்பட்ட குளத்தில் இருந்து நீர் எடுத்து வரலாம் என்றும் ராமானுஜர் அறிவித்தார்.
தீண்டத்தகாதவர் என்று கருதப்பட்ட பஞ்சமர்களை மகாத்மா காந்தி "அரிஜன்", (விஷ்ணுவுக்குப் பிரியமானவர்கள்) என்று அழைத்தார்.
ஆனால், 900 ஆண்டுகளுக்கு முன்னரே ராமானுஜர் அவர்களை "திருக்குலத்தார்" எனக் குறிப்பிட்டார் என்பது கவனிக்கத்தக்கது.
எந்த சாதியைச் சேர்ந்தவர்களும், எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் வைணவத்தின் கதவுகள் திறந்தே உள்ளன.
வைணவத்தில் சேர்ந்தவர்கள் தமது பண்டைக் குலத்தை துறந்து தொண்டர் குலத்தினர் ஆகி விடுவார்கள்.
இவ்விதம் வைணவராகி, தொண்டர் குலத்தைச் சேர்ந்தவர்களை, அவர்களுடைய பண்டைக் குலத்தைக் குறிப்பிட்டுப் பேசுவது மகாபாவம் ஆகும் என்றார் ராமானுஜர்.
இவ்விதம் பழிப்பவர்களுக்கு அடுத்த ஜன்மத்திலோ அல்லது மரணத்திற்குப் பின்னரோ தண்டனை கிடைக்கும் என்பதில்லை, இந்த ஜன்மத்திலேயே, பழித்துக் கூறிய அதே இடத்தில் தண்டனை உடனே கிடைக்கும் என்று ராமானுஜர் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
- இந்து சமயத்தில் புரையோடிக் கிடந்த சாதி வேறுபாட்டை ஒழிக்கப் பாடுபட்டவர் ராமானுஜர் "எந்தப் பிரிவினரும் வைணவத்தைத் தழுவலாம்.
- வைணவம் அனைவருக்கும் உரித்தானது" என்று அவர் அறிவித்தார்.
இந்து சமயத்தில் புரையோடிக் கிடந்த சாதி வேறுபாட்டை ஒழிக்கப் பாடுபட்டவர் ராமானுஜர் "எந்தப் பிரிவினரும் வைணவத்தைத் தழுவலாம்.
வைணவம் அனைவருக்கும் உரித்தானது" என்று அவர் அறிவித்தார்.
ஆசையுடையோர்க் கெல்லாம் வைணவ மகாமந்திரம் பொதுவானது. வைணவர் அனைவரும் ஒரே குலம் தொண்டர் குலம் என்றார் உடையவர்.
தாகம் தீர்த்தார்
சமயத் தொண்டில் மட்டுமின்றி சமூகத் தொண்டிலும் ராமானுஜர் ஆர்வம் காட்டினார்.
இவருடைய பொதுஜன சேவைக்கு மகுடம் இட்டாற்போலத் திகழ்வது மோதிதலாப் (முத்துக்குளம்) என்று அழைக்கப்படும் நீர்த்தேக்கம்.
தலைநகரின் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க இந்த நீர்த்தேக்கத்தை உருவாக்கம் திட்டத்தைத் தீட்டியவர் ராமானுஜர் தான்.
குன்றுகளுக்கு இடையே முக்கோண வடிவில் அமைந்த பள்ளத்தாக்கில் பாய்ந்து சென்ற சிற்றாற்றின் குறுக்கே ஓர் அணையைக் கட்டி நீர்நிலையை உருவாக்க வேண்டும் என்று விஷ்ணுவர்த்தன ராயனிடம் ராமானுஜர் எடுத்துரைத்தார்.
அதன்படியே நீர்த்தேக்கம் உருவானது.
இரண்டரை மைல் நீளமும் ஒரு மைல் அகலமும் கொண்ட இந்தப் பெரிய ஏரி இன்றும் கூட மக்களின் தாகத்தைத் தணித்து, ராமானுஜரின் புகழ் பாடுகிறது.
- ரவி வி சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஸ்ரீ ராமானுஜர்’.
- இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இயக்குனர் ரவி வி. சந்தர் இயக்கத்தில் ஹயக்ரீவா சினி ஆர்ட்ஸ் (Hyagreeva cine Arts) நிறுவனம் சார்பில் டி. கிருஷ்ணன் திரைக்கதை அமைத்து ராமானுஜராக நடித்து தயாரித்துள்ள படம் 'ஸ்ரீ ராமானுஜர்'. இந்த படத்தில் ராதாரவி, கோட்டா சீனிவாச ராவ், ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, ஸ்ரீமன், அனு கிருஷ்ணா, காயத்ரி, சோனியா சிங் வாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் குறித்து டி. கிருஷ்ணன் கூறியதாவது, இது முழுக்க முழுக்க ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு பற்றிய படம். மகான் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை எங்கள் நிறுவனத்தின் மூலம் திரைப்படமாக எடுத்ததை பெருமையாக நினைக்கிறோம்.
ராமானுஜர் இந்து மதத்தில் புரட்சி செய்த மகான் மட்டுமல்ல இந்து தர்மத்தின் லெஜண்ட் ஆவார். சாதி வேறுபாடு அற்ற சமுதாயம் வேண்டும் என்றும், எல்லா மதத்தினருக்கும் நற்கதி என்ற உணர்வையும் மக்களிடையே உருவாக்கியவர். இந்த மாபெரும் மகானின் வாழ்க்கை வரலாற்றை இளையராஜா இசையோடு இணைத்து காவியமாக உருவாக்கியுள்ளோம்.
மேலும் கவிஞர் வாலியின் பாடல் வரிகள் சிறப்பாக இருக்கும். பாடல்கள் அனைத்தும் மனதில் நிற்கும். வரலாற்று படம் என்பதால் மிகுந்த சிரமப்பட்டு இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட இருக்கிறோம் என்று கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்