என் மலர்
நீங்கள் தேடியது "Sri Selva Siddhi Vinayagar Temple"
- விநாயக பெருமானுகுகு பிம்ப சுத்தி, அதிவாச கிரியைகள், சயனாதி வாசம் ,மதியம் 2மணிக்கு கரியுருவான அண்ணலுக்கு யந்திர பிரதிஷ்டை நடைபெற்றது.
- கும்பஸ்தாபனம், கணபதிக்கு கலாகர்ஷனகனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது.
வீரபாண்டி:
திருப்பூர் தெற்கு வட்டம் வீரபாண்டி கிராமம் ஏ. பி. நகர் கிழக்கில் ஸ்ரீ செல்வசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூர்த்திகளாக விளங்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்க்கை அம்மன், ஸ்ரீ மகாவிஷ்ணு ஆகிய சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நாளை 7-ந்தேதி(திங்கட்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி இன்று 6ந்தேதி காலை 7 மணி முதல் 9 மணிக்குள் அனுக்ஞை, விக்னேஷ்வர பூைஜ, தன பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. 9 மணிக்கு மூஷிகவாகனனுக்கு முளைப்பாரி எடுத்து உலா வருதல் , காலை 11 மணி முதல் 12 மணிக்குள் சுவாமி கணேசருக்கு கோபுர கலசம் நிறுவுதல், விநாயக பெருமானுகுகு பிம்ப சுத்தி, அதிவாச கிரியைகள், சயனாதி வாசம் ,மதியம் 2மணிக்கு கரியுருவான அண்ணலுக்கு யந்திர பிரதிஷ்டை நடைபெற்றது.
மாலை 4மணி முதல் விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம், வாஸ்து சாந்தி, ம்ருத் சங்கிரஹணம், முளைப்பாரிக்கு பாலிகாஸ்தாபனம், சோமகும்ப ஆவாஹனம், ரக்ஷாபந்தனம், காப்பு கட்டுதல், கும்பஸ்தாபனம், கணபதிக்கு கலாகர்ஷனகனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது.
மாலை 6மணி முதல் யாகசாலபிரவேசம், த்வஜ, த்வார, தோரண, கும்ப ஆராதனம், ஆனைமுகனுக்கு அக்னி பிரதிஷ்டை, பிள்ளையாருக்கு முதல் கால ஹோமம், மூலமந்த்ர,தத்வ,நியாச, ஹோமங்கள், திரவியா குதி,பூர்ணாஹூதி, தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை 7-ந்தேதி (திங்கட்கிழமை) காலை7 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம், த்வஜ, த்வார, தோரண, கும்ப ஆராதனம், நான்மறைகள் போற்றும் நாயகனுக்கு இரண்டாம் கால ஹோமம், பிராண பிரதிஷ்டா ஹோமம், நாடிசந்தானம், ஸ்பர்ஸாஹூதி, மகா பூர்ணா ஹூதி, க்ரஹப்ரீதி, யாத்ராதானம் நடக்கிறது.
காலை 9மணி முதல் ஸ்ரீசெல்வசித்தி விநாயகர் மூலவர், விமானம், ஸ்ரீதட்சிணா மூர்த்தி, ஸ்ரீமகா விஷ்ணு, ஸ்ரீ விஷ்ணு துர்க்கை, மூஷிகர், பலி பீடம் ஆகிய சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் அபிஷேகம், மகா தீபாராதனை, தசதரிசனம், சங்கடங்கள் தீர்க்கும் சங்கரன் புதல்வனுக்கு சதுர் அன்ன மகா நைவேத்யம்,கஜகர்ணனின் திருச்செவிகளுக்கு கற்கண்டு ,தமிழில் திருமறை விண்ணப்பம், மகா தீபாராதனை, தீர்த்தம், பிரசாதம் வழங்கப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10-30மணிக்கு மேல் அன்னதானம் நடைபெறும். யாகசாலை பூஜைகளை தொட்டம்பட்டி ஜெகநாத அய்யங்கார் மற்றும் குழுவினர் நடத்துகின்றனர்.