என் மலர்
நீங்கள் தேடியது "Sriram Krishnan"
- ஸ்ரீராம் கிருஷ்ணன் ஆண்ட்ரசன் ஹாரோவிட்ஸ் என்கிற நிறுவனத்தில் பொது பங்குதாரராக உள்ளார்.
- இந்த நிறுவனம் கிரிப்டோ மற்றும் வெப் ஸ்டார்ட்அப் முதலீடு சார்ந்து இயங்கி வருகிறது.
நியூயார்க் :
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை வாங்கியுள்ளார்.
அவர் டுவிட்டரில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். டுவிட்டர் நிறுவனம் தனது கைக்கு வந்த உடனே அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அக்ரவால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்ட 4 முக்கிய நிர்வாகிகளை அதிரடியாக பணிநீக்கம் செய்தார் எலான் மஸ்க். இவர்களில் பராக் அக்ரவால் இந்தியர் ஆவார்.
இந்த நிலையில் டுவிட்டரில் எலான் மஸ்குக்கு இந்திய தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் உதவி புரிந்து வருகிறார். அவர் சென்னையில் பிறந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்.
எலான் மஸ்குக்கு தான் உதவி வருவதை ஸ்ரீராம் கிருஷ்ணன் டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "டுவிட்டர் நிறுவனத்தில் தற்காலிகமாக எலான் மஸ்குக்கு உதவி வருகிறேன். என்னோடு இணைந்து வேறு சிலரும் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். இது மிகவும் முக்கியமான நிறுவனம். உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதும் கூட. மஸ்க், அதை சாத்தியம் செய்வார் என்றும் நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், இளங்கலை தொழில்நுட்பம் பயின்று பட்டம் பெற்றார். படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக அமெரிக்கா சென்ற ஸ்ரீராம் கிருஷ்ணன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். தொடர்ந்து அவர் பேஸ்புக், ஸ்னாப் சாட், டுவிட்டர் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் பல்வேறு விதமான முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
தற்போது அவர் ஆண்ட்ரசன் ஹாரோவிட்ஸ் என்கிற நிறுவனத்தில் பொது பங்குதாரராக உள்ளார். இந்த நிறுவனம் கிரிப்டோ மற்றும் வெப் ஸ்டார்ட்அப் முதலீடு சார்ந்து இயங்கி வருகிறது.
கிரிப்டோகரன்சி குறித்து தான் அறிந்ததை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து வரும் ஸ்ரீராம் கிருஷ்ணன் தனது மனைவி ஆர்த்தி ராமமூர்த்தியுடன் சேர்ந்து, 'தி குட் டைம் ஷோ' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் தொழில்நுட்பம் மற்றும் கலாசாரம் தொடர்பான கண்டுபிடிப்பாளர்களை அவர்கள் நேர்காணல் செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலமாகவே ஸ்ரீராம் கிருஷ்ணன் எலான் மஸ்குக்கு அறிமுகமானதாக கூறப்படுகிறது.
- இந்திய அமெரிக்க தொழிலதிபர் ஸ்ரீராம் கிருஷ்ணனை பரிந்துரை செய்துள்ளார்.
- ஏ.ஐ. தொழில்நுட்ப துறையின் கொள்கை ஆலோசகராக இருப்பார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று விரைவில் அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டொனால்டு டிரம்ப், செயற்கை நுண்ணறிவு துறைக்கான கொள்கை ஆலோசகர் பதவிக்கு இந்திய அமெரிக்க தொழிலதிபர் ஸ்ரீராம் கிருஷ்ணனை பரிந்துரை செய்துள்ளார்.
தொழில்நுட்பத் துறையை சேர்ந்தவரான ஸ்ரீராம் கிருஷ்ணன் டேவிட் சாக்ஸ் உடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார். இவர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் ஏ.ஐ. தொழில்நுட்ப துறையின் கொள்கை ஆலோசகராக இருப்பார்.
"ஸ்ரீராம் கிருஷ்ணன் ஏஐ-இல் தொடர்ந்து அமெரிக்கத் தலைமையை உறுதி செய்வதில் கவனம் செலுத்துவார். மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஜனாதிபதியின் ஆலோசகர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது உட்பட, ஏஐ கொள்கையை வடிவமைக்கவும் ஒருங்கிணைக்கவும் உதவுவார்" என்று டிரம்ப் கூறினார்.
முன்னதாக ஸ்ரீராம் கிருஷ்ணன் மைக்ரோசாப்ட், டுவிட்டர், யாஹூ, பேஸ்புக் மற்றும் ஸ்னாப் என பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். டிரம்ப் தலைமையிலான அரசாங்கத்தில் ஸ்ரீராம் கிருஷ்ணன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஆலோசகர்கள் குழுவில் இணைந்து பணியாற்ற இருக்கிறார்.
புதிய பொறுப்பு குறித்து பேசிய ஸ்ரீராம் கிருஷ்ணன், "ஏ.ஐ. துறையில் அமெரிக்காவை தொடர்ந்து முன்னிலைப்படுத்துவதை உறுதி செய்து, நாட்டிற்கு சேவையாற்ற இருப்பது பெருமையான உணர்வை கொடுக்கிறது," என்று தெரிவித்தார்.